![]() |
|
புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. (/showthread.php?tid=2106) |
புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. - pulukarponnaiah - 12-10-2005 வணக்கம் பிள்ளயள், எனக்குப் பாருங்கோ இந்தக் கணனி எல்லாம் தண்ணி பட்ட பாடு.சின்ன வயசிலேயே நான் இந்த மவுசால வித்தை காட்டினான்.பில் கேட்ஸ் நான் எழுதினதப்பாத்துத் தான் இந்த டொஸ் என்டுற சாமானயே எழுதினவர். இங்க கன பேர் எதோ எழுதிக் கிழிக்கினம் எண்டு கேள்விப் பட்டன்.எப்பன் எட்டிப் பாப்பம் எண்டு வந்திருக்கன். அந்தக் காலத்திலேயே நான் எழுதின காதல் கவிதைகளைப் படிச்சிட்டு கன பேர் எனக்கு லைனில நிண்டு அப்லிக்கேசன் குடுத்தவை. வேற இன்னும் கன கதை இருக்கு ,வாறன் ஒருக்கா பிலாவில ஏத்திட்டு வந்து மிச்சம் கதைக்கிறன்.
- வியாசன் - 12-10-2005 வாங்கோ பொன்னையா அண்ணை கணனி தண்ணிபட்டபாடு எண்டு சொல்லுறது பொய்தானே?(புளுகல்தானே?) சரி சரி களத்துக்கு வாங்கோ - Mathan - 12-10-2005 வணக்கம் யாழ் களம் உங்களை வரவேற்கின்றது - kuruvikal - 12-10-2005 வாங்கோ புளுகர் பொன்னையா... உங்கள் கூட்டாளிகள்...சின்னப்பு... சாத்திரி...பெரியப்பு...முகத்தார்..சங்கத்தார்..என்று ஒரு கூட்டமே இருக்கு இங்க..! வளமான புளுகளோடு புகழோடு விளங்க வருக வருக..இடது மவுஸால கிளிக் பண்ணி வாங்கோ..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sabi - 12-11-2005 வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பொன்னையா அப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வாங்கோ வாங்கோ - அருவி - 12-11-2005 வணக்கம் புளுகர் பொன்னையா யாழ்களம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது. - தூயா - 12-11-2005 வணக்கம் புளுகர் பொன்னையா. நலமா? தங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள் - தூயவன் - 12-11-2005 வணக்கம் புளுகர் பொன்னையா. இப்பவும் ஓசியில கள்ளு வாங்கிக் குடிக்கும் பழக்கம் இருக்கோனை :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 12-11-2005 நாசமா போச்சு அங்கைதான் உன்ரை புளுகு தாங்கேலாது எண்டு பாத்தால் இஞ்சை வேறை வந்திட்டாய் ஆக்கும் சரி....சரி எதுக்கும் எங்களுக்கு ஒரு கை கூடின மாதிரி இருக்கும் வா....வா.....வணக்கம் - RaMa - 12-11-2005 வணக்கம் புளுகர் பொன்னையா உங்கள் வரவு நல்வராவகட்டும். - pulukarponnaiah - 12-11-2005 வரவேற்ற எல்லாருக்கும் நன்றிகள், வியாசருக்கு என்னப்பறிச் சரியாத் தெரியாது போல,இந்த எலியாரை வச்சு நான் அந்தக் காலத்திலேயே ஊரில கனக்க விளயாட்டுக் கட்டினான்.இப்ப எங்க பாத்தாலும் எலியும் சில்லுமா ஒரே சில்லெடுப்பாக் கிடக்கு. தூயவன் என்னட்டை அண்டைக்கு 10 ரூபாவுக்கு வேண்டிக் குடிச்சுப் போட்டு ஓசியோ.பிறகு என்னத் தேடிக் கொண்டு வருவாய் தானே ,அந்தப் பெட்டைக்கு கடதாசி எழுதவேணும் எண்டு அப்ப பாத்துக் கொள்ளுறன். முகத்தான் என்ன நான் தான் உனக்கு ஒருமாதிரிப் புளுகி பொன்னம்மாவை கட்டி வச்சனான், மறந்திட்டியே. நான் புளுகி இருக்காட்டி உனக்கு கலியாணம் இந்த ஜென்மத்தில நடந்திருக்கேலாது.யாரை மன்னிச்சாலும் மன்னிப்பன் இந்த நன்றி மறந்தவங்களை மன்னிக்கேலாது கண்டியோ. - Selvamuthu - 12-11-2005 வணக்கம் புளுகர் அவர்களே! வாருங்கள். நீங்கள் கூறுவதெல்லாம் புளுகுதானே? சின்ன வயதிலே "இந்த" மவுஸ் எல்லாம் இருந்ததா? அப்போ "எந்த" மவுசால் வித்தை காட்டினீர்கள்? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - yarlpriya - 12-11-2005 வணக்கம் வாருங்கள். யாழ் களம் உங்களை வரவேற்கின்றது - pulukarponnaiah - 12-11-2005 என்ன செல்லமுத்து வாத்தி பாத்தியே உன்ர குணத்தைக் காட்டீட்டாய்...உந்தச் சின்னஞ் சிறுசுகளிட்டக் கேள்வி கேக்கிற மாதிரி என்னட்டக் கேக்கிறாய்.உந்த வயல் வெளி,போயிலப் பறணைகளுக்க,குசினியளுக்க எல்லாம் எலி பிடிச்சுத் திரிந்ததை மறந்திட்டாயே.சும்மா இங்க வந்து குளாய மாட்டினது தான் மிச்சம், நீ இன்னும் முன்னேறெல்லக் கண்டியோ. யாழ்ப்பிரியா என்ன சொல்லுறாய் பிள்ளை ,இன்னும் கொன்ச்சம் கிட்ட வந்து காதுக்க சொல்லு பிள்ளை.உந்த மெசின மாட்டாம எனக்கு காது கேக்கிறதும் குறஞ்சு போச்சுது. அந்தக் காலத்தில எண்டால் கிணத்தடியில கதச்சாலும் திண்ணயில படுத்திருகிற எனக்குக் கேக்கும். - Selvamuthu - 12-11-2005 ஓ, அந்த மவுசுகளை (சுண்டெலிகளை) சொல்லுகிறிர்களா? எல்லாவற்றையும் நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்களே! ஆனால் களத்திலே பல பிள்ளைகள் இருக்கிறார்கள். நாகரீகமான வார்த்தைகளைப் பாவித்தால் நாகரீகமாக இருக்கும். களத்திலே உள்ள கருத்துக்களை கண்களால் படித்துத்தான் பழக்கம் ஆனால் உங்களுக்கு அவை இடைக்கிடையே காதுகளிலும் கேட்கின்றது போலும். ஓ! பிளா இப்போதும் வாயிலேதான் இருக்கின்றதா? மன்னிக்கவும். தெளிவாக இருக்கும்போது ஒளவையாரின் "நீரளவே ஆகுமாம் நீராம்பல்..." என்ற பாடலை படியுங்கள்,அடிக்கடி நினைவுபடுத்துங்கள். - தூயவன் - 12-11-2005 அப்பு உன்னட்ட எனிமேல் கடுதாசி எழுதவாறதோ? :evil: நீ அண்டைக்கு குடிச்சுப்போட்டு எழுதிய கடுதாசியால கடைசியில நல்லாகப் பேசிப் பழகிகொண்டிருந்த பிள்ளையை செருப்பால அடிக்கிற அளவுக்கு மாத்தி விட்டியேனை. அந்தப் 10 ரூபா கூட முகத்தாரிடம் வாங்கித் தானே என்னட்ட தந்தனியாம். அந்த ஆள் இப்பவே பிள்ளையாரிட்ட 20ரூபாக்காக சண்டை பிடிச்சுக் கொண்டிருக்குது. முதல்ல 10 ரூபாவை வேறு யாரிட்டையாவது வாங்கிக் கொடுத்துடு. பிறகு நான் பொறுப்பில்லை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 12-11-2005 வாங்கோ புளுகர் பொன்னையா வரவேற்கிறோம் கூட்டாளியளைத்தேடி வந்திட்டியளோ? உங்கள் வரவு நல்வரவாகட்டும். தம்பி தூயவன் இப்படி எல்லாம் செய்யிறாரா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 12-11-2005 tamilini Wrote:வாங்கோ புளுகர் பொன்னையா வரவேற்கிறோம் கூட்டாளியளைத்தேடி வந்திட்டியளோ? உங்கள் வரவு நல்வரவாகட்டும்.இதுக்கு போய் வாயை பிளக்கின்றீர்களே! - அனிதா - 12-11-2005 வணக்கம் புளுகர் பொன்னையா வாங்க.. நல்லா புளுகுவீங்க போல தான் இருக்கு ... சரி நல்லா புளுகுங்கோ உங்க புளுகுகளை வாசிக்க ஆவலாய் இருக்கிறம்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - pulukarponnaiah - 12-11-2005 தூயவன் Wrote:அப்பு உது தான் சொல்லுறது இந்தக் காலத்துப் பெடியளோட கூடிக் குடிக்கக் கூடாது எண்டு.மனிசரப் பரிசுகெட வச்சுருவாங்கள். நான் யாழ்க் களத்தில பாத்து எழுதித் தந்த காதல் கவிதை அந்தப் பெடிச்சிதான் எழுதினது எண்டு எனக்கென்னண்டு தெரியும்.இங்க என்ன சொந்தப் பேரிலேயே எழுதுறாங்கள்.அதோட பெட்டை யாரோ பெடியனிண்ட பேரில தான் எழுதுதாம். எதோ செருப் போட போச்சுது எண்டு சந்தோசப் பட வேண்டிய விசயம். முகத்தான் 20 ரூபா தந்தது பொன்னம்மாவுக்குத் தெரியாமா , ஒட்டாப்பலத்தார் தந்த மருந்தெண்டு ஒரு போத்தல் கள்ளு வேண்டிக் கொண்டு வர.அதத் தானே விழுந்து ,விழுந்து குடிச்சுப் போட்டு இப்ப விண்ணாணக் கதை வேற. இவள் சரசு இனித் தேடப் போறாள் நான் போய்ட்டு வாறன். :wink:
|