![]() |
|
மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு (/showthread.php?tid=2080) |
மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு - Vaanampaadi - 12-11-2005 போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளிற்கு விதிக்கப்படும் மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு Written by Ellalan Monday, 12 December 2005 போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளு க்கு மரண தண்டனைகளை நிறைவேற்ற அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித் துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறான மரண தண்டனைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் நாளிற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1984ம் ஆண்டு 13ம் பிரிவிற்கமைய நச்சு ரக அபின் மற்றும் அது தொடர்புடைய மூலிகைகள் தொடர்புடைய திருத்தச் சட்டத்திற்கமைவாக, மொபீன் பொன்ற போதைப் பொருள் மூன்று கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, ஹரோயின் இரண்டு கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, கொக்கேயின் 2 கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிப்பதற்கான சட்டரீதியான அங்கிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு உள்ளது. தறபோது நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு தீவிரமாக பரவிவருவதனால் அதனை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மதத்தலைவர்கள், சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அமப்புக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அரசு தலைவர் இந்த நிலைப்பாட்டை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. சங்கதி |