Yarl Forum
முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள் (/showthread.php?tid=2079)



முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள் - Vaanampaadi - 12-11-2005

யாழில் போருக்கான தயார் படுத்தலில் இராணுவம் - முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள்
Written by Ellalan Monday, 12 December 2005


யாழ். குடா நாட்டை ஆக்கிரமித்து நிற்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் போருக்கு தம்மைத் தயார் படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். புதிய பாதுகாப்பு நிலைகளை அமைத்துவரும் படையினர், முன்னரங்க நிலைகளிற்கு கனரக ஆயுத தளபாடங்களையும் நகர்த்திவருகின்றனர்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட வடமராட்சிப் பகுதிகளில் படையினர் புதிய நிலைகளை அமைத்து வருவதுடன் காவலரண்களையும் பலப்படுத்திவருகின்றனர்.
நாகர்கோவில், முகமாலை, கிளாலி, எழுதுமட்டுவாள், பகுதிகளில் புதிதாக பதுங்கு அகழிகளையும் அமைத்து வருகின்றனர்.

பலாலி படைத்தளத்திலிருந்து கனரக ஆயுத தளபாடங்களும் முன்னரங்க பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றன. தமது ஆயுத தளபாட நகர்த்தல் பற்றி பற்றி படைத்தரப்பினர் கருத்து வெளியிடுகையில் தாங்கள் போரிற்குத் தயாராகவில்லை என்றும் தங்கள் மீது போர்; திணிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ளத்தயாராகவே ஆயுத தளபாடங்கள் போர் முனைகளிற்கு நகர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஷாங்கதி


- Thala - 12-11-2005

ம்ம்ம் அப்பிடியே வன்னிக்கு கொண்டு போய்க் குடுத்திருக்கலாம்... கொஞ்சத்தூரம்தானே....! எப்பிடியும் விட்டுட்டுப் போற ஆயுதம்தானே அதை எங்க வைச்சா என்ன...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

36 மைல் தூரம் தாக்கிற ஆட்லறியால கிளிநொச்சியைத் தாக்கிற யோசினை ஆக்கும்.. இல்லை இன்னும் ஒரு தீச்சுவாலைக்காக தாங்கிகளை நகர்த்தீனமாக்கும்......

அது சரி மல்றிபறல் ஆட்லறி எல்லாம் ஏற்கனவே மிருசுவில் வறணிப் பகுதீல இருக்கிற உயர்பாதுகாப்புவலய முகாமில இருக்குதுதானே...! தாங்கிகளும் இருக்கு எதுக்காக இந்த ஆயுத நகர்வு. இவ்வளவு ஆயுதங்களும் தங்களிட்ட இருக்கு எண்டுகாட்டினா ஒருவேளை புலிகள் தாக்குதலுக்கு வரமாட்டார்கள் எண்டாக்கும்......