Yarl Forum
புலிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்!! (/showthread.php?tid=204)



புலிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்!! - தூயவன் - 04-15-2006

<b>மன்னாரில் கிளைமோர் தாக்குதல் - போராளி ஒருவர் வீரச்சாவு - பொது மகனும் உயிரிழப்பு!!</b>

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மன்னார், தட்சணாமருதமடு பகுதியில் இன்று பகல் 1.30 மணியளவில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் போராளி ஒருவர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் பொது மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இசைவாணன் என்ற போராளியும் நகுலேஸ்வரன் என்ற பொது மகனுமே இந்தச் சம்ப வத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பாலம்பிட்டி வீதியால் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: சங்கதி