Yarl Forum
வன்னியன் படை காலக்கெடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வன்னியன் படை காலக்கெடு (/showthread.php?tid=2003)



வன்னியன் படை காலக்கெடு - Vaanampaadi - 12-16-2005

வெள்ளி 16-12-2005 18:26 மணி தமிழீழம் யாழ் நிருபர்

எதிர்வரும் 24ம் திகதிக்குள் இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை காலக்கெடு

யாழ் குடாநாட்டில் மக்கள் குடியிருப்புக்களை அண்டி இருக்கும் இராணுவ நிலைகள் மற்றும் முகாகம்களை விட்டு வெளியேறுமாறு வன்னியன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்பு இராணுவ முகாம்களை விட்டு வெளிவேண்டும் என வன்னியன் படை கால கெடு விதித்துள்ளது. அவகாசத்தை மீறும் பட்சத்தில் இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கு இராணுவத்தினரை தயாராகுமாறு மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24ம் திகதியுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்பட்டு 4 வருடம் பூர்த்தியாகிய நிலையில் தொடர்ந்து உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற போர்வையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதை அனுமதிக்க முடியாது என வன்னியன் படையினரால் பிரசுரிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Pathivu


- Sukumaran - 12-16-2005

கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்


- Nitharsan - 12-16-2005

வணக்கம் சுகுமாரன்! நீங்கள் பழசை து}சி தட்டி புதுசுக்குள் கலக்கிறீங்கள். போராட்டத்தின் உண்மை வடிவத்தை ஒரு முறை நீங்கள் அறிந்து அதன் பின்னர் கருத்துக்களை முன் வைத்தால் சிறப்பாயிருக்கும்


- narathar - 12-16-2005

வணக்கம் சுகுமாறன்,

முதலில் ஒன்றைத்தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.சிங்களப் பேரின வாததிற்கு எதிராகவே தமிழ்த் தேசிய எழிற்சி ஏற்பட்டது.30 வருட சண்டயின் பின் இன்று தமிழ் ஈழப் பிரதேசம்,தமிழ் ஈழ அரசு, அரச இயந்திரம்,தமி ஈழ இராணுவம், சர்வதேச அங்கீகாரம் என்பன எமக்கு கிடைதிருகின்றன.இவை ஆயிரக் கணக்கானவரின் உயிர்க் கொடையால்
எமக்குக் கிடைத்தவை.இந்த நேரத்தில் இவற்றை விட்டு விட,உங்களைப் போல் ,புலத்தில் சொகுசாக இருந்து கொண்டு அடிப்படை அரசியல் அறிவின்றி புலம்புவோர்க்காக, இந்தப் போராட்டதின் பயன்களை இழக்க ஈழத் தமிழர்கள் மடையர் அல்ல.

தமிழ் ஈழத்தில் மேலும் பல ஒட்டுப் படைகள் இருக்கின்றனவே அவற்றையும் ஏன் விட்டு வைத்தீர்கள்.(இபிடிபி,கருணா குழு இன்னும் பல).

நாம் போர் வெறியர் அல்ல.ஆயிதப் போராலேயே எமக்கு விடுவு, சுதந்திரம் என்றால் , நாம் போராடித் தான் ஆக வேணும். நாம் சிங்கள மக்களுக்கோ அல்லது சிங்கள மொழிக்கோ எதிரானவர்கள் அல்ல, சிங்கள பேரின வாத அடக்கு முறைக்கு எதிரானவர்கள்.

எல்லாம் தமிழ் ஈழதில் தான் போய் முடியும் , நீங்கள் அலட்டிக் கொள்ளாதீர்கள்.உங்கள் சொந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
தமிழ் ஈழ மக்கள் தமது விடுதலையை தாங்களாகவே வென்றெடுப் பார்கள்.


- Sukumaran - 12-16-2005

அண்ணா.. எனது கருத்து முற்றிலும் தற்கால யதார்த்த நிலையை மேற்கோள்காட்டியே வைக்கப்பட்டுள்ளது.. பழையதை தூசுதட்டி போருக்கு அறைகூவல் விடுவது உங்கள் செயல்..

மேலும் நடப்பவற்றுக்கே உரிமைகேரமுடியாத தற்காலத்து யதார்ததம் புரிந்துதான் எனது கருத்தும் எழுதப்பட்டுள்ளது..


- அகிலன் - 12-18-2005

Sukumaran Wrote:அண்ணா.. எனது கருத்து முற்றிலும் தற்கால யதார்த்த நிலையை மேற்கோள்காட்டியே வைக்கப்பட்டுள்ளது.. பழையதை தூசுதட்டி போருக்கு அறைகூவல் விடுவது உங்கள் செயல்..

மேலும் நடப்பவற்றுக்கே உரிமைகேரமுடியாத தற்காலத்து யதார்ததம் புரிந்துதான் எனது கருத்தும் எழுதப்பட்டுள்ளது..

அப்ப என்ன புத்தம் சரணம் கச்சாமி எண்டு பாடிக்கொண்டு போடுட பிச்சையை வாங்கிச்சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேணுமாக்கும்.

எங்கட சனத்தை ரோட்டில போட்டு மிதிப்பான். அதை வேடிக்கை பாத்து கொண்டு நாங்கள் மக்களுக்காக செவை செய்யத்தான் எல்லாம் மக்களின் நலனுக்கு எண்டு அறிக்கைவிட கையாலாகாதவையே . அதோட மக்களுக்காக இராணுவத்தோட சேந்து நிண்டு போராடுடவையே நாங்கள்.. அந்த மாற்றுக் கருத்து வியாதி எங்களுக்கு இன்னும் வரேல்ல..