Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


வணக்கம் வந்தனம் - Snegethy - 12-17-2005

நான் சினேகிதி வந்திருக்கிறேன்....


இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Snegethy - 12-17-2005

இப்பிடி கத்திக்கொண்டு வாறனே என்னை வரவேற்க யாரும் இல்லையா?ஒரு வாய் தேத்தண்ணி தரமாட்டிங்கிளே?


உண்மைய சொல்லிடுறன் - Snegethy - 12-17-2005

உண்மைய சொல்லிடுறன் :-)
மூன்று தரம் ஏதாவது எழுதினா தான் வீட்டுக்குள்ள வர விடுவேன்; எண்டு அடம்பிடிக்கிறினமே அதான் சும்மாமாமா...மற்றபடி நான் நல்ல பிள்ளைதான்.


- RaMa - 12-17-2005

வணக்கம் சினேகிதி ... வாருங்கள்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்...


- RaMa - 12-17-2005

தேத்தண்ணி இல்லை பால்தேத்தண்ணியே கிடைக்கும் கொஞ்சம் பொறுமையாய் இருங்க


- Snegethy - 12-17-2005

ஆஆ உடனே வரவேற்கிறா றமா? தேத்தண்ணி எங்க?


- தூயா - 12-17-2005

அவ்வளவு கஞ்சத்தனம் பண்ணுவமா? ஒரு கிளாஸ் லயே தாரலாம்...வாங்க...நலமா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

தூயா நல்ல பெயர்...தூயவன் கேட்டிருக்கிறன்.ஆமா லயா எண்டால் என்ன?


- Selvamuthu - 12-17-2005

வணக்கம், வாருங்கள்.
பகலிலே வந்திருந்தால் பசிக்குச் சாப்பாடுகூட தந்திருப்போம். இரவு இரண்டு மணிக்கு வந்தால் என்ன செய்வது? கொஞ்சம் பொறுத்திருங்கள்.


- Selvamuthu - 12-17-2005

வணக்கம்.
அங்கே கத்திக்கொண்டு வருகிறீர்கள், இங்கே அமைதியாக வருகிறீர்கள். இன்னும் எத்தனை இடஙகளில் வரப்போகிறீர்களோ?


- Snegethy - 12-17-2005

செல்வ முத்து திட்றுதாய் இருந்தா சோழியன் தெரியுமா அவரைத்; திட்டுங்க ஏன்னா அவர்தான் இந்த முன்று இடத்தில போய் கத்திற ஐடியா தந்தவர்.வந்த உடனே போட்டுக்குடுத்திட்டன் விரட்டீடாதிங்கப்பா.


- sOliyAn - 12-17-2005

வருக.. வருக.. கத்திக்கொண்டுதானே வாறீங்க.. நல்ல காலம் கத்தி கொண்டு வரலை.


- Snegethy - 12-17-2005

செல்வமுத்து சோழியன் என்ன சொல்றாரு எனக்கு புரியவேயில்லை.\\கத்திக்கொண்டுதானே வாறீங்க.. நல்ல காலம் கத்தி கொண்டு வரலை இரண்டு கத்திக்கும் என்ன வித்தியாசம்.\\


- vasisutha - 12-17-2005

வாங்கோ சினேகிதி.. வணக்கம்..
__________________________


- Snegethy - 12-17-2005

வணக்கம் வசிசுதா இதோ வந்திட்டன்.

எங்க பதிவு போட ரை பண்ணினாலும் மன்னிக்கணும் விசேட பதிவர்கள்தான் பதியலாம் என்று சொல்லினம் கொஞ்சம் என்ன என்று பாருங்க மொடரேற்றர்ஸ்.


- kavithan - 12-17-2005

வாங்க சினேகிதி .. நலமா... தேத்தணி குடிச்சியளா.. கொஞ்சம் ஆறாமர இருந்து குடியுங்கோ.. ஆக்கள் வந்து தான் திறந்து விடணும்.. என்ன நீங்கள் ஆடியில் வந்திருக்கிறீர்கள் பின்னர் இப்பான் வாறீர்கள் களத்துக்கு..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பேருக்கேற்ற மாதிரி அடக்கி வாசியுங்க அப்பதான் நம்புவாங்க நீங்கள் சினேகிதி தான் என்று :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 12-17-2005

கவிதன் சொல்லுறது சரிதான் சினேகிதி..
பிறகு எல்லாரும் உங்களை ஜன்னல் என்று
நினைத்து விடுவார்கள்.. 8)


அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? - Snegethy - 12-17-2005

இந்த யாழ்க் குடும்பத்தில் என்னையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற
நம்பிக்கையுடன் முதன்முதலாக நண்பி வீட்டில் நடந்த ஒரு நகைச்சுவையான
சம்பவத்தை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது நண்பியின் சகோதரி மகன் இளங்குமரனுக்கு மூன்று வயதாகவிருக்கும்
போது ஒரு நாள் ஒரு சத நாணயத்தை (Penny) விழுங்கி விட்டார்.ஏதோ ஒரு
வகையில் அந்த நாணயத்தை பேரனின் உடம்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்
என்று பழங்கள் எல்லாம் நறுக்கி கொடுத்தார் அம்மம்மா.
இளங்குமரன் ஒரு கவலையும் இல்லாமல் விளையாடினாலும் அம்மம்மாக்குப்
பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் றயளாசழழஅ செல்லுவதைப்
பார்த்துவிட்டு தானும் கூடவே சென்று குமரனிடம் தான் கடயளா பண்ணுவதாக
சொல்லி குமரனை அனுப்பிவிட்டு அம்மம்மா கழிவோடு pநnலெ வெளியேறி
விட்டதா என்று ஒரு சின்ன தடியால அலசிப்பார்க் கொண்டிருக்கும்போது
பின்னாலிருந்து
ஒரு கேள்வி குமரினடமிருந்து…

<b>"அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? "</b>

இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்று
கேட்க மறந்து விட்டேன்.

-சினேகிதி-


- Snegethy - 12-17-2005

ஐயோ வந்த உடனேயே அடக்கி வாசியுங்க என்று கவிதன் சொல்ற அளவுக்கா நான் கத்தியிருக்கிறன். ச ச ச


- vasisutha - 12-17-2005

மூக்கைப் பிடித்துக்கொண்டு சிரிக்கிறேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->