Yarl Forum
கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக (/showthread.php?tid=1931)



கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக - நர்மதா - 12-20-2005

கனேடியத் தேர்தல் குறித்து தமிழ் உணர்வாளர்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்!

" ரொரன்ரோவைத் தளமாகக்கொண்டு இயங்கும் இரண்டு சிங்கள மாதாந்தப் பத்திரிகையின் முக்கிய விளம்பரதாரர். .."
"ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களின் வழிநடத்தலில் ஆரம்பிக்கப்பட்ட Sri Lanka Business Council ல் Director பதவி வகித்து வருகிறார்..."

கடந்த மாதம் ஸ்ரீலங்காவில் முடிவடைந்த தேர்தலில் தமிழர்களால் வகுக்கப்பட்ட மதிநுட்பமான நடவடிக்கையின் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களை நாம் நன்கு அறியக்கூடியதாகவுள்ளது.

இதேபோல, எதிர்வரும் ஜனவரி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அல்லது நடவடிக்கைகள் எவ்வாறு அமையும்? கனடிய மண்ணில் வாழ்ந்துவரும் இரண்டு இலட்சத்திற்கு அதிகமான தமிழீழ மக்களின் வாக்குப்பலம் கனடிய அரசியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்? இவற்றை நாம் ஆராய்வது பொருத்தமானது.

கனேடிய அரசியலில் தமிழர்களின் செல்வாக்கினை அதிகரிக்க வேண்டுமாயின், எம்மவர்கள் சகல கட்சிகளிலும் அங்கத்தவராக இருக்க வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதொன்றாகும்.

எனினும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும், எதுக்கு ஆதரவு அளித்தாhல் எமது நோக்கம் நிறைவேறும் என்பதை துல்லியமாக கணிக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அமைப்புக்களுக்குள்ள முக்கிய கடமையாகும். இந்த வரலாற்றுப் பொறுப்பை எங்கள் அமைப்புக்கள் சரிவரச் செய்வார்கள் என நம்புகிறோம்!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள கனேடியத் தேர்தலில் தேசிய அரசியல் கட்சியான பழமைவாதக் கட்சியின் சார்பாகத் சிறீலங்காத் தமிழர் என்று சொல்லப்படுகின்ற ஒருவர் போட்டியிடுகின்றார்.

இவரது வெற்றியினை உறுதிப்படுத்தம் முகமாக பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழ் மக்களுக்குக் கனேடிய அரசியல் குறித்த நெழிவு சுழிவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வேட்பாளரின் பகுதியில் கணிசமான கனடியத் தமிழர்கள் வாழ்கின்றனர். எனவே இவர்களின் வாக்குகளைக் கவரும் முகமாகவும், ஒரு குறுகிய பார்வையுடனான அரசியல் ஆதாயத்திற்காகவும் எங்கள் அமைப்புக்களில் சிலர் இவரை ஆதரிப்பதற்கு முடிவுசெய்து, பிரச்சாரங்களை இவருக்காக வழங்கி வருகின்றனர்.

இவருக்கு வாக்களிப்பதற்கு முன்னர், இவர் யார்? எமது தமிழ்ச் சமூகத்திற்கு என்ன செய்தார்? இவ்வளவு காலமும் எங்கிருந்தார்? தமிழீழம் தொடர்பான இவரது நிலைப்பாடு என்ன? எம் தேசியத் தலைவனின் மீது இவர் கொண்டுள்ள கருத்து என்ன என்பதனையும் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்மவர்கள் எமது மக்களுக்கு தெரிவிப்பது முக்கியம்.

ஒருவேளை எங்கள் அமைப்புக்களினால் இவர் பற்றிய விபரங்கள் சேகரிக்க முடியாமல் போயிருந்தால், இந்த ஆய்வின்மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறீலங்காத் தமிழரான இவர் பெயர் வின்சென்ட் வீரசுந்தரம், ரொரன்ரோவில் சுவாரகா ரவல்ஸ் என்னும் நிலையத்தின் உரிமையாளரும், விமானச்சீட்டு முகவராகவும் உள்ளார்.

ரொரன்ரோவைத் தளமாகக்கொண்டு இயங்கும் இரண்டு சிங்கள மாதாந்தப் பத்திரிகையின் முக்கிய விளம்பரதாரர்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணை மற்றும் ஆதரவுடன் ரொரன்ரோ வாழ் சிங்கள இனவாத அமைப்பின் அரவணைப்பில், ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களின் வழிநடத்தலில ஆரம்பிக்கப்பட்ட Sri Lanka Business Council Director பதவி வகிகத்து வருகிறார்.

இந்த அமைப்புத் தொடர்பாக இணையத் தளத்தில் கார்திகை தாதம் 12 ஆம் திகதி வெளியான செய்திகளையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும்:

கனடாத் தமிழ் வர்த்தக சம்மேளனம் என்ற கனடியத் தமிழர்களின் அமைப்பைப் பிளவுபட வைத்து சிறிலங்காத் தூதரகத்தின் முழு அனுசரணையுடன் உருவாக்கப்பட்டதே இந்த கனடிய சிறிலங்கா வர்த்தக சம்மேளனம். இவர்கள் கடந்த காலத்தில் இலங்கை ஒரு நாடாளுமன்றக் குழுவுடன் விஐயம் செய்திருந்தனர்.


- நர்மதா - 12-20-2005

இது சூரியனில் இருந்து எடுத்தது


- vasanthan - 12-20-2005

புலிச்சின்னத்தை மாற்றுங்கள் நர்மதா