Yarl Forum
தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு (/showthread.php?tid=191)



தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு - I.V.Sasi - 04-16-2006

தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு

[ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
<img src='http://img218.imageshack.us/img218/7321/14lg2.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார்.

<img src='http://img148.imageshack.us/img148/7729/21sp.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார்.
<img src='http://img148.imageshack.us/img148/1109/30rx1.jpg' border='0' alt='user posted image'>





அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மாலையினை தமிழீழ காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் இயலரசன் அணிவித்தார்.

தமிழீழக் காவல்துறைக் கொடியினை காவல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் கானகன் ஏற்றினார்.
<img src='http://img218.imageshack.us/img218/3759/41mo.jpg' border='0' alt='user posted image'>





இதைத் தொடர்ந்து பயிற்சியை நிறைவு செய்த அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றுக் கொண்டார்.

தமிழீழக் காவல்துறையின் ஆய்வாளர்கள் கிருபாகரன், இமாக்கிறேர், விஜயகுமார் மற்றும் துணை ஆய்வாளர் கபிலன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

தமிழீழக் காவலல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

பயிற்சியின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் பங்குகொண்டு அதிக புள்ளிகளைப் பெற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

puthinam.com


- Mathuran - 04-16-2006

தகவலுக்கு நன்றிகள்