Yarl Forum
யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு: (/showthread.php?tid=1907)



யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு: - Vaanampaadi - 12-21-2005

யாழ். புங்குடுதீவில் பாரிய சுற்றிவளைப்பு: 12 பேர் கைது
[புதன்கிழமை, 21 டிசெம்பர் 2005, 16:15 ஈழம்] [யாழ். நிருபர்]
யாழ். புங்குடுதீவில் இன்று புதன்கிழமை காலை சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் 12 பேரை கைது செய்துள்ளனர்.


புங்குடுதீவு பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதிகளில் படையினர் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காலை 9 மணி முதல் 10 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் இந்த சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டு வீடுகளிலும், வீதிகளிலும் நின்றோரை படையினர் கைது செய்துள்ளனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த பத்மநாதன், ஜீவகுமார், கணேஸ், பவா, சிறீஸ்காந்தன், ராசா, ஜெயந்தன், குமார், பிரபாகரன், கோடீஸ்வரன், சிறீஸ்கந்தராசா, சிறிகாந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் யாழ். அரியாலை அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைந்துள்ள சிறிலங்காப்படை காவலரண் ஒன்றின் மீது இன்று காலை 10 மணியளவில் அடையாளம் தெரியாதோர் நடத்திய கைக் குண்டுத் தாக்குதலில் சிறிலங்காப்படை சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Puthinam