![]() |
|
யாழில் இராணுவத்தினர் மீது 3 தாக்குதல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழில் இராணுவத்தினர் மீது 3 தாக்குதல்கள் (/showthread.php?tid=1898) |
யாழில் இராணுவத்தினர் மீது 3 தாக்குதல்கள் - நர்மதா - 12-21-2005 யாழில் இராணுவத்தினர் மீது 3 தாக்குதல்கள்: ஒரு படை வீரர் கொல்லப்பட்டார்- 9 பேர் படுகாயம்!! யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது இன்று புதன்கிழமை மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் கோப்ரல் தர கீழ்நிலை இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இரு மேஜர்கள் உட்பட 9 படையினர் படுகாயமடைந்துள்ளனர். கச்சாய்-கிளாலி வீதியூடாக சென்ற சிறிலங்கா இராணுவ வாகனம் மீது இன்று மாலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுகள் வீசியும் தானியங்கி துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இரு மேஜர்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேஜர்களும் படை வீரர்களும் அருகாமையில் இருந்த தம்புத்தோட்டம் இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இராணுவ உலங்குவானூர்தி மூலம் பலாலி இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அரியாலை மற்றும் கல்வியங்காடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு குண்டுத்தாக்குதல்களில் 3 படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அரியாலை மாம்பலம் சந்தியில் மாலை 5.30 மணிக்கு நடாத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு படை வீரர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் மாலை 5.45 மணியளவில் யாழ்ப்பாணம்-பருத்துத்துறை வீதியில் அமைந்துள்ள கல்வியாங்காடு சந்தைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 படையினர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல்களையடுத்து யாழ்ப்பாணத்தில் சுற்றுக் காவல் நடவடிக்கைகளை சிறிலங்கா இராணுவத்தினர் இடைநிறுத்தியுள்ளனர். சாவகச்சேரியில் நேற்று குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் 2 படை வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன். பலாலி வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இரண்டு ஆர்.பி.ஜி ரக ரொக்கெட் லோஞ்சர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். புதினம் - Mathuran - 12-21-2005 தகவலை இணைத்தமைக்கு நன்றி நர்மதா34 - kabilan - 12-21-2005 இவற்றை எல்லாம் பார்க்கும் போது அண்ணன் திலீபன் சொன்ன வார்த்தையொன்றே ஞாபகம் வருகிறது. என்று மக்கள் புரட்சி வெடிக்கிறதோ அன்றே சுதத்திர தமிழீழம் பிரசவிக்கும் நாள் வெகுதூரமில்லை என்பதை உங்களுக்கு நான் கூறுகிறேன் என்றார் அவரின் அந்த தீர்க்க தரிசனம் இன்று நிறைவேறுகிறது. அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் எப்படி களிகூர்ந்திருப்பார். |