![]() |
|
84 வயதில் வேலை தேடி லண்டன் சென்ற போலந்து நாட்டுக்காரர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 84 வயதில் வேலை தேடி லண்டன் சென்ற போலந்து நாட்டுக்காரர் (/showthread.php?tid=1896) |
84 வயதில் வேலை தேடி லண்டன் சென்ற போலந்து நாட்டுக்காரர் - SUNDHAL - 12-21-2005 84 வயதில் வேலை தேடி லண்டன் சென்ற போலந்து நாட்டுக்காரர் போலந்து நாட்டைச்சேர்ந்தவர்லுட்விக்சோன். இவருக்கு மாதம் 9 ஆயிரத்து 250ரூபாய் பென்ஷனாக கிடைக்கிறது. இந்தப்பணத்தை வைத்து அவர் வசதியாக வாழமுடியவில்லை. போலந்தில் இனி எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்தஅவர் இங்கிலாந்து சென்றுவேலை பார்ப்பது என முடிவு எடுத்து அதற்காக மாதாந்திர பென்ஷனில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்து அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். வீட்டில் யாருக்கும் எதுவும் சொல்லாமல் அவர் புறப்பட்டுவிட்டார். மோட்டார் சைக்கிளில் சென்று பஸ்சை பிடித்து பிறகு ரெயிலை பிடித்து வார்சா சென்றார்.அங்கு இருந்து விமானம் ஏறி லண்டன்சென்றார். லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. விமானநிலையத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரிததுவிட்டு போலந்து தூதரகத்தில் ஒப்படைத்தனர். தூதரக அதிகாரிகள் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில லுட்விக்கை காணாமல் அவர் குடும்பத்தினர் தவித்தனர். அவர் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறியது கிடையாதே என்று பல இடங்களிலும் தேடினர். அவர் இங்கிலாந்து சென்று விட்டது என்பதை அறிந்து அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.அவருக்கு ஒருவார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது.அங்கு அவருக்கு தெரிந்தவர்களும் கிடையாது என்றும் கூறினர்.ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய லுட்விக் இங்கிலாந்தில் உள்ள மக்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இங்கு எதிர்காலமே கிடையாது. என்வாழ்நாளில் என்னிடம் ஆங்கிலேயர்களை போல யாரும் இந்த அளவு மரியாதை காட்டியது கிடையாது என்று கூறினார். Thanks:Thanhti......... - shanmuhi - 12-21-2005 Quote:போலந்து நாட்டைச்சேர்ந்தவர்லுட்விக்சோன். இவருக்கு மாதம் 9 ஆயிரத்து 250ரூபாய் பென்ஷனாக கிடைக்கிறது. இந்தப்பணத்தை வைத்து அவர் வசதியாக வாழமுடியவில்லை. போலந்தில் இனி எதிர்காலம் இல்லை என்ற முடிவுக்கு வந்தஅவர் இங்கிலாந்து சென்றுவேலை பார்ப்பது என முடிவு எடுத்து அதற்காக மாதாந்திர பென்ஷனில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்து அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பினார். வீட்டில் யாருக்கும் எதுவும் சொல்லாமல் அவர் புறப்பட்டுவிட்டார். ஆசை யாரை விட்டு வைக்கிறது. |