Yarl Forum
பதினெட்டில் ஒரு பாய்ச்சல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பதினெட்டில் ஒரு பாய்ச்சல் (/showthread.php?tid=1891)



பதினெட்டில் ஒரு பாய்ச்சல் - அருவி - 12-22-2005

பதினெட்டில் ஒரு பாய்ச்சல் - செய்திகள் 20.11.05 -ஏஜேஜி-

18 வயது , 51 வயதை வெல்வது சாத்தியந்தானோ? பொதுவாகப் பலவழிகளில் இது சாத்தியப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவின் மிச்சிக்கான் மாவட்டத்தில் உள்ள Hilsdale என்ற சிறிய பட்டணத்தின் நகரபிதாவாக 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் தெரிவாகி இருப்பதைப் பார்க்கும்போது ,இது சாத்தியம் போல்தான் தெரிகின்றது. இந்த இளைஞர் கடந்த வருடம், தனது பாடசாலைக் கவுன்ஸில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டவர். இவர் இப்பொழுது 51 வயதான இன்னொருவருடன் போட்டியிட்டு, 8200 குடிமக்களைக் கொண்ட இந்தச் சிறிய பட்டணத்தின் நகரபிதாவாகத்(Mayor) தெரிவாகி இருக்கின்றார். இந்த இளைஞர் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு, 700 டாலர் தொகையைச் செலவிட்டுள்ளார்.

இந்தக் கோடைகாலத்தில் அப்பிள்கள் விற்று கிடைத்த இலாபத் தொகையைத்தான் இவர் தன் பணிக்கு உபயோகித்து இருக்கின்றார். இந்தத் தெரிவு தனது நான்கு வருடப் படிப்பை இடைநிறுத்தப் போவதில்லை, தனது வகுப்புகள் முடிந்ததும், முக்கியமான கூட்டங்களில் நான் கலந்து கொள்ளப் போகின்றேன் என்கிறார் இவர். நவம்பர் 21ந் திகதி தொடக்கம், இந்தப் பதவித் தெரிவால், மாதாந்தம், 3600 டாலர்கள் இவருக்குக் கிடைக்க இருக்கின்றது. அறுபதை இருபது வெல்வது இப்படித்தான் போலும்.

நன்றி புதுமை.காம்