Yarl Forum
சரத் ராதிகா ஊடல்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சரத் ராதிகா ஊடல்? (/showthread.php?tid=1858)



சரத் ராதிகா ஊடல்? - Vaanampaadi - 12-23-2005

சரத் ராதிகா ஊடல்?



ரொம்ப நல்ல அண்டர்ஸ்டேண்டிங்கில் இருப்பதாக கூறப்படும் சரத்குமாருக்கும், ராதிகாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம். கசப்புக்குக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நமீதா தான் என்கிறார்கள்.

ராதிகாவின் ரேடன் டிவி தயாரிக்க சன் டிவியில் ஒளிபரப்பான கோடீஸ்வரன் கேம் ஷோவை ஹோஸ்ட் செய்ததன் மூலம் ராதிகாவை நெருங்கியவர் சரத்குமார்.

அதற்கு முன் இருவரும் சேர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும், கோடீஸ்வரன் மூலம் தான் ராதிகாவுடன் ரொம்பவே நெருங்கினார் சரத்.

காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பு வரை அவர் ஏகப்பட்ட சிக்கல்களில் இருந்தார். மனைவி சாயா மற்றும் மகள்களைப் பிரிந்தது, நக்மாவுடன் காதல் ஏற்பட்டு அது முறிந்தது என பல கசப்பான அனுபவங்கள் மற்றும் கடன் உள்ளிட்ட பொருளாதார சிக்கல் என ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்களில் சிக்கியிருந்தார் சரத்.



அவரை பொருளாதார ரீதியாக மீட்டு வெளியில் கொண்டு வந்தது கோடீஸ்வரன் நிகழ்ச்சிதான்.

இந் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் சரத்குமார் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. இதனால் சரத்தை ராதிகா, வெகுவாகவே ஈர்த்து விட்டார். அந்த ஈர்ப்பு காதலாக மாறி இருவரும் திருமண¬ம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்திற்கு முன் ராதிகாவுக்கு, லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் மூலம் ஒரு பெண் குழந்தை (ரேயான்) இருந்தது. சரத்தைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவர் மூலம் அழகான ஆண் குழந்தையையும் (ராகுல்) பெற்றெடுத்தார் ராதிகா.

திரைத் துறையினர் பொறாமைப்படும் அளவுக்கு ரொம்பவே அன்னியோன்மாக வாழ்ந்து வரும் இவர்களுக்குள் சமீப காலமாக மனக்கசப்பு ஏற்பட்டு அதிகரித்து வருகிறதாம். இதற்குக் காரணம் நமிதாவாம்.



கெறங்கடிக்கும் கிளாமருக்கு சொந்தக்காரியான நமீதா தான் சரத்ராதிகா தம்பதி இடையே கோடாறியாக வந்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சரத்துடன் இணைந்து ஏய் படத்தில் படு கிளாமராக நடித்த நமீதா, முழுப் படத்தில் காட்டும் கவர்ச்சியை விட இரண்டு மடங்கு அதிகமாக ஒரே பாட்டில் காட்டி சரத்தையும், ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்தார்.

அதைத் தொடர்ந்து சாணக்யாவிலும் நமிதாவை புக் செய்ய வைத்தார் சரத். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே கரண்ட் பாஸ் ஆகி கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதாம்.

இதனால் ராதிகா ரொம்பவே அப்செட்.

இந் நிலையில் சரத்தின் உதவியாளராக இருந்த ஒரு மாஜி நடிகை மீது ராதிகாவுக்கு சந்தேகம் வரவே அவரை தனது கணவரிடம் இருந்து பிரித்து சமீபத்தில் விரட்டியடித்தாராம். ஆனாலும் சரத்அந்தப் பெண் இடையிலான நட்பு தொடர்கிறதாம்.



இந்த மேட்டர்களால் சரத், ராதிகாவுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பூசலாக மாறியுள்ளதாம்.

இருப்பினும் இருவரும் பிரியும் வாய்ப்பு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இருவருமே புத்திசாலிகள். இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டுமோ அப்படித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது, ராதிகாவுடன் சேர்ந்த பிறகுதான் சரத்துக்கு திரையுலகிலும், திமுக வட்டாரத்திலும், பொது வாழ்க்கையிலும் நல்ல இமேஜ் கிடைத்தது. ராதிகாவும், சரத்துடன் இணைந்த பிறகுதான் தனது தொழிலில் உச்சத்தை எட்டினார். அவரது ரேடான் நிறுவன¬ம் பிரமித்தக்க வளர்ச்சியைக் கண்டது.

எனவே இருவரும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து தங்களது கேரியரையும் வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

பிரச்சனை தீர்ந்தால் சரி..


Thatstamil


- ஊமை - 12-23-2005

இது என்ன புதிய விடயம்...... இருவரும் விபச்சாரிகள் தானே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இதற்காக ஏன் வானம்பாடி உங்கள் பொழுதை வீணாக்குகிறீர்கள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> காய் மக்காள் கவ் ஆர் யூ ?


- sinnappu - 12-23-2005

ஓய் ஊமை கவ் ஆர் யு மான் ?? ஆர் யு ஓல் ரைட்
ஓய் எங்கையப்பா போனனீர்
நீரும் உவன் குறும்பனும் இல்லாமல் களம் வெறிச்சோடிப்போச்சு
Cry Cry Cry Cry Cry Cry Cry

ஓய் பாடிக்கு வேற வேலையில்லை உப்பிடித்தான் சும்மா உளறுவார்
கனக்கில எடுக்காதையும்
ஓய் உமக்குத்தானே மருத்துவம் தெரியும்
நம்மட பாடிக்கு பேதி லெவலில ஒரு மருந்தை கடாசும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- ஊமை - 12-23-2005

நான் புரட்டாதி மாதம் முதல் மார்கழி வரையில் யாழ்ப்பாணத்தில் இந்தேன்.


- MUGATHTHAR - 12-24-2005

தம்பி ஊமை எப்பிடி சுகங்கள் சுன்னாகத்து புதினங்களை கொஞ்சம் எடுத்து விடுமன்.......... சினிமாக்கைதான் வாறீர்.........