Yarl Forum
யாழ்ப்பாணத்தில் - வயர்களுடன் இராணுவம் விழிபிதுங்கும் மக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: யாழ்ப்பாணத்தில் - வயர்களுடன் இராணுவம் விழிபிதுங்கும் மக்கள் (/showthread.php?tid=1854)



யாழ்ப்பாணத்தில் - வயர்களுடன் இராணுவம் விழிபிதுங்கும் மக்கள் - Vaanampaadi - 12-23-2005

யாழ்ப்பாணத்தில் - வயர்களுடன் இராணுவம் - விழிபிதுங்கும் மக்கள்
Written by Pandara Vanniyan Friday, 23 December 2005

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொது மக்கள் பரவலாக இராணுவத்தினரின் கொடூரமானதும் கண்மூடித்தனமானதுமான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இன்று காலையில் யாழ் செயலகத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரின் வீட்டு உதவியாளர் நல்லூர் பிரதேச செயலக வாகனச் சாரதி க. அருட்செல்வன் அலுவலக ஊழியர் க.மய+ரன் உட்பட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் மற்றும் கல்வியங்காட்டுச் சந்தைக்கும் இடையில் வைத்து இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதே நேரம் இன்று காலைமுதல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூhரி மற்றும் தென்மராட்சிப்பகுதியிலும் இராணுவத்தினர் தாக்கியுள்ளார்கள் இராணுவத்தின் இத்தகைய செயற்பாடுகள் காரணமாக யாழ் குடாநாட்டில் பரவலாக பெரும் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது குறிப்பாக அனைத்து இராணுவத்தினரும் தமது கைகளில் துப்பாக்கிகள் ஏந்தியுள்ளதுடன் மேலதிகமாக சையிக்கிள் செயின் பொல்லுகள் வயர்கள் ஆகியனவும் தாங்கி நிற்கின்றார்கள்.


சங்கதி