Yarl Forum
அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுரங்கள்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50)
+--- Thread: அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுரங்கள்.... (/showthread.php?tid=1828)



அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொடுரங்கள்.... - Danklas - 12-24-2005

சிறுவர்களை படையில் சேர்க்காதே, சிறுவர்களுக்கு பலவந்தமாக பயிற்சிகள் வழங்காதே, சிறுவர்களை துன்புறுத்தாதே என தமிழிர்களின் அரசாங்கத்தை கண்டிக்கும், கண்டித்து அறிக்கை விடும் அமெரிக்கா வல்லாதிக்கம், ஈராக்கில் செய்யும் கொடுரத்தை தட்டிக்கேக்க எவனுக்குமே துணிவு இல்லையா? என்ன கொடுரத்தை அமெரிக்கா நர பலி இராணுவம்செய்து கொண்டு இருக்கிறது ஈராக்கில்? :evil: :evil:

இதை பாருங்கள்.... http://www.aztlan.net/iraqichildrenhorror.htm

தன்னுடைய நாட்டில் 3000 பேரை கொன்றுவிட்டதாக கூறி ஈராக்கில் எத்தனை ஆயிரம் சிறுவர்கள், குழந்தைகள், மக்களை தினம் தினம் கொன்றழித்துக்கொண்டு இருக்கிறார்கள்? :evil: :evil:

ஈராக் மக்களுக்குள் ஒற்றுமை இல்லையா? ஈழத்திலே நடந்துகொண்டு இருப்பது போல இராணுவத்தின் மேல் தாக்குதலை மேற்கொண்டு பேய்களை விரட்டி அடிக்க துணிவு இல்லையா? :evil: :evil:


- MUGATHTHAR - 12-24-2005

ஈராக் மக்கள் இரு இனங்களாக பிரிந்திருப்பதால்தான் அமெரிக்கப்படைக்கு வசதியாகப் போய்விட்டது தான் செய்யும் அட்டுழியங்களுக்கு தனக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லீம் அமைப்பு மூலம் வெளியுலகத்துக்கு சொல்லுகிறது இதே முறையைத்தான் எங்கடை அரசாங்கத்துக்கும் சொல்லியிருக்கினம் போல இருக்கு பிரதேசவாதத்தை உருவாக்கி எங்களுக்கிடையே அடிபடி ஆனா அது புஸ்வாணமாகி போனதுதான் இலங்கையரசுக்கு அதிர்ச்சி


- Jude - 12-24-2005

MUGATHTHAR Wrote:ஈராக் மக்கள் இரு இனங்களாக பிரிந்திருப்பதால்தான் அமெரிக்கப்படைக்கு வசதியாகப் போய்விட்டது தான் செய்யும் அட்டுழியங்களுக்கு தனக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லீம் அமைப்பு மூலம் வெளியுலகத்துக்கு சொல்லுகிறது இதே முறையைத்தான் எங்கடை அரசாங்கத்துக்கும் சொல்லியிருக்கினம் போல இருக்கு பிரதேசவாதத்தை உருவாக்கி எங்களுக்கிடையே அடிபடி ஆனா அது புஸ்வாணமாகி போனதுதான் இலங்கையரசுக்கு அதிர்ச்சி

பிரித்தானியரும் இவ்வாறுதான் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தமிழர்களை கல்லூரிகளை கட்டி படிப்பித்து உயர்பதவிகளில் அமர்த்தி சிங்களவர்களை ஆளவைத்தார்கள். வெள்ளைக்காரன் போனதும் சிங்களவர்கள் "நாங்கள் பெரும்பான்மை நீங்கள் என்ன எங்களை ஆளுறது" என்று சிங்கள மொழி சட்டம் கொண்டுவந்தார்கள்.

பிறகு இந்தியன் விட்டானா? சிறிலங்கா சீனனோடும் அமெரிக்கனோடும் போகிறது என்று கண்டு, கள்ளக்கடத்தல் காரருக்கு ஆயுதம் கொடுத்து ரெலோவை உருவாக்கி "நீங்கள் அடியுங்கள், நாங்கள் வாறம்" என்று உருவேற்றி விட்டார்கள். சிங்களவனை கட்டுப்படுத்த தமிழனை இப்படித்தான் இந்தியன் பயன்படுத்தினான்.

ஈராக்கின் குர்திஷ் மக்கள் சதாம் குசைனால் இரசாயன குண்டு போட்டு அழிக்கப்பட்ட போது கண்டுகொள்ளாத ஈராக் மக்கள் சிங்கள மக்கள் போல தான்.

தமிழர் பிரதேசத்தது எல்லை கிராமங்களில் உள்ள சிங்கள மக்களிடம் கேட்டுப்பாருங்கள். இங்கே எழுத முடியாத இதே கதைகள் உங்களை எங்களவர்கள் பற்றி சிந்திக்கவும் வைக்கும்.