![]() |
|
என்ன செய்ய போகிறோம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்ன செய்ய போகிறோம்? (/showthread.php?tid=1819) |
என்ன செய்ய போகிறோம்? - Rasikai - 12-24-2005 <b>என்ன செய்ய போகிறோம்? ----------------------------------------- எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது! என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்.. கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் .. நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து.... நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்... சின்ன குழந்தை முத்தமாய்.. என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. என்றோ பிரிந்து வந்தாலும்.. இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்......... இன்றும் என் உயிர் பிசையும்..... வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்.. ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..! ஆயினும்.. நான் இரசித்த அழகுகள் எல்லாம் என்றும் அப்படியே இருக்க........ தான் மட்டும் இருந்து கொண்டு பூமி .. எம்மை... காலம் வந்தால் கை அசைத்து வழி அனுப்பி வைக்கும்!!! கட்டாயம் அது நடக்கும்!!! இருட்டில் தொலைத்த கறுப்பு மலரா வாழ்வு என்றெண்ணி ... கனக்கிறது ...நிகழ் காலம்..!! எதிர் காலம்.......... தன் ஒரு கரத்தினை தான் எங்களுக்காய் தரும்... ! மறு கரத்தை... தனக்கும் கடவுளுக்கும் இடையில் செய்த ஒப்பந்தம் போலவே ஒளிச்சு வைக்கும்!! வாழ்வு என்ற படகு கால கடலில் மூழ்கையில்... நீ நீட்டுகின்ற கையை .. தட்டி விட்டு.... அது தன் பாட்டில் நடை பயிலும்!!! பிறப்பு ..........ஆரம்பம்! இறப்பு... முடிவு!! வாழ்க்கை சிறு இடைவேளை!! பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் என்ன செய்ய போகிறோம்?? நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று... உயிர் இருக்கயிலேயே உணர்வு செத்து போவாமா? இல்லை..... விதியை பிடித்து வந்து...தூக்கில் ஏற்றி... வெற்றி குதிரையின் முதுகில் பயணம் செய்து... உன்னையும் என்னையும் தந்த உலகிற்கு... உருப்படியாய் ஏதும் செய்வோமா? பச்சை பாய் விரித்த எங்கள் வயல் நிலமும்... பால் நிலவொளி கொண்டு கழுவிய எம் வீட்டு முற்றமும்... எப்படி பறி போனதென்று எழுதி வைப்போமா? இனி வரும் சந்ததி கையிலதை ஏடாய் ஆக்கி கொடுப்போமா? எப்படி உன் பாட்டன் திரும்ப திரும்ப அடி வாங்கினான்... எப்படி அவனை அடித்தவனை நாங்கள் திருப்பி அடித்தோம்.. என்றும் மறக்காமல் சொல்வோமா? காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? இல்லை....கணணி யுகத்துடன் சேர்ந்து ஓடி.. நாமும் கொஞ்சம் வெல்வோமா? என்ன செய்ய போகிறோம்???</b> Re: என்ன செய்ய போகிறோம்? - தூயவன் - 12-24-2005 பின்னிப்புட்டிங்க ரசிகை. அது எப்படி கவிதை கொட்டுது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயா - 12-24-2005 நல்ல கவிதை ரசிகை. முக்கியமான சில விடயங்களை அலசி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் - Thala - 12-24-2005 ரசிகை கவிதை சரி.... நல்லா வேற இருக்கு... அது சரி யாரச்சொல்லுறீங்கள் எங்களையா இல்லை உங்களைமட்டுமா....??.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாங்க எப்பவும் உனர்வோடதான் இருக்கமாக்கும்... :evil: :evil: :evil: - sOliyAn - 12-24-2005 Quote:நடப்பது நடக்கட்டும்... நம் கையில் என்னவென்று... வாழ்த்துக்கள்! - Selvamuthu - 12-24-2005 யதார்த்தமான கவிதையை இன்றும் யாத்தார் இரசிகை பிறந்த மண்மேல் பாசம் பிரிந்து வந்ததால் சோகம் பிறந்த புூமி நிலைக்கும் பிறந்த உயிர்கள் மறையும் பொன்போன்ற காலம் மண்ணாகாமல் என்ன செய்யப்போகிறோம்? என்கிறார் நெஞ்சைத்தொடும் கவிவரிகளில் நியாயமான கேள்வி பாராட்டுக்கள். - RaMa - 12-25-2005 நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து.... நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்... சின்ன குழந்தை முத்தமாய்.. என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ரசிகை புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வேதனைகளில் இதுவும் ஒன்று.. வாழ்த்துக்கள். உங்கள் கவிதைகள் மிகவும் நிஐமாக வருகின்றது... தொடர்ந்து எழுதுங்கள் - Rasikai - 12-28-2005 உங்கள் எல்லோரினது வாழ்த்துக்கும் நன்றிகள் - Rasikai - 12-28-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->ரசிகை கவிதை சரி.... நல்லா வேற இருக்கு... அது சரி யாரச்சொல்லுறீங்கள் எங்களையா இல்லை உங்களைமட்டுமா....??.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நாங்க எப்பவும் உனர்வோடதான் இருக்கமாக்கும்... :evil: :evil: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் பொதுவா சொன்னன் அதுக்கு ஏன் நீங்கள் டென்ஸன் ஆகிறீங்கள்?>? :roll: :roll: Re: என்ன செய்ய போகிறோம்? - Rasikai - 12-28-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->பின்னிப்புட்டிங்க ரசிகை. அது எப்படி கவிதை கொட்டுது? :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அதெல்லாம் தொழில் இரகசியம் சொல்லுறதே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: என்ன செய்ய போகிறோம்? - Mathan - 12-28-2005 Rasikai Wrote:காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? காதல் செய்யும் நேரத்தில் காதல், அதற்காக காதலை மட்டும் பேசியே காலத்தை கொன்றுவிடாமல் நாம் அனைவரும் மற்ற விடயங்களிலும் சாதிப்போம். வாழ்த்துக்கள் ரசிகை. Re: என்ன செய்ய போகிறோம்? - KULAKADDAN - 12-29-2005 Rasikai Wrote:<b> அவனவன் விரும்பினத செய்திட்டு போறான், அதுக்கேன் நீங்க கவலைப்படுறீங்க ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: . காதல் வாழ்க்கைக்கு தேவை. அதுவே வாழ்க்கை ஆகிடாது. அது போல தனியே கணனியுகத்துடன் ஓடி ஓடி வென்றோமோ இல்லையோ இறுதியில் திரும்பி பார்க்கும் போது காதலுக்கான காலம் பறந்து போய் இருக்கும். தனியே தனிமரமாய் யோசிக்கும் போது அதுவரையான ஓட்டம் வீணோ என தொன்றலாம். இரண்டுமே வேண்டும் ரசிகை. Re: என்ன செய்ய போகிறோம்? - Vishnu - 12-29-2005 Mathan Wrote:Rasikai Wrote:காதல்...காதல்..என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? இதனால் மதன் என்ன சொல்லு வருகிறார் என்றால்... <b>காதல் காதல் என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? </b> ரசிகை கூறியது பிடிக்கவில்லை என்று சொல்கிறார். :wink: :wink: காதலில் நேரம் விரயமாவது உண்மை தான் ரசிகை. ஆனால் வாழ்க்கையின் இனிப்பு அதுதான். அட.. கவிதைல எவளவு இருக்கு.. அதை மட்டும் ஏன் எடுக்கிறிங்க என்று நினைக்கவேணாம். சும்மா.. :wink: Re: என்ன செய்ய போகிறோம்? - Rasikai - 01-01-2006 KULAKADDAN Wrote:அவனவன் விரும்பினத செய்திட்டு போறான், அதுக்கேன் நீங்க கவலைப்படுறீங்க ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: .காதல் வாழ்க்கைக்கு தேவை. அதுவே வாழ்க்கை ஆகிடாது. அது போல தனியே கணனியுகத்துடன் ஓடி ஓடி வென்றோமோ இல்லையோ இறுதியில் திரும்பி பார்க்கும் போது காதலுக்கான காலம் பறந்து போய் இருக்கும். தனியே தனிமரமாய் யோசிக்கும் போது அதுவரையான ஓட்டம் வீணோ என தொன்றலாம். இரண்டுமே வேண்டும் ரசிகை. அவனவன் விரும்பினதை செய்துட்டு போறது பிழை என்று எப்போ சொன்னன். காதலுக்கு நான் எதிரி இல்லை என்று முதல் ஒரு கவிதைல சொல்லி இருக்கன். :wink: ம்ம் குளம் நல்லா வாசியுங்க என் கவிதையை நீங்கள் சொன்னதை தானே நானும் சொன்னன். காதல் காதல் என்று பேசி காலத்தை கொல்வோமா என்றா சொன்னேன்?? காதல் காதல் என்று <b>மட்டும்</b> பேசி என்று தானே சொன்னன். அதே போல் கணனி யுகத்துடன் சேர்ந்து மட்டும் தான் ஓடுங்க என்று சொன்னனா? இல்லையே கணனி யுகத்துடன் சேர்ந்து ஓடுவமா என்றுதான் தான் அர்த்தம் கொண்டேன். மதன் சொன்னது போல் என் கவிதையின் கருத்தும். ஒரே விடயத்தில் மூழ்குவது எப்போதுமே நிறைவைத் தராது. அது காதல் ஆனாலும் சரி கணனி ஆனாலும் சரி. உங்கள் கருத்திலேயே அதற்கும் விடை இருக்கு நன்றி. :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: என்ன செய்ய போகிறோம்? - Rasikai - 01-01-2006 Vishnu Wrote:இதனால் மதன் என்ன சொல்லு வருகிறார் என்றால்... <b>காதல் காதல் என்று மட்டும் பேசி காலத்தை கொல்வோமா? </b> ரசிகை கூறியது பிடிக்கவில்லை என்று சொல்கிறார். :wink: :wink: குளத்துக்கு நான் சொன்ன பதிலையே வாசியுங்களன் விஷ்ணு :wink: காதல் கூடாது என்று நான் சொல்லவே இல்லை நம்புங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அதோட மட்டும் இருக்காதீங்க என்றுதான் சொன்னன். நீங்கள் கூட நிஜ வாழ்க்கையில் அப்படித்தான் யாருக்கும் அட்வைஸ் பண்ணுவீங்கள் என்றும் நினைக்குறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: :wink:
|