Yarl Forum
தொடரும் மகிந்தவின் சிந்தனைகள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தொடரும் மகிந்தவின் சிந்தனைகள்... (/showthread.php?tid=1796)



தொடரும் மகிந்தவின் சிந்தனைகள்... - Nellaiyan - 12-25-2005

சிங்கள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள இனவாதிகளின் வாக்குகளினால் வெற்றி மகிந்த ராஜபக்ஸவின் சிந்தனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தமிழர்களை நோக்கி எய்தப்பட தொடங்கியிருக்கின்றது.

கொழும்பில் கைதுகளில் தொடங்கிய மகிந்தவின் சிந்தனைகள்......

* வடக்கு/கிழக்கில் மாணவ/ஆசிரிய சமூகம் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.
* மீண்டும் மெல்ல மெல்லமாக தமிழ்ப்பிரதேசங்கள் மீது பொருளாதாரத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கப்படுகிறது.
* தமிழ்ப்பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.
* அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் பின் பயங்கரவாத முத்திரைகள் குத்தப்படுவதும் தொடக்கப்பட்டிருக்கின்றது.
* தமிழ்த் தேசிய விரோதக் கூலிகளும் சிங்கள இலங்கைப் புலனாய்வாளர்களாளும் செர்ந்து தமிழ்மக்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளார்கள்.
* .....
.......
* இவை எல்லாவற்றிற்றும் கிகரம் வைத்ததுபோல் சிங்கள பாராளூமன்றத்திலேயே அங்கத்தவர்களாயிருக்கும் உறுப்பினர்கள் கூட வேட்டையாடப்படத் தொடங்கியுள்ளார்கள்.

.......... இப்படியான தொடரும் மகிந்தவின் சிந்தனைக்கு சர்வதேசமே உன் பதில் என்ன?????????????????????


- Danklas - 12-25-2005

நேற்று படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் கொலையில் இந்தியா சம்மந்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது இந்தியாவின் பணிப்பின் பேரில் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து,

காரணம் 1 இதனை செய்தவர்கள் இந்தியாவின் விசுவாச கட்சிகள் ஈபிடிபி கறூனா கும்பல்,,

காரணம் 2 தமிழீழ தலைமையின் அண்மைக்கால செயற்பாடுகள் அதாவது அனைத்து சிறுபான்மை கட்சிகளையும் (தமிழ், முஸ்லீம்) ஒரணியில் ஒன்றுபட வைக்க எடுக்கப்பட்ட முயற்சி, இதனை தடுத்து நிறுத்த ஒரு புதிய தமிழர் தலைமைகளுக்கு எதிரான கட்சி ஒன்றை ஆப்பு இழுத்த சங்கரி தலைமையில் உருவாக்க இந்தியா அரும்பாடு பட்டுகொண்டு இருக்கிறது.

இந்தியா மீண்டும் மீண்டும் இலங்கைத்தமிழர்களுக்கு தூரோகம் இழைக்கிறது, ஈழத்தமிழரின் கடுங்கோபத்துக்கு இந்தியா ஆளாகி வருகிறது, தமிழரின் தலைமை இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்ட அவர்கள் உதாசீதப்படுத்துகிறார்கள்,

இந்தியாவுக்கு ஒன்று விளங்கவில்லை, அன்று ஈராக் படைகளின் அக்கிரமத்துக்கும் இன அழிப்பு நடவடிக்கைக்கும் எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குருதிஸ்த்தான் விடுதலை போராளிகளுக்கு கண்டனத்தையும், ஆத்திரத்தையும் வெளிவிட்டுக்கொண்டு இருந்த அமெரிக்க, இன்று என்ன செய்கிறது? சதாமை கைது செய்ய, ஈராக்கை வெகு சுலபமாக கைப்பற்ற காரணமாக அமெரிக்கு உதவிய குருதிஸ்தான் விடுதலைபோராளிகளுக்கு அமெரிக்காவில் ராஜ கம்பள மரியாதை குடுக்கப்பட்டிருக்கின்றது (அண்மையில் குருதிஸ் விடுதலை போராளிகளின் தலைவர் அமெரிக்கா சென்று ஜோர்ஜ் புஸ்ஸை சந்தித்தார்),,

தங்கள் சுய நலத்தை கருத்தில் கொண்டு எதையும் செய்யும் உலகில் இன்று தமிழர்களின் தலைமை நாளை அமெரிக்காவுக்கு ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கினால் போதும் ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபைகள் புலிகளை அங்கிகரிக்கும்,,, தமிழர்கள் அமெரிக்காவுக்கு ஒரு இடம் கொடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும்? இந்தியாவுக்கு சங்குதாண்டி,,,, :evil: :evil:


- MUGATHTHAR - 12-25-2005

இந்தியாவின் ஆதிக்கம் எமது அரசாங்கத்தில்; கூடுதலாக பிரதிபலிப்பது உண்மைதான் ஜனாதிபதி மகிந்தாவை நிருபமா சென் எந்த நேரமும் சந்திப்பதுக்கு அனுபதி வழங்கப்பட்டிருக்கிறதாம் ஒரு ஜனாதிபதியை இன்னேரு நாட்டு தூதுவர் இவ்வளவு சுதந்திரத்துடன் சந்திக்க அனுமதித்திருப்பது ஏதைக்காட்டுது அவர்களின் கட்டுப்பாட்டிலும் இந்தியாவின் ஆலோசனைகளுடனும்தான் எமது அரசாங்கம் நடக்கிறதென ஆனாபடியால் இப்படியான கொலைகளுக்கும் இந்தியாதான் தூண்டுகோலோ என ஈயப்படுவதில் தவறில்லை.......


- ஆறுமுகம் - 12-25-2005

பொதுவாய் ஜனாதிபதியை சந்திக்க நடை முறையில் பல வரைமுரைகள் இருந்தும் அது இந்தியதூரருக்கு தளர்த்தப் பட்டிருக்கிரது.

போனாதடைவை நோர்வே தூதர் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்திக்க காத்திருந்த நேர அலவு சொல்லும். இலங்கை ஜனாதிபதியை ஆட்டிவைப்பவர்கள் யார் எண்டு.


- cannon - 12-25-2005

ஆமாம்! நிச்சயமாக இன்று இலங்கையில் "ஆட்டுவிப்பவராக இந்திய வல்லாதிக்கமும்", "ஆடுபவர்களாக சிங்களமும், தமிழ்க்கூலிகளும்" தான் இருப்பதை இல்லையென்பதோ/மறைப்பதோ "ஒரு பிடி சோற்றினுள் பெரும் பூசனிக்காயை மறைப்பதற்கு" ஒப்பானதாகும். நடைபெறும் சம்பவங்களின் பின்னனி இந்திய வல்லாதிக்கத்தின் ஏவலாகவோ அல்லது அவர்களின் ஆசீர்வாதத்துடனோதான் நடைபெற்றது/நடைபெறுகிறது/நடைபெறப்போகிறது.

நடைபெற்ற கொலைகளை உற்று நோக்குவோமாயின் ... "நிமலராஜன், குமார் பொன்னம்பலம், நடேசன், தராகி சிவராம், ... ஜோசப் பரராஜசிங்கம்" எல்லோரும் பத்திரிகைத்துறையுடன் தொடர்பால் புலத்துக்கு செய்திகளை/சம்பவங்களை/உண்மைகளை எடுத்து வந்தவர்கள்! மிக திட்டமிட்ட முறையில் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டே இக்கொலைகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த் தேசியத்தினுடன் சர்வதேசம்/புலம் தொடர்புகளை துண்டிப்பதற்காக திட்டமிட்டு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படுகிறது.

"ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் படுகொலையானது நிச்சயமாக இந்தியாவினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது."


- kurukaalapoovan - 12-25-2005

இப்படியான அவதானிப்புக்களை சமாளிக்கும் counter balance image/impression உருவாக்கும் பேச்சுக்கள் தான் "இந்தியாவை கறிவேப்பிலை மாதிரி அளவோடு பாவிக்க வேண்டும் காரியம் முடிந்ததும் எடுத்து வீசிவிட வேண்டும்" என்ற திட்டமிட்ட பேச்சுக்களோ தெரியாது.

இல்லை உண்மையில் கடந்தமுறைபோல் இந்தியாவை கறிவேப்பிலை மாதிரி இன்னொரு முறை பாவிக்கலாம் என்று சிங்கள இனவாதம் பகற்கனவு காண்கிறாதா?


- Thala - 12-25-2005

இந்திய பூதம் எழுந்து விட்டது எண்டு கடந்தமுறை(சில மாதங்களின் முன்) ரிசியின் புலநாய்வு அரசியலில் சொல்லப்பட்ட விடயம்தான். இதை தேர்தலுக்கு முன் எல்லாரும் எதிர்பார்த்ததும்தான்.

இப்போ நீயூட்டனின் விதி என்ன செய்யப்போகிறது..? எண்டதுதான் இப்ப பிரச்சினையே... (அதுதான் தாக்கத்திற்க்கு மறுதாக்கம்)


- MUGATHTHAR - 12-25-2005

Thala Wrote:இப்போ நீயூட்டனின் விதி என்ன செய்யப்போகிறது..? எண்டதுதான் இப்ப பிரச்சினையே... (அதுதான் தாக்கத்திற்க்கு மறுதாக்கம்)


தம்பி தல அப்ப சங்கை ரெடிப்பண்ணச் சொல்லுறீர்.......

இங்கு எல்லாரும் இந்தியா என குறிப்பிட்டுக் கதைக்கும போது எமது தமிழ்நாட்டு உறவுகள் பிழையாக விளங்கப்பிடாது இந்திய மத்திய அரசின் கீழ்தனமான அரசியல் லாபத்துக்காக எம்மீது சிங்கள அரசு கொலை வெறியை தீர்ப்பதுக்கு துணை போவதைத்தான் குறிப்பிடுகிறோம் அவர்கள் இலங்கையில் அமைதியை உண்டாக்க பாடுபடுவதாக வெளியுலக்துக்கு காட்டுவது எம்மவர் பிணத்தின் மீது ஏறிநிண்டுதானா........என்னும் போது நெஞ்சு வலிக்கிறது.....


- vasisutha - 12-25-2005

நன்றி உங்கள் அரசியல் அலசல்களுக்கு..