Yarl Forum
ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை (/showthread.php?tid=1750)



ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை - நர்மதா - 12-27-2005

ஆசிய கடல்கோளைத் தொடர்ந்து உலகின் பல பிராந்தியங்களை தொடர்ந்து வஞ்சிக்கும் இயற்கை


இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் கடலுக்கடியில் கடந்த வருடம் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட ரிச்டர் 9 அளவிலான பாரிய பூகம்பமும் அதனால் உருவான கடல்கோள் அனர்த்தமும் (சுனாமி) காரணமாக தெற்காசிய நாடுகள் உட்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 2- 1ஃ2 இலட்சத்திற்கு இடைப்பட்ட மக்கள் பலியானதுடன் ஏராளமானோர் காணாமல் போயும் உடல் ஊனமுற்ற நிலைக்கும் தள்ளப்பட்டு அநாதைகளாகியுள்ளனர்.

முழு உலகையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கி சோகத்தில் ஆழ்த்திய இந்த பாரிய அனர்த்த நிகழ்விற்கு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது.

இயற்கையின் கோர விபத்துக்களுக்கு முகம்கொடுக்க மனிதர்கள் சக்தி மிக்கவர்கள் அல்லர் என்பதும் இயற்கைக்கு மாறாக நடப்பது பாரிய விபரீதங்களை உண்டுபண்ணும் என்றும் விஞ்ஞான முன்னேற்றம் மூலம் இயற்கையை வெல்ல முடியாது என்றும் உலகில் ஏற்படும் அழிவு நடவடிக்கைகளுக்கு நாமே பொறுப்பு எனவும் இந்த கோர சம்பவம் முழு உலகத்திற்கும் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளது.

இப்போதும் இயற்கை மாற்றங்களினால் பல்வேறு அனர்த்தங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகழ்காலத்தில் போல் எதிர்காலத்திலும் தெற்காசியா உட்பட உலகம் முழுவதும் பல பாரிய இயற்கை அழிவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமென பூகோளவியல் ஆய்வாளர்கள்இ விஞ்ஞானிகள் ஆகியோர் தமது ஆராய்ச்சி கணிப்பீடுகள் மூலம் எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் ஆராய்ச்சிகள் முழுவதினதும் கூற்றுகளின் படி இன்றோ நாளையோ அல்லது அடுத்த வருடத்திலோ 50 வருடங்கள் தள்ளியோ மீண்டும் கடல்கோள் அனர்த்தமொன்று நிகழும் வாய்ப்பும் பாரிய பூகம்ப அழிவுகள் இடம்பெறும் அவதான நிலைமையும் தென்படுவதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

இவ்வாறான செய்தித் தகவல்கள் மக்களை அச்சத்திற்குள்ளாக்கவோ அச்சுறுத்தவோ கூறுபவை அல்ல. இயற்கை அழிவுகளிலிருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகின்றவை.

உலக வரலாற்றில் 1755 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி (போர்த்துக்கல்) அத்லாந்திக் சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய கடல் அலைகள் ஐரோப்பாவின் லிஸ்மன் நகரத்தை தாக்கி அழித்துள்ளது. பூகோளவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதன்படி ரிச்டர் 8.7 அல்லது 9 அளவிலான கடலுக்கடியில் பூகம்பமொன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் 250 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ள இந்த அனர்த்தம் அந்த நாட்களின் மக்கள் தொகைக்கு அமைய ஒரு சில விநாடிகளில் 10 ஆயிரத்திற்கும் 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்டவர்கள் இதில் பலியாகியுள்ளதாக குறிப்புகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இது அச்சந்தர்ப்பத்தில் பாரிய மனித இழப்பாகவும் பெரும் அழிவு ஏற்பட்ட முதல் சம்பவமாகவும் பதிவாகியிருக்கிறது. ஸ்பானிய நாட்டுக்கும் வடஆபிரிக்காவிற்கும் இடையிலும் இந்த கடல் அலை அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். அன்றைய அந்தக் கடல் அலை பெல்ஜியம்இ பிரித்தானியாஇ பிரான்ஸ்இ அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தையும் தாக்கி இருந்தது. பாதுகாப்பு தேடி கட்டிடங்களுக்குள் அடைக்கலம் தேடிய பலர் அந்த கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சோகக் கதை மேலும் தெரிவிக்கிறது.

கடந்த வருடம் நாம் முகம் கொடுத்த கடல்கோள் அனர்த்தத்திற்கு ஒத்த கடல் அலை அனர்த்தமே அன்றும் நிகழ்ந்துள்ளது. கடல் நீர் வற்றி திடீரென பெருக்கெடுத்து கரையே தாண்டி சொற்ப நேரத்திற்குள் அழிவை ஏற்படுத்தி விட்டு அமைதி கொண்டுள்ளது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கடல்கோளினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக நாடுகள் அனைத்தினதும் மக்கள் இந்த அழிவிற்கு முகம் கொடுத்திருந்தனர்.

1963 ஆம் ஆண்டில் சிலி நாட்டிலும் கடல் பெருக்கெடுத்து கடல்கோள் அனர்த்தமொன்று ஏற்பட்டு பாரிய அழிவொன்று ஏற்பட்டுள்ளது.

1970 ஜனவரி 5 ஆம் திகதி சீனாவின் யூஷான் என்ற இடத்தில் ரிச்டர் 8.0 அளவிலான பூகம்பம் ஒன்று இடம்பெற்று அதில் 15இ621 பேர் பலியாகியுள்ளனர். 1974 மே 11 ஆம் திகதி ரிச்டர் 7.1 அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 10 ஆயிரம் பேரும்இ 1976 இல் டெக்ஷாஸில் 7.8 ரிச்டர் அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 42 ஆயிரம் பேரும் சொத்து சேதங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரண்டாம் தடவை டெக்ஷாஸ் பூகம்பத்தில் 3இ700 பேர் இறந்துள்ளனர்.

1994 டிசம்பர் 24 ஆம் திகதி பாகிஸ்தான் பட்டானில் ரிச்டர் 6.2 அளவில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 5இ300 பேரும்இ 1993 செப்டம்பர் 30 ஆம் திகதி மஹாராஸ்டிராவில் ரிச்டர் 6.4 அளவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 7இ601 பேரும்இ 1996 ஜனவரி 17 இல் ஜப்பான் கோபேயில் 7.2 அளவில் உருவான பூகம்பத்தில் 6இ424 பேர் பலியாகியும் 1999 செப்டெம்பர் 21 ஆம் திகதி தாய்வானில் இடம்பெற்ற ரிச்டர் 7.6 அளவு பூகம்பத்தில் 2இ400 பேரும்இ 2001 ஜனவரி 26 ஆம் திகதி குஜராத்தில் 9 ரிச்டர் அளவு பூகம்பத்தில் 20 ஆயிரம் பேரும்இ 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்திராவில் 9 ரிச்டர் அளவு கடல் பூகம்பத்தில் 2 இலட்சம் பேர் வரையிலும் பலியாகினர்.

2005 அக்டோபர் 2 ஆம் திகதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இச்சம்பவத்தின் போது ஆப்கான் இந்திய எல்லைகளும் பாதிக்கப்பட்டன.

வரலாற்றில் 2003 ஆம் ஆண்டு அதிகளவான இயற்கை அனர்த்தம் ஏற்பட்டுள்ள ஆண்டாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் 700 சம்பவங்கள் உலகம் முழுவதும் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் ஏற்பட்ட அழிவுகளைவிட 2004 டிசம்பர் 26 ஆம் திகதி பூகம்பம் இயற்கை அழிவு சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு சூறாவளி கரிபியன் மெக்ஸிகோ மற்றும் பிலா போன்ற பகுதிகளில் வில்மாசூறாவளி. அமெரிக்காவின் பாரிய இயற்கை அழிவு கத்தரீனா சூறாவளி மூலம் ஏற்பட்டது. ரீட்டா என்ற சூறாவளி அதனைத் தொடர்ந்தது. வெள்ளம் காரணமாக அழிவுகள் அதிகரித்துக் கொண்டு போயின.

இதற்கிடையில் கௌதமாலாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதேவேளைஇ போர்த்துக்கல்லிலும் சூறாவளி உருவாகி பாரிய இயற்கை அனர்த்தம் ஒன்றை உருவாக்கியது.

உலகில்இ முன்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் இப்போது ஆண்டு தோறும் சில சந்தர்ப்பங்களில் அடுத்த அடுத்த நாட்களிலும் இடம்பெற்று வருகின்றன.

இவற்றுக்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் பலவற்றை முன்வைத்து வரும் நிலையில் பூமியில் உருவாக்கப்பட்டுள்ள தகடுகள் அதிக உஷ்ணம் காரணமாக அதிக அசைவுகளை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஞ்ஞான முன்னேற்றமும் இராசாயன பாவனை அதிகரிப்பும் ஓசோன் படல ஓட்டைகளும் எரிபொருள் மூலம் உருவாகும் புகை மற்றும் காடு அழிப்பு போன்றவையே உலகில் ஏற்படும் இயற்கை அழிவுகளுக்கு வழி வகுத்துள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

புவி 12 தட்டுக்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 8 தகடுகள் அவ்வப்போது உரசிக் கொள்கிறது. இதனால் பொருத்துக்கள் காணப்படும் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் பூமி அதிர்வுகள் கடல் கொந்தளிப்புகள் உருவாகின்றன. எரி குழம்புகள் வெளியேறுகின்றன. தகடுகளின் அதிக நகர்வுகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பூமிக்கடியிலிருக்கும் தகடுகளின் அசைவுகள் மூலம் ஏற்படும் நில அதிர்வு பூகம்பங்கள் ரிச்டர் அளவில் மதிப்பிடப்படுகின்றன.

1.9 அளவு கடலுக்குள் மாத்திரம் தாக்கத்தை உண்டு பண்ணும்.

2.9 தொங்கும் பொருட்களை அசையச் செய்யும்

3.9 உழவு இயந்திரமொன்றில் பயணம் செய்யும்போது ஏற்படும் நடுக்கத்தை போன்ற தாக்கத்தை உண்டு பண்ணும்.

4.9 ஜன்னல்கள்இ கண்ணாடி பொருட்களை உடைக்கும்.

5.9 தளபாடங்கள் வீசி எறியப்படும் சுவர்களில் வெடிப்பு ஏற்படும்.

6.9 கட்டிடங்கள் சேதமாகும்.

7.9 அத்திவாரங்களுடன் கட்டிடங்கள் பிடுங்கி எடுக்கப்படும். நிலத்தில் வெடிப்பு உருவாகும்.

8.9 உறுதியான பாலங்கள் உடைந்து அழியும்

9 க்கும் மேல் எல்லாம் இல்லாமல் போகும்

நில நடுக்க அளவு மானிகளை ஜப்பான்இ அமெரிக்கா போன்ற நாடுகள் தம் வசம் வைத்துள்ளன. அந்த சாதனங்கள் ஆபத்தை முன்கூட்டியே அறிவித்து விடும். ஆபத்து எப்போது எவ்வாறு இடம்பெறும் என்பதனை கூற யாராலும் முடியாதுள்ளது. எமது விஞ்ஞான முன்னேற்றம் இன்னும் அந்த இடத்தை எட்டிப் பிடிக்கவில்லை.

இதனாலேயே நாம் அவ்வப்போது திடீர் அழிவுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். இன்றைய கண்டுபிடிப்புகளை நாம் புறக்கணித்து விட முடியாது. அதனாலேயே தான் இப்போது நாம் அழிவுகளை குறைத்துக் கொள்ள தயாராக இருந்து வருகின்றோம். எமது நாடுகள் போன்ற நாடுகளில் இவ்வாறான வசதிகள் இல்லாததே அழிவுகளுக்கு முகம் கொடுக்க சந்தர்ப்பத்தை உருவாக்கி வருகிறது.

இலங்கை கடற்பரப்பு ஆபத்து நிறைந்த இந்திய கடற் பரப்பின் நிலத் தகடுகளின் பொறுத்து அமைந்துள்ள பகுதிக்கு சமீபமாக இருக்கின்றதென்பதை நாம் மறுக்க முடியாது. எமக்கு நேரடி பாதிப்புகள் ஏற்படாத போதும் சுமாத்திரா நிகழ்வு போன்ற ஓர் சம்பவத்தின் போது நாம் பாதிப்புகளை எதிர்நோக்கலாம்.

எமக்கு இன்றுள்ள எதிர்வுகூறல் மிருகங்களின் திடீர் அசாதாரண நடவடிக்கைகள் மாத்திரமே. இதனை மனதில் வைத்து இயற்கை சவால்களை எதிர்நோக்க நாம் தயாராக வேண்டும்.

தினக்குரல்