Yarl Forum
2006-ஆண்டு ராசிபலன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: 2006-ஆண்டு ராசிபலன் (/showthread.php?tid=1718)

Pages: 1 2 3


2006-ஆண்டு ராசிபலன் - கீதா - 12-29-2005

2006-ஆண்டு ராசிபலன்: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும். சனி நான்காம் இடத்தில் இருப்பது அர்த்தாஷ்டமம் என்று சொல்லுவார்கள். அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளைத் தருவார். சனியின் பார்வை சாதகமாக அமையும். சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
இதில் 3,7-ம் இடத்துப் பார்வைகள் உங்களுக்கு நன்மை தரும் இடத்தில் விழுகின்றன. குரு பகவான் 7-ம் இடத்திலிருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். அவரால் நீங்கள் பல்வேறு உன்னத பலனை கண்டு கொண்டிருக்கிறீர்கள். குருவின் இத்தகைய பலன்கள் இந்த ஆண்டும் தொடரும். ஆனால் செப்டம்பர் 26-ந் தேதி குரு எட்டாம் இடமான விருச்சிகத்திற்குச் செல்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.

குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. குரு பார்க்க கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. ராகு தற்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இது சிறப்பான நிலையல்ல அவர் பொருள் விரயத்தை உருவாக்கலாம். ஆனால் கேது 6-ம் இடத்தில் இருந்து உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல ஆயத்தமாவார்.

பொருளாதார வளத்தைக் கொடுப்பார். செப்டம்பர் 22-ந் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்போது தற்போது நன்மை தந்து கொண்டிருக்கும் கேது 5-ம் இடத்திற்கு வந்து நன்மை தரமுடியாதவறாகிறார். உடல் நலத்தைப் பாதிக்கச் செய்வார். அதே நேரம் ராகு நன்மை தரும் இடமான 11-ம் வீட்டிற்கு அதாவது கும்பத்திற்கு மாறுகிறார். அதன் பின் அவர் பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். பொன்னையும் பொருளையும் அள்ளித் தருவார்.

குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்திற்கும் எந்த குறையும் இருக்காது. தம்பதியினரிடையே அன்பும் பாசமும் மேலோங்கும். குருவின் பலத்தால் திருமணம் போன்ற சுப நிகழச்சிகள் நடக்கும். நீண்ட நாட்கள் தடைபட்டு வந்தாலும் இப்போது அது கைகூடும். நல்ல வரனாக அமையும். குறிப்பாக செப்டம்பருக்குள் திருமணம் நிகழ வாய்ப்பு உண்டு. விருந்து விழா எனச் சென்று வருவீர்கள்.

உத்தியோகம்: சிறப்பான நிலையில் உத்தியோகம் பார்ப்பவர்கள் இருப்பர். நீங்கள் கடந்த காலத்தில் சந்தித்து வந்த பிரச்சினைகள் மறையும். எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்கப் பெறலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கும், ஏதோ காரணத்தால் தொழிலை இழந்து தவிப்பவர்களுக்கும் தொழில் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். வருமானமும் கூடும்.

வியாபாரம்: தொடர்ந்து சீராக இருக்கும். சனி 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் அலைச்சலும் பளுவும் அதிகரிக்கலாம். கேதுவின் பலத்தால் பணப்புழக்கம் ஏற்படும். குருவின் பலம் இருப்பதால் பின் தங்கிய நிலைக்குப் போகமாட்டீர்கள். செப்டம்பருக்கு பிறகு ராகு உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார். அதன் பிறகு புதிய தொழில் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். லாபம் அதிகரிக்கும். ஆனால் கேதுவால் எதிரிகள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்: கலைஞர்கள் நல்ல நிலையில் இருப்பர். அரசிடமிருந்து விருது பாராட்டு போன்றவைக் கிடைக்கும். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் திறமைக்கேற்ற பெயர் கிடைப்பது அரிது. போட்டிகள் அதிகம் ஏற்படலாம்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் நல்ல முன்னேற்றம் காணலாம். நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஆண்டின் இறுதித் தேர்வில் இந்த ராசிக்காரர்கள் பலர் நல்ல கவுரவத்தோடு வெற்றி காண்பர். செப்டம்பருக்குப் பிறகு படிப்பில் சற்று தொய்வு ஏற்படலாம். அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியதிருக்கும். அதற்காக உங்கள் நிலை மோசமாகிவிடும் என்று நினைத்து விட வேண்டாம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்.

விவசாயம்: அதிக உழைப்பு அதற்கேற்ற வருவாய் என்ற நிலைதான் உங்களுக்கு. நெல், கேழ்வரகு, மஞ்சள் போன்றவையும் சிறப்பான விளைச்சலைக் கொடுக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். கூலி வேலை செய்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தைக் காண்பர்.

பெண்கள்: குடும்பத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்வார்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்புக் கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறப்படையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆனால் செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் வகையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் நல்ல மன மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

உடல் நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். செப்டம்பருக்குப் பிறகு கேது 5ம் இடத்திற்கு வருவதால் சிறுசிறு உபாதைகள் வரலாம். குழந்தைகளுக்கும் பாதிப்பு வரலாம். சிறுசிறு அறிகுறி வரும்போதே அதை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் வீண் செலவினைக் குறைக்கலாம்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் சனி சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங் கள். மேலும் செப்டம்பர் வரை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். பைரவர் வழிபாடும் உங்களுக்கு துணை நிற்கும். ஊனமுற்றவர்களுக்கும் கணவனை இழந்த மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். செப்டம்பருக்குப் பிறகு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை வழிபாடு செய்வது சிறப்பு. ஞானிகள், சந்நியாசிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள்.



ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே உங்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்கலாம். தற்போது சனி உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் நின்று உங்கள் முயற்சியில் அனுகூலத்தையும், தொழில் வளர்ச்சியைÛயும் கொடுப்பார். மேலும் 11-ம் இடமான மீனத்தில் ராகு இருப்பதால் அவர் மூலம் பொன், பொருள் போன்றவை கிடைக்கும். மேலும் கேது 5-ம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகள் வந்து உங்களை நிலை குலையச் செய்யலாம்.

இந்த ஆண்டு உங்களுக்கு பொதுவாக சிறப்பானதாக அமையும். மேலும் வல்லமை மிக்க சனி ஆண்டு முழுவதும் 3-ம் இடத்தில் நிலைத்து இருந்து நன்மை தர உள்ளார். மேலும் இன்னொரு முக்கிய கிரகமான ராகு ஆண்டின் பெரும்பகுதியில் 11-ம் இடத்தில் இருந்து நன்மை தருவார். அவரின் நற்பலன்கள் செப்டம்பர் மாதம் 22-ந் தேதிவரை தொடரும். அதன் பிறகு அவர் 10-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் செய்யும் தொழிலில் சிறிது பங்கத்தை உண்டு பண்ணுவார்.

உடல் உபாதைகளையும் கொடுப்பார். அதே நாளில் கேது 5-ம் இடத்திலிருந்து 4-ம் இடமான சிம்மத்திற்கு வருகிறார். கேதுவைப் பொருத்தவரை தற்போது உள்ள இடமும் 22-ந் தேதிக்குப் பிறகு போகும் இடமும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. சிலர் தீயோர் சேர்க்கையால் இடர் பாடுகளைச் சந்திக்கலாம். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதே செப்டம்பர் மாதம் 26-ந் தேதி குரு பெயர்ச்சி நிகழ்கிறது. அன்று குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிகத்திற்கு மாறுவது உங்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும். அதன் பின் மனக்குழப்பம், உடல் உபாதைகள் அனைத்தும் விடுபடும். சுபங்கள் பல நடக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் அப்போது சிறப்பாக அமையும். அதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும்.

குடும்பம்: மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் தொடர்ந்து கிடைக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கலாம். தம்பதியினரிடையே கனிவான போக்கு காணப்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். அவர்கள் வகையில் சற்று அக்கறைக் காட்ட வேண்டிய திருக்கும். செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் நிலையில் மேம்பாடு காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனால் செப்டம்பர் மாதம் 26ந் தேதிக்குப் பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.

உத்தியோகம்: வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் வேலையில் ஒரு திருப்தியில்லாத நிலை தோன்றும். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக பக்க பலமாக இருக்கமாட்டார்கள். ஆனால் செப்டம்பருக்கு மேல் உங்களுக்கு சாதகமான காற்று வீசும். தற்போது படும் இன்னல்களுக்குப் பலன்களைக் காணலாம். வேலையில் திருப்தி காண்பீர்கள். முன்னேற்றம் இருக்கும்.

வியாபாரம்: தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். எனவே நீங்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அல்லது தொழிலை விரிவு படுத்தலாம். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். எதிரிகள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. செப்டம்பருக்குப் பிறகு சிலர் தியோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். அதன் மூலம் பிரச்சினையில் சிக்கி பணத்தை விரயமாக்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் குரு சாதகமான இடத்திற்கு வருவதால் உங்களுக்கு உதவிகரம் நீட்ட பலர் வருவர். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அதே போல் எதிர்பார்த்த புகழ், பாராட்டுக் கிடைக்காமல் போகும். ஆனால் செப்டம்பர் 26ந் தேதிக்குப் பிறகு நிலைமை மாறி புதிய ஒப்பந்தங்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கும். வெளிநாடு சென்று வரலாம்.

மாணவர்கள்: தற்போது மந்த நிலையில் இருப்பர். அதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயிகள் நல்ல பல முன்னேற்றங்களைக் காண்பர். வருமானம் அதிகரித்த வண்ணம் இருக்கும். புதிய யுக்தியைப் பயன்படுத்தி நல்ல மகசூலைக் காணலாம். அக்கம்பக்கத்து தோட்டக்காரர்களிடம் நல்ல மகசூலைக் காணலாம். அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் மனக் கசப்பு வரலாம்.

பெண்கள்: குதூகலமாகக் காணப்படுவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கலாம். விருந்து, விழா எனச் சென்று வருவீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன் மதிப்பு பெறுவர். பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறைக் காட்டவும். ஆண்டின் பிற்பகுதியில் பிள்ளைகளால் பெருமை சேரும்.வழக்கு விவகாரங்களின் முடிவு சாதகமாக அமையலாம். நீண்ட நாட்களாகக் கைவிட்டுப் போன பொருள் திரும்பக் கிடைக்கலாம்.

உடல் நலம்: ஆண்டின் தொடக்கத்தில் கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம். ஆனால் செப்டம்பருக்குப் பின் உடல் நலம் தேறும். அதே நேரம் ராகுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் கேது திருப்தியற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு அர்சச்சனை செய்து வாருங்கள். ஞானிகள், சந்நியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். செப்டம்பர் மாதம் வரை வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கடலை படைத்து வணங்கி வாருங்கள். இதனால் நன்மைகள் அதிகரிக்கும்.



மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே உங்களை ஆட்டிப் படைத்த இன்னல்களும், இடர்பாடுகளும் படிப்படியாக மறையும். உங்கள் வாழ்க்கையில் வறண்ட காலம் முடிந்து வசந்த காலம் மலர அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். தேவையான பொருளாதார வளம் கிடைக்கும். எடுத்தக் காரியம் வெற்றிகரமாக முடிவடையும். செப்டம்பருக்கு பிறகு ராகுவால் உங்கள் முயற்சியில் தடைகள் தோன்றலாம். அந்தத் தடையை உடைத்தெறியும் வல்லமை பெறுவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செல்வாக்கு, மரியாதை சிறப்பாக இருக்கும். சிலர் ஆண்டின் பிற்பகுதியில் அதிக முயற்சி எடுத்து, புதிய சொத்து, வீடு வாங்கலாம். அதற்காக கடன்பட வேண்டிய நிலையும் வரலாம்.

குடும்பம்: வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிலவும். தம்பதியினரிடையே அன்பு, பாசம் மேலோங்கியிருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தடைபட்டு வந்த திருமணம் செப்டம்பர் மாதத்திற்குள் கைகூடும். சிறப்பான வரனாக அமையும். சனி 2-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். சிலர் வேலை விஷயமாகக் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரிடலாம். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய வாகனம் வாங்க கடன்பட நேரிடலாம்.

உத்தியோகம்: தற்போது குருவின் பலனால் சிறப்பான பலனைக் கண்டு கொண்டிருக்கிறீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வர். உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் இடமாற்றம் காண்பர். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். அதே நேரம் குரு பார்வையால் நற்பலனைக் காணலாம். குறிப்பாக உங்களுக்கு எதிராக யார் சதி வலை பின்னினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள்.

வியாபாராம்: பொருளாதார வளம் சீராக இருக்கும். உங்கள் முயற்சிகள் பல கைகூடாமல் போயிருக்கலாம். அந்த நிலை படிப்படியாக மறையும். வியாபாரம் வளர்முகமாக இருக்கும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு கேது சாதகமான இடத்திற்கு வந்த பிறகு பணப் புழக்கம் நன்றாக அதிகரிக்கும். அதன் பிறகு நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகலாம். புதிய தொழில் தொடங்க வேண்டாம். இருக்கும் தொழிலை சிறப்பாக நடத்தினாலே போதும். உங்கள் அறிவை பயன்படுத்தி ஏதாவது ஒரு தொழில் செய்தால் அது சிறப்படையும். பழைய கடன்கள் அடைபடும். கம்ப்ïட்டர், பத்திரிக்கை தொழில், தானிய வியாபாரம், மளிகைக் கடை போன்றவை செப்டம்பர் மாதத்திற்குள் சிறப்பான நிலையை அடையும். அதற்கு பிறகு அந்தத் தொழிலை அதிக கவனத்துடன் கவனிக்க வேண்டும்.

கலைஞர்கள்: கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி அடைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசிடமிருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கப் பெறலாம்.

மாணவர்கள்: சிறப்படைவர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய பாடங்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பைப் பெறுவர். சிலர் தகாதவர்களோடு சேர்ந்து படிப்பை பாழடிக்கலாம். அவர்கள் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு திருந்தி முன்னேற்றம் காண்பர். பொதுவாக அடுத்தக் கல்வி ஆண்டின் பிற்பகுதியில் சுமாரான நிலையே இருக்கும். அப்போது அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும்.

விவசாயிகள்: சீரான முன்னேற்றதைக் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும். கால்நடைகள் மூலம் நல்ல வளர்ச்சியைக் காணலாம். நெல், மஞ்சள், கோதுமை, சோளம், கேழ்வரகு, கொள்ளு, பழ வகைகள் போன்றவை மூலம் செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல மகசூலைப் பெறலாம். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியையும் பொருள் சேர்க்கையையும் காண்பீர்கள். சிறு தொழில் செய்பவர்கள் வளர்ச்சியைக் காணலாம்.

வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். முடிவுகள் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லை. ஆனால் முடிவு வர தாமதமாகலாம். புதிய வழக்கு எதிலும் சிக்கவேண்டாம்.

பெண்கள்: திருப்தியுடன் காணப்படுவர். குடும்ப முன்னேற்றத்திற்காக சிற்சில தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கும். அதாவது கணவன் மற்றும் குடும்பத் தாரிடம் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியதிருக்கும். ஆண்டின் பிற் பகுதியில் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

உடல் நலம்: சிறப்படையும். கேதுவால் இருந்து வந்த பிரச்சினை செப்டம்பருக்குப் பிறகு பூரண குணமடையும். மருத்துவச் செலவு குறையும்.



கடகம்
கடக ராசி அன்பர்களே உங்கள் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும். 9-ம் இடத்தில் உள்ள ராகுவால் எடுத்த காரியம் தோல்வி அடையும் என்று கூறப்பட்டு இருந்தாலும் கேது 3-ம் இடத்தில் இருப்பதால் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். எனவே எதையும் தெய்வத்தின் மீது பாரத்தை போட்டுத் தொடங்குங்கள். அது சிறப்பாக முடியும். செப்டம்பருக்குப் பிறகு ராகுவால் ஏற்பட்டு வந்த பின் தங்கிய நிலை சற்று குறையும். எதையும் தீவிர முயற்சியின் பேரில் கைக்குள் கொண்டு வரலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் இல்லாததை கற்பனை செய்து வீண் மனக்குழப்பத்தில் இருப்பர்.

குடும்பம்: குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் அநாவசிய செலவை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே அன்பு நீடிக்கும். எதையும் பொருமையுடன் கையால்வது சிறப்பு. ஆண்டின் பிற்பகுதியில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த அனு கூலமான போக்கு இருக்காது. அவர்கள் வகையில் சற்று விலகியே இருப்பது நல்லது.

சிலருக்கு தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். ஆனால் செப்டம்பருக்குப் பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். சிலர் அதிக சிரத்தை எடுத்து புதிய வீடு வாங்கலாம். அதன் மூலம் கடன் வாங்க நேரிடலாம். ஆண்டின் இறுதியில் சிலர் பொருட்களைக் களவு கொடுக்க வாய்ப்பு உண்டு. எனவே சற்றுக் கவனம் தேவை.

உத்தியோகம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனாலும் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகாது. உங்கள் வேலையை பிறரிடம் கொடுக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். செப்டம்பருக்குப் பிறகு உங்களுக்கு சாதகமான பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். அதன் காரணமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து செல்ல நேரிடலாம்.

வியாபாரிகள்: உழைப்புக்குத் தகுந்த முன்னேற்றத்தைக் காணலாம். சனியும் ராகுவும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிக அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் கேது சாதகமாக இருப்பதால் லாபத்தில் எந்த குறையும் இருக்காது. சிலர் தொழில் ரீதியாக தூரத்து ஊருக்குச் செல்ல வேண்டியதிருக்கும். எதிரிகள் வகையில் பிரச்சினை வரலாம். செப்டம்பருக்குப் பிறகு அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

மேலும் கேது 2-ம் இடத்திற்கு வந்த பின் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படாது. அரசு வகையில் எந்த உதவியும் கிடைப்பது அரிதாகும். மேலும் சிலர் சோதனைக்கு உள்ளாகலாம். இது ஏழரைச் சனிக்காலம் என்பதால் புதிய தொழில் தொடங்க வேண்டாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஆனால் இருக்கும் தொழிலை சிறப்பாகச் நடத்தி வளர்ச்சி காணலாம்.

கலைஞர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான நிலையில் இருந்தாலும் படிப்படியாக முன்னேற்றம் காண்பர். போதுமான வருமானம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு போன்றவை தட்டிப் பறிக்கப்படும் நிலை ஏற்படலாம். செப்டம்பருக்குப் பிறகு நல்ல பல ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வந்து சேரும். சிலர் வெளிநாடு செல்லும் பாக்கியம் பெறுவர்.

மாணவர்கள்: அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. பிற்போக்கான நிலையும் ஏற்படாது. மேல் படிப்பில் அதிக முயற்சி எடுத்தால்தான் விரும்பிய பாடம் கிடைக்கும். ஞானிகளின் ஆசிகளை பெற்று முன்னேற்றம் காணலாம். அடுத்த கல்வி ஆண்டின் பிற்பகுதியில் படிப்பில் இருந்து வரும் தொய்வு நிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். வக்கீல்கள், எழுத்தாளர்கள் ஆண்டின் பிற்பகுதியில் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

விவசாயிகள்: போதிய வருமானத்தைக் காணலாம். குறைந்த முதலீடு உள்ள பயிரை பயிர் செய்வது நல்லது. கால்நடை செல்வங்கள் சிறப்பு பெறும். புதிய நிலம் வாங்க சில காலம் பொருத்து இருக்க வேண்டியதிருக்கும். கூலி வேலை செய்பவர்கள் மனமகிழ்ச்சியோடு இருப்பர். தொழிலை பெருக்க சிலர் வழிவகை தெரியாமல் தவிப்பர். கூலி வேலை செய்பவர்களுக்கு தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும்.

வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். சிலருக்கு பாதகமான தீர்ப்பு வரலாம். அல்லது வழக்கு விசாரனை நீடித்துக் கொண்டே போகலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள்: பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய திருக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைப்பது அரிது. கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வரலாம். கணவரின் அன்பு கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும்.

உடல் நலன்: சீராக இருக்கும் மருத்துவச் செலவு குறையும். செப்டம்பருக்குப் பிறகு நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.



சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே கடந்த ஓராண்டில் ஒவ்வொரு கிரகமாக சாதகமற்ற இடத்திற்கு செல்வதை உணர்ந்திருப்பீர்கள். முதலில் சனி 12-ம் இடத்திற்கு வந்தார். இதனால் ஏழரை சனிக்காலம் தொடங்கியது. அதனையடுத்து 3-ம் இடத்திலிருந்து நற்பலனைத் தந்து கொண்டிருந்த கேது 2-ம் இடத்திற்கு வந்து நன்மை தர இயலாதவராகிவிட்டார்.

சில மாதத்திற்கு முன்பு நடந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவானும் சாதகமற்ற 3-ம் இடத்திற்கு சென்றுவிட்டார். தற்போதைய நிலையில் சனி உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டு முழுவதும் இந்த இடத்தில்தான் நிலைகொண்டிருப்பார். நிழல்கிரகமான கேது 2-ம் இடத்தில் உள்ளார். இதனால் அரசு வகையில் தொல்லைகள் வரலாம். குரு பகவான் 3-ல் இருப்பதால் உங்கள் முயற்சியில் தடைகளை உண்டாக்கலாம். மேலும் உங்கள் வேலையில் பிரச்சினைகள் உருவாக்கலாம். ராகு 8-ம் இடமான மீனத்திலிருந்து உறவினர்கள வகையில் தொல்லைகளை தரலாம்.

செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. அப்போது கேது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான நிலை அல்ல. ஆனால் அவரால் ஏற்பட்ட அரசு வகை தொல்லைகள் மறையும். அதே நேரம் பகைவர்கள் வகையில் தொல்லைகள் வரலாம். அதே 22-ந் தேதி ராகு 8-ம் இடத்திலிருந்து 7-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இதுவும் உகந்தமான இடமல்ல. ஆனால் 8-ம் இடமான அஷ்டமத்தில் இருந்தது போன்ற இன்னலைக் கொடுக்கமாட்டார்.

அவரால் ஏற்பட்ட உறவினர்கள் விரோதம் மறையும். அவர் உங்களைத் தீயோர் சேர்க்கைக்கு உள்ளாக்கலாம். செப்டம்பர் 26-ந் தேதி குருபகவான் 3-ம் இடத்திலிருந்து 4-ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். இந்த இடமும் சாதகமான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக இந்த ஆண்டின் பிற்பகுதியைவிட முற்பகுதி சிறப்பாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுங்கள். சிற்சில தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அதி முக்கியமான காரியத்தை செப்டம்பர் மாதத்திற்குள் செய்து முடித்து விடுவது நல்லது.

குடும்பம்: திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் ஆண்டின் முற்பகுதியில் நிறைவேறும். ஆனால் அதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் கைகூடாமல் தள்ளிப்போகலாம். கணவன்- மனைவியிடையே அன்பு நீடிக்கும். செப்டம்பர் மாதம் வரை உறவினர்கள் வகையில் பிரச்சினை வரலாம். அதன் பின் அவர்கள் வகையில் அனுகூலம் பிறக்கும். ஆனால் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்பு உண்டு. ஆண்டின் இறுதியில் சிலரது வீட்டில் திருட்டுச் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகம்: பொதுவாக இந்த ஆண்டு வேலைப்பளு நிறைந்ததாகவே இருக்கும். ஆனால் குருவின் பார்வையால் நீங்கள் செப்டம்பர் வரை முன்னேற்றமான பலனைக் காணலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். ஆண்டின் பிற்பகுதியில் வேலையில் அதிக கவனம் தேவை. கோரிக்கைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறாது. சிலர் தங்கள் வசம் இருந்த பொருப்புக்களை இழக்க நேரிடலாம். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் கூட தோன்றும். எந்த காரணத்தைக் கொண்டும் அந்த விபரீத முடிவை எடுக்க வேண்டாம்.

வியாபாரம்: உழைப்புக்குத் தகுந்த வருமானம் இருக்கும். அதே நேரம் வீண் விரையமும் ஏற்படும். எனவே பண விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். அரசு வகையில் இருந்து எந்தச் சலுகையும் கிடைக்காமல் போகலாம். சிலர் திடீர் சோதனைக்கு உள்ளாகலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்.

கலைஞர்கள்: எந்த இடர்பாடுகள் வந்தாலும் உங்கள் கலைத் திறனுக்கு எந்ந பங்கமும் வராது. செல்வாக்கு மங்காது. செப்டம்பருக்குள் அரசிடமிருந்து எதிர்பார்த்த புகழ் பாராட்டு போன்றவை கிடைக்கும்.

மாணவர்கள்: சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டும். குரு சாதகமாக இருப்பதால் உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்காமல் போகாது. அடுத்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்தால் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயம்: ஆண்டின் முற் பகுதியில் நல்ல மகசூல் பெறலாம். குறிப்பாக நெல், கோதுமை, சோளம், கேழ்வரகு, போன்ற பயிர்களில் நல்ல மகசூல் காணலாம். கால்நடைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம்.

பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பீர்கள். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குழந்தை வளர்ப்பில் பெருமை காண்பீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வேண்டியதிருக்கும்.

உடல்நலம்: சுமாராக இருக்கும். சிலர் மனச்சோர்வுடன் காணப்படுவர். நெருப்புத் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மன உளைச்சல் நீங்கி உடல் நலம் சிறப்படையும். சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் பாதிப்பு ஏற்படாது.



கன்னி
கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். கடந்த சில மாதங்களாக சனியின் கருணையால் உங்களுக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைத்து வரலாம். முக்கிய கிரகங்களில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் கெடுபலனைக் கொடுத்தாலும் சனி 11-ம் இடத்தில் இருந்தும் குரு 2-ம் இடத்தில் இருந்தும் நற்பலனை கொடுப்பதால் நீங்கள் எதையும் தாக்கு பிடிக்கும் பலத்தைப் பெறுவீர்கள்.

குரு பகவான் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி வரை துலாமில் இருந்த நன்மை தருவார். அவர் உங்களுக்கு வரும் பிரச்சினையை முறித்து எதிலும் வெற்றியைக் கொடுப்பார். உங்கள் ராசியில் இருந்த தடைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கும் கேது செப்டம்பர் மாதம் இடம் மாறி 12-ம் இடத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல.

ஆனால் அதன் பின் அவரால் ஏற்பட்ட தடைகள் விலகும். அதே நேரம் கேது உங்கள் உடலில் உபாதைகளைத் தரலாம். கேது இடம் மாறி ராகுவும் இடம் மாறி 7-ம் இடத்திலிருந்து ஆறாம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இது சிறப்பான அம்சம். அதன் பின் ராகுவால் ஏற்பட்டு வந்த குடும்ப பிரச்சினை தீரும்.

குடும்பம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு, மனை வாங்க யோகம் உண்டு. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்குள் நல்ல வரண் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு அப்பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் எவ்வளவுதான் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருந்தாலும் எதோ ஒரு கருத்து வேறுபாடு நிலவி வரும். அதற்கு ராகு 7-ம் இடத்தில் இருப்பதேக் காரணம். இதனால் கூட்டுக் குடும்பத்தில் விரிசல் கூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த பின்னடைவு அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு அடியோடு மறையும்.

உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான ஆண்டு இந்த ஆண்டு. வேலையில் திருப்தி காண்பீர்கள். வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குரு இடம் மாறி விடுவதால் இது போன்ற பலனை எதிர் பார்க்க முடியாது. குருவின் பாÖர்வைகள் அனைத்தும் சாதகமாக அமையும் என்பதால் வேலைக்கு எந்த பங்கமும் ஏற்படாது.

வியாபாரம்: லாபம் தொடர்ந்து அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பைப் பெறலாம். எதிரிகளின் சதியை முறியடிக்கலாம். புதிய தொழில் அனுகூலமாக இருக்கும். வேலையின்றி இருப்பவர்கள் புதிய தொழில் தொடங்கலாம். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்த செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு விடுபடுவர். சிறு தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரான வளத்தைக் காணலாம்.

கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் நிறைய கிடைக்கும். செப்டம்பருக்கு பின் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ், பாராட்டு போன்றவை தட்டிப் பறிக்கப்படலாம்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டு பிரகாசமாக இருக்கும். வெற்றி பிரகாசமாகத் தெரிகிறது. விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆகையால் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்க காலம் சிறப்பாக இருந்தாலும் பிற்பகுதி அதே போல் சிறப்பாக இருக்காது. மிகவும் சிர


- ப்ரியசகி - 12-29-2005

ம்ம்ம்..இந்த ராகு,கேது..குரு.அவை நம்மளை பார்க்கிறதும் காணும்...படுற பாடும் காணும்.. :evil: :evil: :evil:


- Rasikai - 12-29-2005

ப்ரியசகி Wrote:ம்ம்ம்..இந்த ராகு,கேது..குரு.அவை நம்மளை பார்க்கிறதும் காணும்...படுற பாடும் காணும்.. :evil: :evil: :evil:

என்ன ரொம்ப நொந்து போனீங்கள் போல கிடக்கு.


- RaMa - 12-29-2005

Rasikai Wrote:
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..இந்த ராகு,கேது..குரு.அவை நம்மளை பார்க்கிறதும் காணும்...படுற பாடும் காணும்.. :evil: :evil: :evil:

என்ன ரொம்ப நொந்து போனீங்கள் போல கிடக்கு.

இது நொந்து போனமாதிரி தெரியலை. நல்ல பார்வை கிடைச்சிருக்கு போலா இருக்கு..

கீதா தொகுத்து வழங்கியமைக்கு நன்றி....


- கீதா - 12-29-2005

Rasikai Wrote:
ப்ரியசகி Wrote:ம்ம்ம்..இந்த ராகு,கேது..குரு.அவை நம்மளை பார்க்கிறதும் காணும்...படுற பாடும் காணும்.. :evil: :evil: :evil:

என்ன ரொம்ப நொந்து போனீங்கள் போல கிடக்கு.



அதானே ப்ரியசகிஅக்காவுக்கு இப்போ வரவர றொம்பத்தான் ரென்சன் வருகுது ஏன் என்று புரியல Cry <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 12-29-2005

அப்படி எல்லாம் இல்லை....இதை முழுசாக வாசியுங்கள்...அப்போது என்னைப்போலத்தான் சொல்லத்தோணும்..ஏன் என்றால்..ஒருக்கால் குரு பார்ப்பதால் நன்மைகள் கிட்டுமாம்.. :roll:
பிறகு வேற யாரோ எங்கையோ இருப்பதால்.. கஷ்டங்கள் வருமாம்..அதுதான்..கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் :roll: :evil: சரி.. குறைச்சுக்கிறன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கீதா - 12-29-2005

ப்ரியசகி Wrote:அப்படி எல்லாம் இல்லை....இதை முழுசாக வாசியுங்கள்...அப்போது என்னைப்போலத்தான் சொல்லத்தோணும்..ஏன் என்றால்..ஒருக்கால் குரு பார்ப்பதால் நன்மைகள் கிட்டுமாம்.. :roll:
பிறகு வேற யாரோ எங்கையோ இருப்பதால்.. கஷ்டங்கள் வருமாம்..அதுதான்..கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் :roll: :evil: சரி.. குறைச்சுக்கிறன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


சரி சரி அக்கா எல்லாமே இப்போ நிரந்தரம் இல்லை தானே வரும் போகும் வரும் போகும் அப்படித்தான் எங்கள் ராசிப்பலனும் இல்லையா அக்கா :wink:


Re: 2006-ஆண்டு ராசிபலன் - vasisutha - 12-30-2005

Quote:கேது இடம் மாறி ராகுவும் இடம் மாறி 7-ம் இடத்திலிருந்து ஆறாம் இடமான கும்பத்திற்கு வருகிறார்

ஏன் மாறுறார்? அங்க வீட்டு வாடகை கூட்டிட்டினமா?
அல்லது பக்கத்து வீட்டுகாரர்களோட பிரச்சனையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasanthan - 12-30-2005

ஜோவ் சாத்திரி எங்கையாபோய்ட்டே :roll: ? இங்க உன்பாதவிக்கே கீதா வேட்டுவைச்சிட்டா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 12-31-2005

Quote:ரிஷபம்
குடும்பம்: மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். தம்பதியினரிடையே கனிவான போக்கு காணப்படும்

பிள்ளை இது மாத்திரம் நடந்திச்சு ............... முகத்தான் வீட்டிலை பெரிய விருந்தொண்டே உமக்கு தாறன் என்ன...........


- தூயா - 12-31-2005

என்ன தாத்த எப்ப பார்த்தாலும் புலம்புறிங்க??


- கந்தப்பு - 12-31-2005

முல்லைத்தீவிலை சுனாமி வந்தபோது எல்லாருக்கும் சனி,வியாழன் என்று ஒன்றாக இருந்ததோ?. அல்லது எல்லோரும் ஒரே நட்சத்திரம்,ராசியை உடையவர்களோ?
தம்பியவை சாத்திரம் என்று வீணாக்காசு செலவழிக்காமல் முயற்சி செய்யுங்கோ.


- தூயா - 12-31-2005

கந்தப்பு, நீங்கள் சாத்திரியின் தொழிலுஐ கேவலப்படுத்துவதாக அவர் போராட்டம் ஆரம்பிக்க போறார் போல <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- கீதா - 01-02-2006

MUGATHTHAR Wrote:
Quote:ரிஷபம்
குடும்பம்: மகிழ்ச்சியும் ஆனந்தமும் நீடிக்கும். தம்பதியினரிடையே கனிவான போக்கு காணப்படும்

பிள்ளை இது மாத்திரம் நடந்திச்சு ............... முகத்தான் வீட்டிலை பெரிய விருந்தொண்டே உமக்கு தாறன் என்ன...........

ஓகே ஓகே முகத்தார்ஐயா நீங்கள் இருந்து பாருங்கள் 2006ம் ஆண்டு இதில் இருக்கின்ற மாதிரி நடக்கும் ? அதுக்குப் பிறகு என்னை சீ என்னையும் நம்மட சின்னப்புவையும் Üப்பிடுங்கள் வாறோம் ஒகேயா ஐயா இன்னும் ஒன்று என்னைவிட சின்னப்புக்கு கொஞ்சம் வித்தியசமாக செய்துவையுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 01-02-2006

«ôÀʧ §Ãž¢ ¿îº¾¢Ãõ, Á£Éõ Ả ÀÄ¨É ´Õì¸ À¡òÐ ¦º¡øÖí§¸¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 01-02-2006

வினித் Wrote:«ôÀʧ §Ãž¢ ¿îº¾¢Ãõ, Á£Éõ Ả ÀÄ¨É ´Õì¸ À¡òÐ ¦º¡øÖí§¸¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஹீ ஹீ நீங்கள் மீன ராசியே :oops:


- வினித் - 01-02-2006

அப்படிதான் எனது ஜாதகத்தில் இருக்கு
ஏன் விள்ளங்கமான ராசியே? :roll: :roll:


- Rasikai - 01-02-2006

வினித் Wrote:அப்படிதான் எனது ஜாதகத்தில் இருக்கு
ஏன் விள்ளங்கமான ராசியே? :roll: :roll:

சீச்சீ அப்படி ஒன்றும் இல்லை. சும்மா கேட்டன் ஏன் என்றால் நானும் அந்த ராசி தான் :wink:


- கீதா - 01-02-2006

வினித் Wrote:அப்படிதான் எனது ஜாதகத்தில் இருக்கு
ஏன் விள்ளங்கமான ராசியே? :roll: :roll:


[size=18]அட வினித் அண்ணா நல்ல ராசியில் தான் பிறந்திருக்கிறார் (மீனம் ராசி இ;ந்த ஆண்டு மிகவும் நல்ல பலனைத்தரும் என்று சொல்கின்றேன் (முக்கியமாக குடும்பத்தில் சந்தோசம் உண்டு )


- suddykgirl - 01-02-2006

Rasikai Wrote:
வினித் Wrote:அப்படிதான் எனது ஜாதகத்தில் இருக்கு
ஏன் விள்ளங்கமான ராசியே? :roll: :roll:

சீச்சீ அப்படி ஒன்றும் இல்லை. சும்மா கேட்டன் ஏன் என்றால் நானும் அந்த ராசி தான் :wink:


அக்கா நீங்களுமா?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry Cry Cry