![]() |
|
இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் வழங்கக் கூடாது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் வழங்கக் கூடாது (/showthread.php?tid=1716) |
இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் வழங்கக் கூடாது - தூயவன் - 12-30-2005 <b>இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் எக்காரணத்தை முன்னிட்டும் வழங்கக் கூடாது: சென்னை மாநாட்டில் தீர்மானம்</b> இலங்கை அரசுக்கு எவ்வித உதவியையும் எக்காரணத்தை முன்னிட்டும் வழங்கக் கூடாது என்று சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று மாலை சென்னை-பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கைத் தீவில் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சிங்களப் பேரினவாத அரசுகள் கடைபிடித்து வருகிற இன ஒடுக்கல்இ அடக்குமுறைகளால் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கும்இ துயரங்களுக்கும் ஆளான தமிழ் மக்கள் மானத்தோடு வாழவும்இ உரிமைக்காகவும் போராடி வருகின்றனர் சமாதானப் பேச்சுவார்த்தை மூலமாக தமிழ்த் தேசிய இனத்திற்கு உரிய தீர்வு ஏற்பட கடந்த 5 ஆண்டுகாலமாக நார்வே அரசு மனிதநேயத்தோடு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக சிங்கள அரசுக்குஇ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுஇ பேச்சுவார்த்தை நடைபெற்றது. இலங்கையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் அமைந்துள்ள அதிபர் மகிந்த ராஜபக்ச அரசுஇ ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட காலம் காலமாக மறுத்து வருகிற சிங்களப் பேரினவாதக் குழுக்களான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)இ ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யு.) அமைப்புகளுடனும்இ புத்த பிக்குகளுடனும் கரம் கோர்த்துக் கொண்டுஇ தமிழர் பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துள்ளது. இதனால் தமிழர்களின் இயல்பு வாழ்வு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்இ நோர்வே அரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுஇ நமது இந்திய அரசை முன்னிறுத்திச் செய்யவும் சிங்கள அரசுக்குச் சார்பு நிலையை இந்தியா மேற்கொள்வதைப் போன்ற தோற்றத்தை பன்னாட்டு அரங்கில் உருவக்கவும் தந்திரமாக வகுக்கவும் இலங்கை அரசின் திட்டத்திற்கு இந்திய அரசு இடம் கொடுக்கக் கூடாது என்றும்இ |