Yarl Forum
பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் (/showthread.php?tid=1714)



பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் - rajathiraja - 12-30-2005

பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம்

திராவிடக் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ரூ 10 கோடியில் ஆங்கிலப் படமாகத் தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள பிரபல 'மிட்ஸ் பாய்ஸ்' நிறுவனமும், சென்னையில் உள்ள 'ஜே.கே.ஸ்டூடியோஸ்' பட நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

பெரியார் ஒரு இந்தியத் தலைவர் (ஈ.வி.ராமசாமி அன் இன்டியன் லீடர்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரூ 10 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது.

இந்தப் படத்தில் ஆங்கில நடிக, நடிகையர்களும், இந்திய நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். முதலில் ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இந்தப் படம் பின்னர் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையை ஹாலிவுட்டைச் சேர்ந்த பில்லிமிட்ஸ் எழுதுகிறார். தமிழ் டைரக்டரான வேலு பிரபாகரன் இயக்குகிறார்.

கடவுள், புரட்சிக்காரன் போன்ற படங்களை எடுத்தவர் இவர். பெரியார் குறித்து படம் எடுப்பது குறித்து இவர் கூறுகையில்,

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்றாலும் காந்தி படம் வெளிவந்த பின் அவரது புகழ் திக்கெட்டும் பரவியது.

காந்தியைப் போன்று மாபெரும் தலைவர்தான் பெரியார். ஜாதிக் கொடுமைகள், பெண் அடிமை ஆகிய மூட நம்பிக்கைகளை வேரோடு அழித்தொழித்தவர் பெரியார்.

இவரைப்பற்றி உலகம் முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவரைப்பற்றி எடுக்கப்படவுள்ள படத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, வீரமணி ஆகிய தலைவர்களைப் பற்றிய காட்சிகளும் இடம்பெறும்.

பெரியார் வேடத்தில் நடிப்பதற்காக 4 ஹாலிவுட் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேக்கப் டெஸ்ட்டுக்காக ஆகஸ்ட் மாதம் இந்தியா வருகிறார்கள். அப்போது நால்வரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

இந்தப் படம் பெரியாரின் 9 வயது முதல் அவரது மரணம் வரை நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது என்றார்.

Source : thatstamil.com
http://thatstamil.indiainfo.com/specials/c...ls/periyar.html


- Luckyluke - 01-04-2006

நல்ல தகவல் கூறினீர் ராஜாதி ராஜா... நன்றி....