Yarl Forum
ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! (/showthread.php?tid=1684)



ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! - Vaanampaadi - 01-01-2006

புத்தாண்டுக் கலண்டர்களில்
ஆபாசக் காட்சிகள் வேண்டாம்!
தாயகப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் தயா ரிக்கப்படும் நாள்காட்டிகளில் ஆபாச உணர்வைத் தூண்டும் படங்களையும் சினிமா நட்சத்திரங்களைச் சித்திரிக்கும் காட்சிகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இதுதொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத் திருக்கிறது.
புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் கலண்டர்களில் சினிமா நட்சத்திரங்களின் படங் கள் மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்கள் இடம்பெறுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது.
இவற்றுக்குப் பதிலாக தமிழர் தாயகப் பிரதேசத்தின் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்துக்காட்டும் படங்களை கலண்டர் களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமானது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

uthayan