![]() |
|
விடுதலைக்கான யுத்தம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: விடுதலைக்கான யுத்தம் (/showthread.php?tid=1678) |
விடுதலைக்கான யுத்தம் - kuloth - 01-01-2006 எமது விடுதலைக்கான கடைசி யுத்தம் வேண்டுமா..இந்தயுத்தம் தான் தமிழினத்தின் வாழ்வா சாவா என்பதை நிர்னயிக்கும். இந்த ஆண்டுகட்டாயம் எமக்கு நாடு கிடைக்கும் எனநாம் நம்புவோம். உங்கள் கருத்துக்களைத் தாருங்கள். ஈழத்தின் விடுதலைக்கு தொடர்ந்தும் கை கொடுப்போம் - வினித் - 01-01-2006 ஒம் நீங்கள் சொல்வது போல இது தான் கடைசி யுத்தமா இருக்கவேணும் ஆனால் நமக்கு வெற்றியுத்தமா இருக்கும் - Danklas - 01-01-2006 ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டு இருந்ததுபோல் இந்த வருடம் சுனாமி, பினாமி வந்தாலும் தமிழரின் சுய நிர்ணயப்போராட்டம் ஏதோ ஒரு வகையில் உக்கிரமடையப்போவது உறுதி,,, பெருமளவிலான மக்கள் தாங்களாக பயிற்சிகள் எடுத்து வருவது அதற்கு சான்று,.. புலிகள் ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ மக்கள் நிச்சயமாக ஆரம்பிப்பார்கள்,...காரணம் 4 வருட போர் நிறுத்தம் கழிந்துவிட்ட நிலையிலும் 1983ம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் இருக்கின்றதைப்போல் தற்பொழுதும் வாழ்ந்துவருகிறார்கள்,, சிங்கள நாட்டில் மக்கள் கொழுப்பெடுத்துப்போய் அலைகிறார்கள்,, அதனை ஜனாதிபதி தேர்தல் மூலம் நிருபித்துவிட்டார்கள்,, இந்தோநேசிய அச்சே மாநிலத்தில் 5 கட்ட சுற்றுப்பேச்சுக்களில் பாரிய முடிவை எட்டி தற்பொழுது ஒரு இனக்கப்பாட்டுக்குள் வந்து இருக்கிறார்கள்,, ஆனால் இலங்கையில் 6 கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் கூட எந்த விதமான பிரியோசனமான நிகழ்வுகளும் நிகழவில்லை,,, ஒரு பக்கம் எந்தவித பிரியோசனமான, மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த விடயங்களும் நிறைவேற்றாத பொழுது மறு பக்கம் தமிழ் புத்திஜீவிகள், அரசியல் வாதிகள், ஊடகவியளாலர்கள், பொதுமக்கள் என சிங்கள பேரினவாத சக்திகள் தமிழ் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு தமிழீழத்தை அனு அனுவாக அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்,, போர்காலங்களில் நடப்பது போன்று கொலை, பாலியல் வல்லுறவுகள், சுற்றிவளைப்புகள், கைதுகள் என்பன தமிழர் பிரதேசங்களில் கடந்த வருடம் உக்கிரமாக நடைபெற்றது,, போர் காலமா? சமாதான காலமா? என்று வித்தியாசம் காணமுடியாதவாறு இராணுவத்தின் செயற்பாடுகள் காணப்பட்டன காணப்படுகின்றன,,,,, ஆகையால் இந்த வருடம் இராணுவமோ அல்லது புலிகளோ யுத்தத்தை ஆரம்பிக்கிறார்களோ இல்லையோ மக்கள் தங்களின் எதிர்கால சுபீட்சமான வாழ்வு இப்படியே சமாதானம் என்ற போர்வையில் மண்ணாக போவதை விரும்பமாட்டார்கள்,, எப்படியும் 90% வீதம் ஏதோ ஒரு வகையில் போராட்டம் வெடிக்கும், தமிழ் மக்கள் சிறிய இழப்பை சந்திச்சாலும் பெரிய எதிர்காலத்தை காணப்போகிறார்கள் என்பது மட்டும் உறுதி,,,
- அருவி - 01-01-2006 தமிழீழம் தன் முழுமையான நிலப்பரப்புகளையும் தன்னை நேசிக்கும் விடுதலைவீரர்கள் மூலம் மீட்டெடுக்கும் இறுதிப்போராக இருக்கும். நிழல் அரசாங்கம் உண்மையான உலக அரசுகளின் துணையுடன் அரசாளும் போராக இருக்கும்
|