![]() |
|
சைக்கிள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: சைக்கிள் (/showthread.php?tid=1663) |
சைக்கிள் - aathipan - 01-02-2006 <img src='http://img455.imageshack.us/img455/4863/500287514fw.jpg' border='0' alt='user posted image'> ஒவ்வொருத்தரும் மோட்டசைக்கிள் கார் என்று வாங்கின உடன சைக்கிள மறந்திட்டம.; ஆனா ஒரு காலத்தில சைக்கிள் பெரிய விடயமா இருந்தது. அப்ப நாங்கள் பள்ளிக்கூடம் போற வயசு. சில பணக்காரப்பெடியங்கள் சைக்கிள்ளை வருவாங்கள். நாங்கள் எல்லாம் வெயில தேஞ்ச செருப்போட நடந்து வருவம். அவ்வப்போது அப்பாவிடம் குட்டிச்சைக்கிள் வாங்கித்தரச்சொல்லிக்கேப்பம். அவரும் இந்தா அந்தா என்று எங்களை நல்லா ஏமாத்துவார். அப்ப "சொப்பர்" சைக்கிளுக்குத்தான் நல்ல மரியாதை. அதுக்கு முன் சில்லு சின்னன். பின் சில்லு பெரிசு. முன்னால ஒரு சின்னக் கூடை இருக்கும். வேகத்தை மாற்ற கியர் கூட இருக்கும். சீட் மற்ற சீட் போல இல்லை சைக்கிள் ஓடுறவவை பின் பக்கம் சாயக்கூடிய மாதிரி இருக்கும். அந்தச் சைக்கிள் ஓடுற பெடியள் பெட்டையளை எல்லாம் ஏக்கமா பாப்பம். வாழ்நாளில ஒருக்கா அதை ஓட வேண்டும் என்று சரியான ஆசை. ஆனா அது கடைசிவரை நிறைவேற வில்லை. பிறகு ஒரு சைக்கிள் வந்தது அது "பறக்கும் புறா" அதுகும் நல்ல வடிவான சைக்கிள். வெள்ளை நிறம். நல்லூர்த்திருவிழாக்காலத்தில நல்லூர் கல்யாண மண்டபத்தில அதை லொத்தர்ல போடுவார்கள். கடைசி நாள் தான் குலுக்கல். ஒரு ரூபா டிக்கெட் வாங்கிட்டு தினமும் கோவில் போகேக்கையும் வரேக்கையும் அதைப்பாத்துக்கொண்டு நிப்பம். முருகனிட்டை அது எங்களுக்கு விளவேண்டும்என்று கந்தஸஷ்டி கூட படிச்ச ஞாபகம். ஆனா எங்களுக்கு முருகன் கடைசி வரை கண்திறக்க வில்லை. யாழ்ப்பாணம் டவுனுக்குப்போனா சைக்கிள் விக்கிற கடையள் கஸ்தூரியார் ரோட்டில இருக்கும். ஒவ்வொன்றா தொட்டு விலை கேட்டுபோட்டுதான் வருவம். எங்கடை அப்பாட்டை ஒரு பழைய ரலி சைக்கிள இருந்தது அதை அப்பா மத்தியானம் சாப்பிட வாற நேரத்தில எடுத்து ஓடுவம். சிலவேளை விழுத்தி காண்டிலை நெளிச்சு வைப்பம் இல்லை என்றா செயின் கவரை நெளிச்சு வைப்பம். அப்பா வந்து அவசரமா சைக்கிள எடுக்கேக்கை செயின் களன்றிருக்கும் காண்டில் நெளிஞ்சிருக்கும். கோவத்தில அப்பா பேசுவார். சைக்கிள் பெரிசா இருக்கிறதால பாறுக்கால காலைவிட்டுதான் ஓடுவம். சில சின்னன்கள் முழுசா பெடல் போட கால் எட்டாம பாதி மட்டும் உளக்குவினம். ஒருகை சீட்டை பிடிச்சு இருக்கும் ஒரு கை காண்டில பிடிச்சு இருக்கும். முன்னால வாறவை எல்லாம் பயப்பிடுவினம். பாறுக்கால காலைவிட்டு ஓட்டி ஒரு கிழமை கழிச்சுத்தான் பாறுக்கு மேலால காலைவிட்டு ஓட்டுவம். சீட்டில இருந்தா பெடல் காலுக்கு எட்டாது. கால் வலிச்சா பார்ல இருப்பம் இல்லை எண்டா நல்லா வேகமா ஓடிட்டு சீட்டில இருப்பம். அவசரத்துக்கு நிறுத்த முடியாது வேலில போய் மோதி விழுவம். முள்ளுக்கம்பி வேலி இல்லை என்டா கள்ளிச்சொடிப்பத்தைல விழுந்தா அவ்வளவுதான். இதுல நாய் துரத்தினா சொல்லவேண்டாம். வீட்டுக்கு கிட்ட இருந்த ஒரு சைக்கிள் கடையில சின்னச்சைக்கிள் வாடைக்கு குடுப்பார்கள். ஒரு மணித்தியாலத்தி;ற்கு ஒரு ரூபாதான். ஆனா அதை எடுத்து ஓட்டுவது பெரிய விசயம். தனியாப்போனக் குடுக்க மாட்டாங்கள். அப்பாவை இதுக்காக கூட்டிட்டுப்போக வேண்டும்;. இரண்டு தடவைதான் ஓட்டியிருப்பன். பிறகு எங்கடை உறவினர் ஒருவர் வெளிநாடு போக முயற்சிச்சார். அவர் தன்னோட சைக்கிளை எனககுத்தந்தார். அது அவரொட அப்பா பயன்படுத்திய ராலி சைக்கிள். இரும்பு கலர்லதான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா காசு சேத்து ஒவ்வொன்றா திருத்தினன். என்ட கஸ்ட காலம் அவர் அடிக்கடி கொழும்பு வைரக்கும் போட்டு திரும்பிடுவார். ஒவ்வோருக்காவும் வந்து வாங்கிட்டுப்போயிடுவார். இருந்தாலும் நான் மண் எண்ணையில கலந்து கறுப்புப்பெயிண்ட் அடிச்சு, சீட் கவர் போட்டு, முன் சில்லுக்கும் பின் சில்லுக்கும் கலர்ப்புூ போட்டு வைத்திருந்தன். முன்பக்க பாறுக்கு வயர் சுற்றி வடிவா இருந்தது. பிறகு அவர் ஒருமாதிரி வெளிநாடு போய்சேர அந்தச்சைக்கிள் என்ர கைக்கு முழுசா வந்து சேர்ந்துது. அதுக்குப்பிறகு எப்பவும் அந்தச்சைக்கிள் கூட வரும். வீட்டுக்கையும் சைக்கிள் ஓடுறன் என்று அம்மா பேசுவா. அதை அலங்கரிச்சு துடைச்சுக்கழுவி அதோடைதான் வாழ்க்கை போச்சு. எத்தனையோ முறை இடம்பெயரேக்கையும் அதில தான் போவம். சிலவேளைகளில் அம்மாவை முன்னுக்கும் அக்காவைப் பின்னுக்கும் வைத்துக் கூட்டிட்டுப்போவன். எப்பவும் ஒரு காத்துப்;பம்பையும் எடுத்துட்டுப்போவம். டயர் தேஞ்சு போன காலத்தில ரெண்டு ரயர் போட்டு அதை ஓடியிருக்கிறன். நான் இந்தியாவிற்கு அகதியா போகேக்கை அதை வாங்கி ஓட அங்கை யாருமே இல்லை. எங்கடை வீட்டில என்னோட அறையில விட்டுட்டு போயிட்டன். பதினஞ்சு வருசத்திற்குப்பிறகு அப்பாவும் அம்மாவும் வீட்டைப்பாக்கப்போனவை. டெலிபோன்ல கதைக்கேக்கை அம்;;;;மா சொன்னா செல் விழுந்து அந்தச்சைக்கிள் நசிஞ்சு போயிருக்க வேண்டுமாம். பின்னால உடைஞ்ச சாமான்களோட அதுகும் கறல்கட்டிக்கிடக்;கிதாம். - Rasikai - 01-02-2006 அட சூப்பரா சொல்லி இருக்கிறீங்கள் சைக்கிள் கதை. எனக்கும் எண்ட சைக்கிள் ஞாபகம் வந்துட்டு. நான் பிள்ளை மாதிரி பார்த்துட்டு இருந்தனான் வரேக்கை எண்ட நண்பிக்கு கொடுத்துட்டு வந்தனான் அவள் எப்படி வைச்சு இருக்காளோ? எதுக்கும் இன்று போன் போட்டு கேக்கணும். :oops: - Danklas - 01-02-2006 அட பழைய ஞாபங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீங்கப்பா.. ஒரு வயசில பட்டம் விடுறது (களத்தில நிக்கிறர் ஒரு அண்ணாத்தை, அவரும் நானும் சின்னனில, (அட 1966.1967இல) பெரியாக்கள் லைற் பூட்டி பட்டம் விடக்கை நாங்கள் இரண்டு பேரும் அந்த பெரிய பட்டங்களைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பம்,, பொறுத்தது போதும் பொங்கி எழு நண்பா சொல்ல. உடன ஆவேசமா வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய கொப்பியில ஒற்றையை கிழிச்சு கையால மடிச்சுப்போட்டு சின்ன நூலில பட்டம் விட்டு மகிழ்ந்த கதை அது ஒரு காலம்,, அப்புறம் சைக்கிளுக்கு சோடிக்கிறது,, எல்.ஈ.டி பல்ப், மிளாகாய் லைற், சைக்கிள்ல இருக்கிற முன் லைற் (ஹெட் லைற்) அதற்கு மஞ்சல் சீலை வாங்கி அழகா கட்டி மகிழ்வது, முன்னுக்கு இரண்டு (மிளகாய் எண்டு சொல்லுறது) லைற் பின்னுக்கு எல்.ஈ.டி பல்ப் பூட்டி மகிழ்ந்தது என்னொரு காலம்,,,,, இப்ப என்னெண்டால் எல்லாத்தையும் மறந்து ஒட்டகம், சா காரில பூவர் பூட்டி எம்.பி3 செட், சோடிச்சு பார்த்து அழகு பார்க்கிறம்,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அட மற்றவங்கள் பூட்ட நான் பார்த்து மகிழுறன் எண்டு சொல்லவந்தனப்பா) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil: - தூயவன் - 01-02-2006 Danklas Wrote:அட பழைய ஞாபங்களை நினைவுக்கு கொண்டு வந்துவிட்டீங்கப்பா.. ஒரு வயசில பட்டம் விடுறது (களத்தில நிக்கிறர் ஒரு அண்ணாத்தை, அவரும் நானும் சின்னனில, (அட 1966.1967இல) பெரியாக்கள் லைற் பூட்டி பட்டம் விடக்கை நாங்கள் இரண்டு பேரும் அந்த பெரிய பட்டங்களைபார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பம்,, பொறுத்தது போதும் பொங்கி எழு நண்பா சொல்ல. உடன ஆவேசமா வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய கொப்பியில ஒற்றையை கிழிச்சு கையால மடிச்சுப்போட்டு சின்ன நூலில பட்டம் விட்டு மகிழ்ந்த கதை அது ஒரு காலம்,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Re: சைக்கிள் - தூயவன் - 01-02-2006 பாத்தியா!! அதீவம் இங்கையும் திகில் மூட்டுகின்ற படத்தைத் தான் மாட்டியிருக்குது - Rasikai - 01-02-2006 Danklas Wrote:அது சரி அக்காச்சி,,,,,, அந்த மாட்டுவண்டிலை யாரிட்ட கொடுத்துட்டு வந்தனீ? எங்கட பரம்பரை சொத்து பத்திரமா வைச்சிருக்க சொல்லி தந்துட்டு வந்தனான் எல்லோ? இப்ப எங்க??? :roll: :evil: :evil:ஒம் உன்னுடைய வண்டியை பக்கத்துவீட்டு பெடியன் கேட்டிச்சு ஆசையா சரி கவனமா வைச்சிரு என்று கொடுத்துட்டு வந்தனான். போய்ப்பார்த்தால் தான் தெரியும் எப்படி இருக்கு என்று பேரீச்சம்பழக்கடைக்கு போட்டுது இல்லை அந்த பெடியன் இப்பவும் ஓடுதோ என்று <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aathipan - 01-02-2006 எங்கட வீட்டில வேலை செய்த ஒரு மேசன் வைத்திருந்த சைக்கிள கண்ணைக்குத்திற கலர்ல பிளாஸ்டிக் புூக்களால அலங்காரம் செய்து இருக்கும். முன் சில்லுல ஒரு பக்கம் வேலும் ஒரு பக்கம் சேவலும் இருக்கும். டைனமோ எல்லாம் போட்டு பின்னுக்கும் முன்னுக்கும் லைட் போட்டு வைத்திருப்பார். ஒரு நாளும் ஓடத்தரமாட்டார். - vasisutha - 01-02-2006 ஆதி உங்கள் சைக்கிள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி....... டன் அண்ணா கடைசியில லைற் புூட்டி பட்டம் விட்டீங்களா? இல்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ( உண்மையிலேயே லைற் புூட்டி பட்டம் விடுறதா? :?: எரியுமா? :roll: ) - Eelathirumagan - 01-02-2006 ஆதி உங்கள் கதைமூலம் சிறுவயது நினைவுகளை தூண்டி விட்டீர்கள். வேலைப்பளுவின் மத்தியிலும் இவ்வாறான சிறுவயது நினைவுகள் உற்சாகம் தருபவையே. - ஈழமகன் - 01-02-2006 ஆம் வசி பட்டத்தில் லைற்பூட்டி ஏற்றுவதை வடமராட்சி பகுதிகளில் பார்க்கலாம்..... - RaMa - 01-03-2006 அதிபன். சைக்கிள் பற்றி கதைத்து பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்..... பக்கத்து வீட்டிற்கு போவதேன்றாலும் சைக்கிள் எடுத்து சென்றதை மறக்க இயலாதே...... - Snegethy - 01-03-2006 எல்லாருக்கும் சைக்கிள் ஞாபகத்தை கொண்டு வந்தீட்டீங்கள் அதிபன்.என்ர சைக்கிள் சித்தி வீட்ட குடுத்தனான் ம் ம் வைச்சிருக்கினமோ தெரியாது.சைக்கிள் டைனமோ எடுத்து சைக்கிளைச் சுத்திச் சுத்தி பக்கத்து வீட்டு அண்ணாவை படம் போடுறவை. - aathipan - 01-03-2006 சைக்கிள நினைச்சுப்பாத்த உறவுகளுக்கும் நன்றி... எட்டு முடிச்சுப்பட்டத்துக்கு லைட் புூட்டி விடுறவை. இரவில சின்னதாத்தெரியும் வெளிச்சம். அத்தோட விண் புூட்டுவினம். அது இரவு முழுக்க சத்தம் போடும். அந்த மாதிரிப்பட்டங்களை ஐந்தாறு பேர்தான் சேர்ந்து ஏத்துவினம். - MUGATHTHAR - 01-03-2006 vasisutha Wrote:விட்டீங்களா? இல்லையா? <!--emo& தம்பி பகிடிக்கில்லை லைட்டுப் புட்டி ஸ்பீக்கர் கட்டி விட்டு அதிலை பாட்டும் போட்டிருக்கிறாங்கள் எண்டா பாருங்கோவன் திருகோணமலையிலை பாத்திருக்கிறன்........... - Danklas - 01-03-2006 vasisutha Wrote:டன் அண்ணா கடைசியில லைற் புூட்டி பட்டம் வசி பெரிய பட்டங்களை பினையல் விடுறவை அறிந்திருக்கிறீரோ? சாதரண "பாம்பன்" பட்டத்தை முதலில ஏத்திப்போட்டு அப்புறம் "படலை" பட்டம், அதுக்கப்புறம் முழங்கால் அளவு படலைப்பட்டம், அப்புறம் இடுப்பளவு,, அதுக்கப்புறம் ஒரு ஆள் அளவு பட்டத்தை கடைசியா விடுவாங்கள்,, அந்த ஆள் அளவு பட்டத்தில உம்மைக்கட்டிவிட்டாலே நொய் எண்டு கத்திக்கொண்டு பறந்து கொண்டு இருப்பீர்,,அந்த அளவுக்கு பினையல்ல இருக்கிற பட்டங்களின் சப்போட் இந்த ஆள் அளவு பட்டத்துக்கு இருக்கு,,, பட் நாங்கள் எல்லாம் கொக்கு பட்டம், பெட்டிபட்டம் எண்டு பெரிய பட்டங்களைத்தான் ஏத்துவம்,,, (ஓய், அப்புறம் சும்மா வெடிக்கிறான் எண்டு இங்க சொல்லி எண்ட மானத்தை வாங்கிறதில்லை,,,, பெரிய அண்ணமாரிட்ட போய் அந்த நூலை மட்டும் தொட்டுப்பார்க்கச்சொல்லி கேக்கிறது, பிறகு பட்டத்தை ஒரு இழுவை இழுத்துப்போட்டு சுண்ணாம்பு தடவீட்டு வந்து அடிவாங்கின கதைகளை).... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil: :evil:
|