Yarl Forum
மக்கள் படைத் தாக்குதல்களும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: மக்கள் படைத் தாக்குதல்களும்.... (/showthread.php?tid=1661)



மக்கள் படைத் தாக்குதல்களும்.... - selvanNL - 01-02-2006

<span style='color:red'><b>மக்கள் படைத் தாக்குதல்களும் திறக்கப் போகும் போர் முனைகளும்</b>

*குடநாட்டு இராணுவ விநியோகம் கேள்விக்குள்ளாகும் நிலை

*புலிகள் வெட்டி குழியில் விழும் அரசு.

ஆப்பிழுத்த குரங்கின் நிலை என்ன என்பதற்கு சிறந்த உதாரணம் காட்ட வேண்டுமாயின் தற்போதைய கொழும்பு அரசாங்கத்தின் நிலையை விட சிறப்பான தொன்றை காட்டுவது கடினமாகும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ துணைக் குழுக்களைப் பயன்படுத்தி கிழக்கில் நடத்திவந்த நிழல் யுத்தம் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒரு வளை எறியாக (boomerang) மாறிவிட்டதையே அண்மைக்கால வடக்கு, கிழக்கு சம்பவங்கள் காட்டுகின்றன.

கிழக்கில் புலிகள் மீதும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் மீதும் நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களுக்கு இராணுவ உளவுப் பிரிவும் அவர்களால் இயக்கப்படும் துணைக் குழுக்களும் தான் காரணம் என விடுதலைப் புலிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசாங்கம் தனக்கு அதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர் தான் அதை மேற்கொண்டு வருவதாகவும் பிரசாரம் செய்து வந்தது.

அரசாங்கத்தின் மறுப்பு வெளி உலகத்தைப் பொறுத்தவரை நம்பத்தகுந்த ஒன்றாக இருக்கவில்லை என்பதையே இணைத் தலைமை நாடுகள் உட்பட வெளி நாடுகள், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கூற்றுக்கள் காட்டுகின்றன.

இவற்றைப் புறக்கணித்து, கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிக்கும் செயற்பாட்டையே கொழும்பு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. அந்தப் பூனைக்கு மத்தால் உச்சந் தலையில் விழுந்த அடியாகவே குடாநாட்டிலும், வட கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் படை எனும் அமைப்புகள் நடத்தும் தாக்குதல்கள் அமைந்துள்ளன.

\"எமக்கு துன்பத்தை தருபவர்களுக்கே அத்துன்பத்தை திருப்பி விட வேண்டும்\" என்பது விடுதலைப் புலிகளின் தலைவர் கூறுவதாக தெரிவிக்கப்படும் பிரபல வாசகமாகும். நிழல் யுத்தத்தையும் புலிகள் இந்தக் கூற்றுகமையவே கையாண்டுள்ளார்கள் என்பது தற்பொழுது புலனாகிறது.

<i>பொது மக்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை புலிகள் வழங்கியமைக்கு நிழல் யுத்தத்திற்கு பதிலடி கொடுப்பதும் ஒரு காரணம் என்பது தற்பொழுது தெளிவாகிவிட்டது.</i>

புலிகள் இத் தாக்குதலை நடத்துவதாகவோ, பின்னணியில் இருப்பதாகவோ தற்பொழுது அரசு புலம்புவது ஒரு சோக நகைச்சுவை காட்சியாகவே உலகின் கண்களுக்கு தென்படும்.

இதேவேளை நிழல் யுத்தமும் இந்த பதில் தாக்குதல்களும் யுத்த நிறுத்தத்தை அதன் எல்லைக்கு கொண்டு வந்து விட்டன. மக்கள் படைகளால் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக அப்பாவி பொது மக்களை இராணுவம் பலியாக்கி வருகின்றது. இந்தப் பதிலடி பொது மக்கள் மத்தியில் பாரிய இழப்பை ஏற்படுத்தினால் யுத்த நிறுத்த முடிவிற்கு வழங்கப்பட வேண்டிய 14 நாள் காலக்கெடு இயல்பாகவே இல்லாதொழிந்து பெரும் போர் வெடிக்கும் சாத்தியமே காணப்படுகின்றது.

[size=18]யாழ்ப்பாணத்தில் பரவலாக நடந்து வரும் தாக்குதல்களை நிழல் யுத்தத்திற்கு எதிரான பதிலடியாக மட்டும் எவரும் கருதவில்லை. அதன் பின்னணியில் பாரிய தாக்குதலுக்கான திட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது. </span>

இராணுவத்தினர் மீதான தாக்குதல்களை அதிகரிப்பதன் மூலம் படிப்படியாக புலிகள் அவர்களை முகாம்களுக்குள் முடக்க முயற்சிக்கின்றனர். இதன் பின் முகாம்கள் மீது பெரும் தாக்குதல்களை தொடுத்து அவற்றை கைப்பற்ற திட்டமிடுகின்றனர் என்பது புதிய இராணுவத் தளபதியின் கருத்தாகும்.

அரசாங்கத்தினதும், இராணுவத்தினரினதும், சில ஆய்வாளர்களினதும் கருத்தும் இதுவாகவே இருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் திட்டம் குறித்த தனது மதிப்பீட்டுக்கு அமைய இராணுவம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் முகாம்களுக்கு முடக்க முனைகின்றார்கள் என கருதும் அது படைகளை முகாம்களில் இருந்து பரப்புகின்றது.

உண்மையில் விடுதலைப் புலிகளே பின்னணியில் உள்ளதாக இராணுவம் கூறும் தாக்குதல்கள் படையினரை முகாம்களுக்குள் முடக்குவதற்காக நடத்தப்படுகின்றனவா? அல்லது அவர்களை முகாம்களில் இருந்து பரப்புவதற்காக நடத்தப்படுகின்றனவா என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

விடுதலைப் புலிகளின் யாழ் குடா நாட்டு மீட்பு நடவடிக்கையில் இராணுவத்தின் விநியோகப் பாதையை துண்டிப்பதே ஒரு திருப்பு முனையான நிகழ்வாக இருக்கும். விநியோகப் பாதையை துண்டித்தால் அது இராணுவத்திற்கான விநியோகங்களை தடை செய்வதுடன் மட்டும் நின்று விடாது; ஏற்கனவே மக்கள் படையின் நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் இராணுவத்தின் உள நிலையை முற்றாக சிதைத்துவிடும். இவ்வாறான கட்டத்தில் புலிகளின் வெற்றி இலகுவானதாகிவிடும்.

<b>விடுதலைப் புலிகள் இரண்டு வழிமுறைகளில் குடா நாட்டு படையினருக்கான விநியோகங்களை துண்டிக்க முடியும்.</b>

பலாலி, காரைநகர் கடற்தளங்கள் மீது பாரிய தரையிறக்கத்தை மேற்கொண்டு அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு வழிமுறையாகும். இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு அம்முகாம்களில் உள்ள படையினரின் செறிவை குறைப்பது முக்கியமானதாகும். அதற்கு தற்போதைய இராணுவம் மீதான பரவலான தாக்குதல்கள் உதவக் கூடும். பலாலி, காரைநகர் தளங்கள் மீது தரையிறக்கத் தாக்குதல்களை ஆரம்பிக்கும் அதேவேளை, தரையிறக்கப் படையணிகளுக்கான விநியோகப் பாதையை ஏற்படுத்த நாகர் கோவிலிலிருந்து வடமராட்சியை கைப்பற்றும் பெரும் படை நகர்வையும், மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்துறை என்பவற்றைக் கைப்பற்றும் பெரும் கடல் நடவடிக்கையையும் புலிகள் மேற்கொள்ளலாம்.

வடமராட்சி கைப்பற்றப்பட்டால் அது தொண்டமானாறு, வளலாய் பகுதிகளினூடு பலாலிக்கான தரைத் தொடர்பை ஏற்படுத்திவிடும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குப் பகுதியிலமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்காவற்றுறை, மண்டைதீவு மற்றும் காரைநகர் போன்ற தீவுகளும் கிழக்குப்புறமாய் அமைந்த வடமராட்சியிலும் அதனூடாக பலாலி விமானப் படைத் தளம், காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பன அமைந்துள்ள வலிகாமம் வடக்கும், புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின் குடா நாட்டுப் படையினருக்கு புலிகளிடம் சரணடைவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

இரண்டாவது வழிமுறையாக விடுதலைப் புலிகள் திருகோணமலையையும் மன்னாரையும் கைப்பற்றுவதன் மூலம் குடாநாட்டுப் படையினருக்கான விநியோகத்தினை மிகப் பெருமளவுக்கு கட்டுப்படுத்தலாம். வன்னியிலுள்ள புலிகளென்னும் பெருவெள்ளத்தை தடுக்கும் அணைக்கட்டாக மணலாறு படைத் தளமே காணப்படுகின்றது. மணலாற்றுப் படைத் தளம் புலிகளிடம் விழுமாயின் திருகோணமலை மாவட்டம் இலகுவாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். திருகோணமலைத் துறைமுகமே குடாநாட்டுப் படையினருக்கான முக்கிய விநியோகத் தளமாக உள்ளது. அது இழக்கப்படுமாயின் குடாநாட்டு விநியோகத்திற்கு இராணுவத்தினர் கொழும்பு அல்லது காலித் துறைமுகத்தையே நம்பியிருக்கும் நிலை ஏற்படும். அத்துடன் மன்னாரும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்படுமானால் கொழும்பிலிருந்து மேற்கு கடல் வழியாக குடாநாட்டிற்கு செல்வதென்பது பாரிய நெருக்கடிக்குள்ளாகும். இவ்வாறான கட்டத்தில் குடா நாட்டின் மீது புலிகள் பெரும் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும். இரண்டாவது வழி முறையைப் புலிகள் மேற்கொண்டால் அதுவேறும் கடும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்தும்.

திருகோணமலை மாவட்டத்திலிருந்து 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள குடியேற்ற வாசிகள் வெளியேறுவர். இவர்களை புதிய இடங்களில் குடியமர்த்தும் பராமரிப்புக்கு பெரும் சுமை கொழும்பிற்கு ஏற்படும். அத்துடன், மன்னார் மாவட்டம் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் புலிகளின் நகர்விலிருந்து புத்தளம் மாவட்டத்தையும் தென் பகுதியையும் பாதுகாக்க அப்பகுதிகளில் புதிதாக பெரும் படைத்தளங்களை அமைக்கும் நிலையும் படைக்குவிப்பை மேற்கொள்ளும் நிலையும் ஏற்படும்.

இதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள படையினரையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமென்பதால் வடக்கு, கிழக்கு இராணுவ நிலைகள் மேலும் பல வீனமடையும்.

யாழ் குடா தாக்குதல்கள் படைகளை முடக்கும் நடவடிக்கை என்று கருதும் படைத்தரப்பு புலிகளின் வலைக்குள் சிக்கும் வகையில் படைகளை அங்கு பரப்புகின்றதா என்பதற்கு இப்புத்தாண்டில் பதில் கிடைத்துவிடும்.

நன்றி தினக்குரல்


- selvanNL - 01-02-2006

இந் நிலையில் புதிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறுப்பிள்ளைத்தனமான அறிக்கை அதாவது " 7000ம் உறுப்பினர்களைக்கொண்டு விடுதலைப்புலிகள் 1லட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தை ஒன்றும் செய்ய முடியாது" அவரின் சிறுபிள்ளைத்தனமான இராணுவ யுக்தியை தெட்டத்தெளிவாக காட்டுகிறது,, Idea Idea


- நர்மதா - 01-02-2006

இந் நிலையில் புதிய இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் சிறுப்பிள்ளைத்தனமான அறிக்கை அதாவது " 7000ம் உறுப்பினர்களைக்கொண்டு விடுதலைப்புலிகள் 1லட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தை ஒன்றும் செய்ய முடியாது" அவரின் சிறுபிள்ளைத்தனமான இராணுவ யுக்தியை தெட்டத்தெளிவாக காட்டுகிறது இதை இவர்மட்டும் கூறவில்லை அன்றிலிருந்து இன்று வரை உள்ள இராணுவத்தளபதிகள் எல்லேரும் கூறினார்கள் சந்திரிகா ஆட்சியின் போது மாமனார்(அனுருத்த ரத்வத்த) கூறினார் ஜெயசிக்குறு நடவடிக்ககையில் 75 வீதமான புலிகளை அழித்து விட்டோம் எஞ்சிய சிலர் காட்டுக்குள் ஒளிந்திருக்கின்றனர் அவர்களையும் வெகுவிரைவில் அழிப்போம்ஆனால் நடந்தது என்ன எஞ்சியவர்கள் அடித்த அடியில் மூன்று நாட்களில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடியவர்கள் தானே
மேற்குலக இராணுவ வல்லுணர்களே விடுதலைப்புலிகளின் பலம் என்ன என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் இதற்கிடையில் இராணுவத் தளபதிபள் நகைச்சவையாக கதைக்கின்றார்கள்


- narathar - 01-02-2006

என்ன புலிகள் பலம் பெற்று விட்டனர் என்று கூறினால் படையில் இப்போது இருக்கும் மிச்சப் பேரும் ஓடி விடுவர் என்கிற பயம் தான் காரணம்.இந்த சமாதானகாலத்திலேயே கன பேர் ஓடி விட்டனர்.


- வினித் - 01-02-2006

narathar Wrote:என்ன புலிகள் பலம் பெற்று விட்டனர் என்று கூறினால் படையில் இப்போது இருக்கும் மிச்சப் பேரும் ஓடி விடுவர் என்கிற பயம் தான் காரணம்.இந்த சமாதானகாலத்திலேயே கன பேர் ஓடி விட்டனர்.

இன்றும் அவர்கள் புலிகளின் தெகை பற்றி தான் பேசுறார்கள்
அவர்களின் மன உறுதி பற்றி புரியாமல் பேசுறார்கள்