Yarl Forum
இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் (/showthread.php?tid=1658)



இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் - நர்மதா - 01-02-2006

இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் பொது மக்களையும் சுடுமாறு படையினருக்கு உத்தரவு


சிறீ லங்கா இராணுவத்தினர் மீது பொதுமக்கள் குழுமிவந்து தாக்குதல் நடத்தினால் அவர்களையும் சூடுவதற்கான உத்தரவை இராணுவத்தினருக்கு தாம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, ஏழாயிரம் உறுப்பினர்களைக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் படையினரை ஒன்றும் செய்துவிட முடியாதென தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் கேள்விக்கு இவ்வாறு தமது வலிமைபற்றி வீரம் பேசியுள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தினைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கடத்திவருகின்றனர். இம்முறை மட்டுமின்றி கடந்த காலங்களிலும் இதனையே செய்துவருகின்றனர்.

முன்னர் எண்பதுகளின் ஆரம்பப்பகுதிகளில் உள்ளது போன்றே குடாநாட்டின் நிலைமையுள்ளது. எனினும் 85 களில் யாழ்.குடாநாட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது போல் இப்போதும் எத்தனிக்கின்றனர்.

இப்போது புலிகள் பொதுமக்களைத் தூண்டி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துகின்றனர். இராணுவப்பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் பொது மக்களா?
தற்போது மாவீரர் குடும்பங்களைச்சேர்ந்த 2000 பேர் வரையில் விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுள்ளனர். அது தவிர யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 15000 பேர் புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றவர்களே.

தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரின் ஆயுதங்களை களையுமாறு கோருகின்றனர். ஆனால் அவர்கள் மட்டும் மக்களுக்கு இராணுவப் பயிற்சிகளை ஏன் வழங்கிவருகின்றனர்?

இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பயங்கரவாத யுத்தியாக பொது மக்களை தமது கவசமாக பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கெதிராகவும் நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும், அவ்வாறானவர்களை படையினரை தாக்க எத்தனித்தால் சுட்டுத்தள்ளவும் தான் இராணுவத்தினருக்கு உத்தவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சங்கதி


- Mathuran - 01-02-2006

ம்ம்ம் சுடுவினம் சுடுவினம். தமிழர்களை சுடுவதற்கு இவர்களிற்கு அதிகாரன் இருக்குமென்றால். ஏன் சிங்கள வெறியர்களையும் யாரோ ஒருவன் சுடமாட்டான்??????

தமிழன் செத்துமடிய மட்டும்தான் என நினைப்பவர்களுக்குத்தான் என எண்ணும் நிலை மாறுதல் வேண்டும்.