![]() |
|
ஒளிக்கீற்று - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: ஒளிக்கீற்று (/showthread.php?tid=1646) |
ஒளிக்கீற்று - iruvizhi - 01-02-2006 <b>ஒளிக்கீற்று ஒளிக்கீற்று ஒரு தமிழ் இசையின் ஒலி ஒளி ஓவியம். அண்மையில் இந்த ஒளிக்கீற்று என்னும் இறுவட்டினை பார்க்கக் கிடத்தது. தமிழ் தொலைக்காட்சி இணையத்தினரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடல்த்தொகுப்புக்கள். அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களின் ஆக்கத்தில் வெளியாகும் பாடல்கள். மிகவும் அற்புதமான வரிகள், பாங்கான அசைவோடு ஆழமான முகபாவத்தோடு கூடிய கானங்களாக இவை தொகுக்கப்பட்டு இறுவட்டில் கிடைக்கின்றன. தமிழ் படைப்புக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் உறவுகளை வாழ்த்தி. இது போன்ற அரிய பணிகளை ஆற்றும் தமிழ் ஆர்வலர்களையும் வாழ்த்துகின்றோம். குறிப்பாக பல இளைஞ்ஞர்களை இதுபோன்ற படைப்புக்களில் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னும் பல பெறுமதிமிக்க ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். இப்படியான அரிய நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டும் தமிழ் தொலைக்காட்சி இணையத்தினை பெருமையோடு நேசித்து வாழ்த்துகின்றோம்.</b> |