Yarl Forum
திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி (/showthread.php?tid=1644)



திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி - கீதா - 01-02-2006

<span style='font-size:25pt;line-height:100%'>திருகோணமலை கைகுண்டுத் தாக்குதல்: 5 பேர் பலி
திருகோணமலை பெரியகடை கடற்கரையில் இன்று இரவு 7:55 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலில் அங்கிருந்த 5 பேர் உயிரிழந்திருப்பதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்தவர்கள் இக்குண்டை வீசியதாகவும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரைக்கு முன்பாகவுள்ள காந்தி சிலைக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

தாக்குதலை நடத்தியது யாரென்று தெரியவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர் </span>
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&


- kurukaalapoovan - 01-02-2006

இது கைக்குண்டுத் தாக்குதல் அல்ல துப்பாக்கிச்சூடு என்றும் பாதிக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

http://www.tamiloosai.com/index.php?option...=1516&Itemid=26
நன்றி தமிழேசை.கொம்


- கீதா - 01-02-2006

kurukaalapoovan Wrote:இது கைக்குண்டுத் தாக்குதல் அல்ல துப்பாக்கிச்சூடு என்றும் பாதிக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

http://www.tamiloosai.com/index.php?option...=1516&Itemid=26
நன்றி தமிழேசை.கொம்



என்னவோ தெரியாது நான் போட்ட இணைப்பை கிளிக் செய்து பாருங்கள் அதில் இருக்கின்றது பாருங்க Confusedhock:


- தூயவன் - 01-03-2006

இவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களும், இவ்வருடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் என தெரிவிக்கப்படுகின்றது. Cry Cry Cry


- Rasikai - 01-03-2006

மேலதிக தகவலுக்கு

http://www.eelatamil.net/sankathi/index.ph...=1123&Itemid=26


- MUGATHTHAR - 01-03-2006

இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 2வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லுகிறார்கள் இன்று சில மாணவர்கள் கொதித்தெழுந்து சில காவலரண்களை தீ வைத்ததாகவும் இதனால் பாடசாலைகள் ஆபிஸ்களும் மாணவர்களும் வேலை செய்பவர்களும் வீடுகளுக்கு போய் விட்டதாகவும் கூறப்படுகிறது 4 இளைஞர்களை பாதுகாப்புப்படை பிடித்து சென்றுள்ளதாகவும் அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையாம் ?????????ஃஃஃஃஃ