Yarl Forum
கொழும்பு மாநகரின் பாதுகாப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்பு மாநகரின் பாதுகாப்பு (/showthread.php?tid=1629)



கொழும்பு மாநகரின் பாதுகாப்பு - ஊமை - 01-04-2006

<b>கொழும்பு மாநகரின் பாதுகாப்பு அதிஉயர் பட்சமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். </b>


எனவே கொழும்பு மாநகரின் பாதுகாப்பு குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அவர் கூறினார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் நோக்கம் எனவும் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கொழும்பு மாநகரின் பாதுகாப்பை முன்னிட்டு எந்நேரமும் விழிப்புடன் உள்ளதாகவும் பெருமளவிலான இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இராணுவ புலனாய்வுத் துறையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்கள் பலவற்றில் விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் உடைகளிலும் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். இதேவேளை தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

பூச்சி(த) பகல் கனவு காணுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 01-04-2006

அட அறிக்கைவிட்டு வெளியாக கிடையில பிரபல தமிழ் வியாபார வணிகர் ஒருவர் கொழும்பில வைச்சு சுடப்பட்டு காயமாம்? பூச்சி என்ன உது? ஏன் உந்த கண்ணாம்பூச்சி விளையாட்டு?? சிங்கள மக்களை உப்படி சொல்லி உன்னை நீயே தேர்த்திக்கொள்ளலாம்,, ஆனால் தமிழர்களையும், உலக நாட்டையும் நம்பவைக்க சின்னப்பிள்ளை விளையாட்டு விளையாடுறா பூச்சி,, :evil: :evil: :evil: