Yarl Forum
நான் என்ன மெஸினா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: நான் என்ன மெஸினா? (/showthread.php?tid=1626)

Pages: 1 2 3 4


நான் என்ன மெஸினா? - Snegethy - 01-04-2006

<b>நான் என்ன மெஸினா?</b>


அம்மா :
யப்பா என்ன சனம் கோயில்ல….சூரன் போருக்கெண்டா மட்டும் இவ்வளவு சனம் எங்க இருந்துதான் வருதுகளோ.

அப்பா :
அம்மா ஒரு ரீ குடிச்சா நல்லாயிருக்கும்.அம்மா: நானும் உங்களோடதானே வந்தனான்.நானென்ன மெஸினே?? மது அப்பாக்கும் எனக்கும் ஒரு ரீ போட்டுத்தாவனம்மா.

மது :
அம்மா எங்கட மிஸ் சொன்னவா நாங்கள் எல்லாம் மெஸின் போலதானாம். வட அமெரிக்காவின் குழந்தை பிறப்பு இரண்டு முறைகளில் ஒன்றான Technocratic model ல

Woman => object
Male body => norm
Body => machine
Pregnancy and birth => pathological
Hospital => factory
Baby => product


<img src='http://img481.imageshack.us/img481/5233/birthmachine3bk.jpg' border='0' alt='user posted image'>

என்று இருக்குதாம்.அப்பிடியெண்டால் பெண்கள் ஒரு பொருள் அவேன்ர மேனி ஒரு மெஸின் போல. கர்ப்பமாதல் குழந்தை பெறுதல் ஒரு வருத்தம் மாதிரி.வைத்தியசாலை ஒரு தொழிற்சாலை அங்க அன்பு இரக்கம் எல்லாம் இருக்காது.பெண் மெஸின்களின்ர வேலை வைத்தியர் சொன்ன நேரத்துக்குள்ள அவர் வைச்ச குறிப்பிட்ட தொழிலாளர்களின் உதவியோட விளைபொருளை உருவாக்க வேண்டும்.அப்பிடி பெண் மெஸின்களால அது முடியாது போகும்போது வைத்தியர் உற்பத்தியை துரிதமாக்குவதற்கு epilit போன்ற தூண்டுதல் தருவார்.அதன்படி விளைபொருள் உற்பத்தி செய்யப்படும்.அடுத்த நொடியே உற்பத்திப் பொருள் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விடும்.

அம்மா:
மகள் தேத்தண்ணி கேட்டு எவ்வளவு நேரம்?

மது :
நான் சொன்னது சரிதானே….நாங்கள் மெஸின்தானே??

அம்மா :
வியாக்கியானம் சொல்லாம ரீ போட்டுக் கொண்டு வாறிங்களே??

மது :
அம்மா நான் போடுற ரீயை விட நீங்க போடுற ரீ தான் நல்லா இருக்கும்.

அம்மா :
நினைச்சன் ..நீயாவது கேட்டவுடனே ரீ போட்டுத்தாறதாவது.

அப்பா :
வீட்டில இருக்கிற இரண்டு மெஸிலயும் ஒன்றாவது ஒழுங்கா வேலை செய்யுதா பாருங்க.

<b>Special tx to Davis Floyd</b><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- RaMa - 01-04-2006

அப்ப நாங்கள் எல்லாம் மெஷினா :twisted: ?


- Snegethy - 01-04-2006

பின்ன நான் மட்டுமா?? :x :x


- ப்ரியசகி - 01-05-2006

என்ன சகோதரிகளே..நீங்களாவே சொல்லிட்டு..நீங்களே கோவப்பட்டா எப்பிடி.. அதை விட்டுத்தள்ளுங்க..இப்போதைய ஆண்கள் யாரும் மனைவியை மெசின் என்று சொல்வதில்லை... சொன்னாலும் விடுவதில்லை நம்ம பெண்கள்.. :evil:


- AJeevan - 01-05-2006

ப்ரியசகி Wrote:என்ன சகோதரிகளே..நீங்களாவே சொல்லிட்டு..நீங்களே கோவப்பட்டா எப்பிடி.. அதை விட்டுத்தள்ளுங்க..இப்போதைய ஆண்கள் யாரும் மனைவியை மெசின் என்று சொல்வதில்லை... சொன்னாலும் விடுவதில்லை நம்ம பெண்கள்.. :evil:
ஓம்
இங்க டெக் எண்டு சொல்றாங்க?


- Thala - 01-05-2006

ப்ரியசகி Wrote:என்ன சகோதரிகளே..நீங்களாவே சொல்லிட்டு..நீங்களே கோவப்பட்டா எப்பிடி.. அதை விட்டுத்தள்ளுங்க..இப்போதைய ஆண்கள் யாரும் மனைவியை மெசின் என்று சொல்வதில்லை... சொன்னாலும் விடுவதில்லை நம்ம பெண்கள்.. :evil:

ம்ம்ம்ம்ம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Snegethy - 01-05-2006

அஜீவன் அண்ணா..டெக் ஆ??அப்பிடியெண்டால்?? தல ஏன் சோகமாச் சிரிக்கிறியள்??அம்மணிட்ட நல்லா பூசை வாங்கிறீங்களோ?


- kuruvikal - 01-05-2006

பெண் இயந்திரமும் அல்ல.. பண்டமும் அல்ல..! ஆண் இயந்திரம் இயக்குபவனும் அல்ல வியாபாரியும் அல்ல..!

மனிதனுக்கே உரித்தானதும் பெண்ணுக்கே சிறப்பானதுமான உணர்வுகளைத் தாங்கிய உயிரி பெண்..! அதேபோல் தான் ஆணும்..! பெண்ணுக்கும் ஆணுக்கும் இயற்கை வழங்கிய கடமைகளை அவர்கள் தங்களிடையே உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு புரிந்துணர்ந்து கொண்டு அன்போடு செயற்படுத்துவதே மனித வாழ்க்கை வட்டத்தின் தொடச்சிக்கும் இருப்புக்கும் அவசியம்...! அதுதான் மனித வாழ்வின் அடிப்படை..!

இப்படி இயந்திரம் பண்டம் என்று பெண்களே தங்களைத் தாங்களே தரங்குறைத்துக் கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை..! பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் பார்க்கப்பட வேண்டிய இடத்தில் பார்க்கப்பட மிகுதி எங்கும் வேற்றுமை அற்று மனிதர்களாக நோக்கப்படட்டும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- AJeevan - 01-05-2006

Snegethy Wrote:அஜீவன் அண்ணா..<b>டெக் ஆ</b>??அப்பிடியெண்டால்??

நண்பர்கள்
ஊரில இருந்து டெக்கொன்று வருகுதுடா என்பார்கள்?
எனக்கும் புரியவில்லை உங்களைப் போல
ஏன் என்று? Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sabi - 01-06-2006

டெக் எண்டா
கெசற் போட்டுப் படம்
பாப்பினமே அதைத்தான சொல்லுறீங்கள் :roll: :roll:


- inthirajith - 01-06-2006

அப்ப சபி ஆண்களை கசற் என்று சொல்லுறிங்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sabi - 01-06-2006

சத்தியமா நான்
அப்பிடிச் சொல்லேயப்பா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

விளங்காமத்தான கேட்டனான்
நக்கலடிக்கிறீங்களே Cry Cry


- Snegethy - 01-06-2006

குருவிகள் நன்றி..அஜீவன் அண்ணா ஏன் என்று உங்கட நண்பர்கிளிட்ட கேட்டு சொல்லுங்கோ.சபி எனக்கும் விளங்கேல்லே ..பார்ப்பம் அஜீவன் அண்ணா சொல்றாரோ என்று.


- தூயவன் - 01-06-2006

ப்ரியசகி Wrote:என்ன சகோதரிகளே..நீங்களாவே சொல்லிட்டு..நீங்களே கோவப்பட்டா எப்பிடி.. அதை விட்டுத்தள்ளுங்க..இப்போதைய ஆண்கள் யாரும் மனைவியை மெசின் என்று சொல்வதில்லை... சொன்னாலும் விடுவதில்லை நம்ம பெண்கள்.. :evil:

அது தானே!!
இவர்களே தங்களைக் குறைத்து கதைப்பினம். பிறகு ஆண்களில் பழியைப் போடுவினம். கொஞ்ச நாளாக நானும் பார்த்துக் கொண்டு தான் வாறன். எல்லோரும் எங்களிடம் மோதல் போக்கைத் தான் மேற்கொள்ளுகினம். :twisted: :twisted:


- Snegethy - 01-06-2006

தூயவன் அண்ணா இப்ப என்ன நீங்கள் கோஷம் போடப்போறிங்கிளா??குறைச்சு ஒருதரும் சொல்லேல்ல...ஒருதரும் குறைவா நினைக்காட்டா சந்தோசம் தான்.


- தூயவன் - 01-06-2006

Snegethy Wrote:தூயவன் அண்ணா இப்ப என்ன நீங்கள் கோஷம் போடப்போறிங்கிளா??குறைச்சு ஒருதரும் சொல்லேல்ல...ஒருதரும் குறைவா நினைக்காட்டா சந்தோசம் தான்.


விவாதம் வைச்தது இப்ப 2 நாளாக அடங்கி விட்டதாலே உளைவு எடுக்கின்றது. எங்கையாவது தொடங்குவோம் என்று பார்த்தால் விடமாட்டேன் என்கின்றீர்களே!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 01-06-2006

உளைவு??கேள்விப்படா ஒன்றா இருக்கு...காலுளைவு கையுளவு தெரியும்..இதென்ன மண்டையுளைவா??பரம்பரைச் சிக்கலா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 01-06-2006

Snegethy Wrote:உளைவு??கேள்விப்படா ஒன்றா இருக்கு...காலுளைவு கையுளவு தெரியும்..இதென்ன மண்டையுளைவா??பரம்பரைச் சிக்கலா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அது பிள்ளை நாலு பேரிட்டை சந்தோஷமாக வாங்கி பேச்சுதான் இப்ப நீங்கள் பேசுறீங்களே அது போல....


- Snegethy - 01-06-2006

என்ன முகம்ஸ் சொல்லுறியள்?
"அது பிள்ளை நாலு பேரிட்டை சந்தோஷமாக வாங்கி பேச்சுதான் "???


- தூயவன் - 01-06-2006

Snegethy Wrote:உளைவு??கேள்விப்படா ஒன்றா இருக்கு...காலுளைவு கையுளவு தெரியும்..இதென்ன மண்டையுளைவா??பரம்பரைச் சிக்கலா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆமாம். விவாதம் மூலம் அறிவுத்தேடல் செய்யும் உளைவு. அது படிச்சவங்களுக்குத் தான் வரும்.
:wink:

( எனக்கு ஏன் வருகின்றது என்று கேட்கின்றீர்கள் என்று புரிகின்றது. படிச்சவராகக் காட்டுவதற்காகத் தான்)