Yarl Forum
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் (/showthread.php?tid=1625)

Pages: 1 2


நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - Snegethy - 01-04-2006

<b>நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்</b>

-சினேகிதி-

அளவில்லா ஆனந்தத்தோடு அண்ணன்
படை சேர்ந்தாய் அண்ணாவே
பூநகரி மணலாறு கிளிநொச்சி
எனக்களம்பல கண்டாய்
இன்று நீயும் மாவீரன்

வீட்டருகில் நீ வெடித்துச் சிதறினாய்
உள்ளம் வலிக்கத்தான் செய்தது
உன் சோதரர்கள் உனக்குச் சொல்லவில்லையா
அது இராணுவம் ரோந்து வரும் நேரமென்று
யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்
அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்
அழுது ஆற்றாமை தீர்த்தால்
இராணுவ இராஜமரியாதையையும்
ஏற்கவேண்டி இருக்குமே

ஐயர் வந்து சாந்தி செய்தார் - நீ
சிதறிப்போன சந்தில்
எங்களுக்குத் தெரியும் தமிழீழம் ஒன்றுதான்
உங்களுக்கு ஆத்ம சாந்தியென்று
இரு தசாப்தங்கள் ஆகிவிட்டன ஆனாலும்
உங்கள் கனவுகள் நனவாகவில்லை

ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?

உங்கள் நாமகரணங்களை தகர்க்க
சில புல்லுருவிகள் - பணத்துக்காகப்
பதவிக்காகப் பல்லிளித்துப் பறந்தாலும்
பற்றுறுதி கொண்ட வேங்கைகளுக்குப்
பக்கபலமாகத் திரளும் பல வேர்களாய்
மாணவர் சக்தி உலகெங்கும் திரள்கிறதே
அதை நீங்கள் அறிவீர்களா?
அதனால்தான் சொல்கிறேன்
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்"

(நான் எழுதிய முதல் கவிதை.2004 மாவீரர் நாளில் எழுதியது.)


- RaMa - 01-04-2006

ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?


சிநேகிதி... முதல் கவிதை என்றாலும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....


- வர்ணன் - 01-04-2006

எப்போ எழுதினாலும் என்ன.. தேசத்தின் வீரர்களுக்கு நீங்கள் செலுத்திய கெளரவம் மிகவும் பெரியது -நன்றி!


- Snegethy - 01-04-2006

நன்றி றமாக்கா...வர்ணன் நீங்கள் கவிதை எழுதுவீர்களா?


- rajathiraja - 01-04-2006

அற்புதமான நடை முதல் கவிதை போல் தோணவில்லை. அந்த இறந்து போன வீறரை பற்றி ஆரம்பித்து அழகாகன உரையில் முடித்து இருப்பது நன்று. அந்த வீர மரணம் எய்த்திய வீரனை பற்றி இன்னும் நிறைய எழுதி இருக்கலாம்.


- Mathan - 01-04-2006

படைப்பு நன்றாக இருக்கின்றது சிநேகிதி.

யாரோ ஒரு மரணித்த போராளியை குறிப்பிட்டு எழுதினீர்களா? முடிந்தால் அந்த போராளி குறித்த மேலதிக விபரங்களையும் தாருங்கள்


- Luckyluke - 01-04-2006

சிறப்பான உரை நடை பாணியில் கவிதை அமைந்திருந்தது.... மிகவும் நன்றாக இருக்கிறது... இந்த கவிதையின் நாயகன் யார் என்று சொல்வீர்களா?


- Thala - 01-04-2006

அது தான் சினேகிதி எண்டு போட்டிருக்கிறாரே...

சிறப்பாக இருக்கிறது சினேகிதி...


- அருவி - 01-04-2006

கவிதை நன்றாக இருக்கிறது சிநேகிதி.

Quote:யார்யாரோவெல்லாம் ஆறுதல் சொன்னார்கள்
அம்மாவும் விசும்பல்களை நிறுத்திவிட்டாள்
அழுது ஆற்றாமை தீர்த்தால்
இராணுவ இராஜமரியாதையையும்
ஏற்கவேண்டி இருக்குமே

இவ்வரிகள் ஓர்பாடலை ஞாபகப்படுத்தியது. "வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது..." அப்பாடலின் சில வரிகளைக்கேட்பதற்கு மேற்கோளிடப்பட்ட பகுதியின் மீது சொடுக்கவும்.

இப்படி ஒரு தாயாரிற்கு ஏற்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறன். தாயார் கொழும்பில் இருந்தபோது மகன் யாழ்ப்பாணத்தில் ஒரு சண்டையில் வீரமரணம் அடைந்துவிட்டார். அப்பொழுது அத்தாயார் மகன் இறந்த செய்தியைச்சொல்லும் போது யாரும் வீட்டுக்கு வராதீர்கள் எனக்கேட்டுக்கொண்டார். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Luckyluke - 01-04-2006

அய்யா... கவிதை எழுதியவர் சினேகிதி என்று தெரிகிறது... கவிதையின் 'பாட்டுடை நாயகன்' யார் என்று தான் கேட்டேன்....


- ப்ரியசகி - 01-04-2006

<b>கவிதை அழகாக இருக்கிறது சிநேகிதி. லக்கி லுக் கேட்டது போல...கவிதையில் வரும் போராளியை பற்றி விரும்பினால் சொல்லுங்களன்...</b>


- iruvizhi - 01-04-2006

அழகிய தமிழ்மொழியின் துணையோடு ஆழமாய் கருத்தாங்கி. அன்னைத்தேசமாம் ஈழம் பற்றி இரும்பைஒத்த வரிகள் கொண்டு வரைந்த கவிமாலை மிகநன்று. வரிப்புலிகள் மாவீரம் பற்றி சோகம் சொட்டுகயிலும், நெஞ்சுயர்த்தி நேர்வளிநின்று பாடிய உந்ததுக்கு நன்றிகள் பல. முடிந்தால் மேலும் பல கவி தாரீரோ??


- Snegethy - 01-04-2006

ராஜாதிராஜா அந்த வீரர்கள் "பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையில் வந்தார்கள்.

மதன்,பிரியசகி சில காரணங்களுக்காக எல்லா உண்மை விபரங்கiளுயும் தர முடியவில்லை.ஒருவர் ஒரு வீட்டிலுள்ள அலுமாரியில் மறைந்திருந்ததை அந்த வீட்டுக்காகாத யாரோ ரோந்து வந்த இராணுவத்தினரிடம் சொல்லியதால் சொற்ப நேரத்துக்குள்ளே எதுவும் செய்யமுடியாமல் அண்ணா வயித்தில கிறனைற்றை அமத்தி தசைப்பிண்டங்கள் எல்லாம் சுவரில் தெறிக்கும் வண்ணம் உயிர் நீர்த்தார்.


- Snegethy - 01-04-2006

நன்றி தல லக்கிலுக் அருவி நீங்க சொன்ன நிலைதான் இராணுவ முகாம்களுக்கு அருகில் இருந்தோரின் நிலையும்.


- Snegethy - 01-04-2006

இருவிழி நீங்கள் சொன்னதே கவிதையா இருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தொடர்ந்து கவிதை எழுத முயற்சி செய்கிறேன.


- ப்ரியசகி - 01-04-2006

Snegethy Wrote:ராஜாதிராஜா அந்த வீரர்கள் "பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்" கதையில் வந்தார்கள்.

மதன்,பிரியசகி சில காரணங்களுக்காக எல்லா உண்மை விபரங்கiளுயும் தர முடியவில்லை.ஒருவர் ஒரு வீட்டிலுள்ள அலுமாரியில் மறைந்திருந்ததை அந்த வீட்டுக்காகாத யாரோ ரோந்து வந்த இராணுவத்தினரிடம் சொல்லியதால் சொற்ப நேரத்துக்குள்ளே எதுவும் செய்யமுடியாமல் அண்ணா வயித்தில கிறனைற்றை அமத்தி தசைப்பிண்டங்கள் எல்லாம் சுவரில் தெறிக்கும் வண்ணம் உயிர் நீர்த்தார்.

ம்ம்ம் நன்றி...சிநேகிதி..இப்படியான எத்தனையோ விடயங்கள் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. மனதில் நான் நினைத்துப்பார்க்கக்கூட பயப்பிடும் விடயங்களை சொற்ப நேரத்துக்குள்ளே செய்து விடுகிறார்கள். அதற்கு காரணமாக நம் ஆக்களுக்குள்ளேயே சிலர் உடந்தையாக..அவர்களை நினைக்கையில் தான்..அவர்கள் என்ன நம் ஈழத்தில் பிறக்காதவர்களோ என்று எண்ணத்தோணும்..சரி அது கூட இல்லையெனில் ஒரு மனித நேயம் கூட இல்லாத துரோக குணம் படைத்தகவர்கள்...சின்ன வேலிப்பிரச்சனைக்காகவே இப்படி காட்டிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள். :evil:


- Rasikai - 01-04-2006

சிநேகிதி கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 01-04-2006

நன்றி ரசிகையக்கா.


Re: நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் - கீதா - 01-04-2006

ஓ மாவீரவே உங்களுக்கு
விடியலின்பூபாளம் கேட்கிறதா?
தானைத்தலைவரின் தங்குதடையற்ற
தலைமையில் உம் சகாக்களின்
போராற்றல் பேராற்றலாய்
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறதே
அது உங்களுக்குத் தெரிகின்றதா?


நல்லாயிருக்கு கவிதை நன்றி தொடர்ந்தும் எழுதுங்கள் :wink:


- Snegethy - 01-04-2006

என்ன கீதா நக்கலாச் சொல்றாப்போல இருக்கு <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->