Yarl Forum
மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை (/showthread.php?tid=1589)



மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை - Vaanampaadi - 01-06-2006

மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை

நெல்லை சு. முத்து

அவன் மூளை, அவள் மூளை என்று சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மேடம் கியுரி, சகுந்தலா தேவி, வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத்த பெருங்காயம்.

கல்வித் துறையில், கணிதத் துறையில் இயற்பியலில், பொறியியலில் பணி ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது.

இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பராயத்திற்கு பிறகு கல்வித் துறையிலோ, ஆராய்ச்சித் துறையிலோ பரிமளிப்பது இல்லையே! இதற்கு என்ன காரணம்? அறிவித்தார் ஹார்வார்டு பல்கலைக்கழக தலைவர் லாரன்ஸ் சம்மர்ஸ், உயிரியல் ரீதியில் பெண் மூளை வேற்றுமைகளை விளக்க முற்பட்டார். அதனால், கூட்டத்தில் ஒரு பேராசிரியைக்கு வந்தது ஆத்திரம். நான்சி ஹாப்கின்ஸ் என்கிற பெண்மணி மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்பப் பயிலகத்தின் உயிரியல் நிபுணர். அமைதியாக வெளிநடப்பு செய்தார்.

ஒரே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு என்று அறிவிக்கிறார் ரிச்சர்ட் ஹேலர். இவருடன் இர்வின் நகரில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் நியு மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் சகாக்களும் இணைந்து கொண்டனர். மூளையில் சாம்பல் நிறப் பகுதிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே வேற்றுமைகளை காந்த ஒத்ததிர்வு முறையில் பதிவு செய்தனர். சாம்பல் மூளை தான் தகவல்களை அலசி ஆராய்கிறது. வெள்ளை மூளையோ அந்தத் தகவல்களை அடுத்தடுத்த நரம்பு முண்டுகள் வழி கடத்துகிறது . இந்த இரண்டு நிற மூளையின் கன பரிமாண விகிதம் ஆணுக்கும் பெண்ணுக்கும் மாறுபடுகிறதாம். அதனால், அவர்களின் அறிவுத் திறனும் வேறுபடுவது அறியப்பட்டது.

மூளையிலும் அதன் கட்டமைப்பு, வேதியம் மற்றும் செயல்பாடு சார்ந்தும் ஆண் - பெண் வேறுபாடு தென்படுகிறதாம்.

1966 ஆம் ஆண்டு சயின்டிஃபிக் அமெரிக்கன் இதழில் சேய்மர் லெவின் எழுதிய கட்டுரை பிரபலம். `மூளையில் பாலியல் வேற்றுமைகள்' (Sex - Differences in Brain) என்பது தலைப்பு. ஒரு வகையில் பெண்களின் மொழித்திறன், நினைவாற்றல், உணர்ச்சி வசப்படுதல், கண்பார்வை, கேள்வி ஞானம், நடந்து செல்லும் பயண முறை என்று பல்வேறு செயல்பாடுகளிலும் மாற்றங்கள் கண்டுபிடிக்கும் முயற்சி அது.

பொதுவாக, புரிதல் திறனுக்கு காரணமான மூளையின் முன்நெற்றிப் புறணி (Frontal Cortex) ஆண்களைவிடப் பெண்களுக்குச் சற்றுப் பருத்து காணப்படுகிறதாம். இதனால், கிரகிக்கும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் தான். அவ்வாறே, அவயவப் புறணி (Limbic Cortex) வேறு பருமன் தானாம். அதனால் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களும் பெண்களே.

சுற்றுச்சூழல், இடம் அறிந்து நடந்துகொள்ளும் விதத்தில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கொஞ்சம் சமர்த்தர்கள் தானாம். காரணம் இவ்வகை நடவடிக்கைக்கு அடித்தளமான பக்கவாட்டுச் சென்னிப் புறணி (Parietal Cortex) ஆடவர்க்குச் சற்றுப் பெரியது.

மூளை அளவும் ஆண் - பெண் திறன் வித்தியாசங்களுக்குக் காரணம்.

இது எல்லாம் ஆணியவாதிகளின் கண்டுபிடிப்புகள் என்று உதாசீனப்படுத்தவும் இயலவில்லை. ஆண் - பெண் மூளையினை செல்மட்ட அளவிலும் ஆராய்ந்தவர் சாந்த்ரா விட்டல்சன் என்னும் பெண்மணி. மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தன் சக மருத்துவர்களுடன் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் முக்கியம். பெண்களின் பிடரிப் புறணி (Temporal Cortex) நரம்பு அணுக்கள் அடர்த்தியாக இருக்கிறதாம். உண்மையில் மொழியும், புரிதலும் இந்தப் பகுதியில் தான் நிகழ்கின்றன. அதனால், பின்மண்டை சப்பிப் போனால் பேச்சுக் குன்றும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சைமன் பாரோன் கோஹன் மற்றும் அவரது மாணவி ஸ்வெத்லேனா லுட்ச்மயா ஆய்வும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வயது பெண் குழந்தைகளையும் அதே வயது ஆண் குழந்தைகளையும் ஆராய்ந்தார். பெண் பிள்ளைகள் அதிக நேரம் தம் அம்மா முகத்தைப் பார்ப்பதிலேயே பொழுதைப் போக்கினவாம். அதனால் தான் வளர்ந்த பிறகும் அன்னை, அண்ணி, சித்தி, மனைவி, கொழுந்தியாள், சக்களத்தி என்று சின்னத்திரைத் தொடர்களில் மூழ்குகின்றனரோ, என்னவோ? அதில் வரும் மூர்க்கக் குணம் கொண்ட மகளிரிடம் திட்டு வாங்கும் பாத்திரங்கள் கண்டு மூக்கைச் சிந்தாமல் அவர்களால் இருக்க முடியாது.

ஆய்வு அறைக்குள் மொத்தக் குழந்தைகளுக்கும் சின்னத்திரைப் படம் போட்டுக் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலும் சிறுமி முகத்தையோ, மாணவியையோ பார்த்த பெண் குழந்தைகள், பெரும்பாலும் கார் முதலான கனரக விரைவு வாகனங்களையே உற்று நோக்கிய குழந்தைகள் பலரும் சுட்டிப்பயல்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இனி மன அழுத்த நேரத்தில் ஆண்களும் பெண்களும் நடந்துகொள்ளும் விதம் வேறுமாதிரி ஆனது. பெண்டிர் தலைவிரி கோலமாய் அழுவார்கள். ஆண்கள் கல் நெஞ்சக்காரர்கள். துக்கத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

உள்ளுக்குள் அடக்கிப் புழுங்கிக் கலங்குவார்கள். காரணம், அவரவர் மூளையின் அடிமண்டையில் இருக்கும் அமிக்தாலா சுரப்பிதான். ஜெர்மனியில் மக்தேபர்க் நகரில் ஒட்டோ வான் கியுரிக்கி பல்கலைக்கழகத்தில் கத்தரீனா பிரான் தன் சகாக்களுடன் கண்டுபிடித்த உண்மை இது. ஆண்களின் அமிக்தாலா பாதாம் பருப்புக் கனத்திலும், பெண்களுக்கு கடலைப்பருப்பு அளவிலும் இருக்கிறதாம்.

அன்றியும், பேறுகாலம், பெண்களுக்கு இன்னொரு மனச்சோர்வு முனை. அதிலும் பலமுறை கர்ப்பம் தரித்தும் கருக்கலைப்பு செய்து கொள்பவர்கள் இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். பெற்ற பிள்ளையை ஊரறிய வளர்க்க இயலாமல் தத்தளிப்பவர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் மனநோய்க்கு உள்ளாகின்றனராம். வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடுகளில் வயதுக் கோளாறினால் தவறான வழியில் கருத்தரித்தவர்கள் மனத்தளர்வினால் நொந்து நூலாகி வாழ்கின்றனர். மாரிலாந்து மாகாணத்தில் பால்டிமோர் நகரில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியை வீணா தாஸ் கருத்து இது.

அவ்வாறே, பாகிஸ்தானில் அத்தகைய மனத்தளர்வு நோயுற்ற தாய்மார் ஈன்று எடுத்த குழந்தைகள் பிறந்து ஆறு மாதங்கள் வரை உடல் மெலிந்து காணப்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்காக உள்ளதாம். பணக்கார நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவ்வகையில் திருமணத்திற்கு முன்னமேயே தாய்மை அடைபவர்கள் எண்ணிக்கை வளர்ந்து வரும் நாடுகளில் இரண்டு மடங்காக உள்ளதாம். இத்தகைய துயரச் சம்பவத்திற்கு ஆளானோர் ஏறத்தாழ 20 - 30 சத வீதம்பேர்.

தினமணி

Thinakural


- kuruvikal - 01-06-2006

இது தொடர்பில் களத்திலும் பல பக்கங்களுக்கு முன்னர் ஒரு கருத்துப் பரிமாற்றம் நடந்தது..!

தகவலுக்கு நன்றி வானம்பாடி..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathuran - 01-06-2006

ம்ம் நல்ல ஆய்வுதான் பல விடயங்களை தொட்டு சென்றிருக்கின்றார்கள். மனித மூழையில் இவ்வளவு இருக்கிறதா?? <b>அறியத்தந்த தினமணிக்கும் ஆக்கத்தை இணைத்த வானம்பாடிக்கும் நன்றிகள்</b>


- Danklas - 01-06-2006

ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா, போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? Confusedhock: Confusedhock:

அது இருக்கட்டும் வானம்பாடி ரெடியா இருங்க,,, அட கள பெண்கள் உறுப்பினர்களின் கோவ ரக்கட் உங்களை நோக்கி வரப்போகுது,, ஏனய்யா இப்படியான செய்திகளை இங்க போட்டு எங்களை அவமானப்படுத்திறீங்க எண்டு,,,, (அட அவங்க நினைப்பதிலும் நியாயம் இருக்குத்தானுங்களே) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vaanampaadi - 01-06-2006

Danklas Wrote:ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா, போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? Confusedhock: Confusedhock:

அது இருக்கட்டும் வானம்பாடி ரெடியா இருங்க,,, அட கள பெண்கள் உறுப்பினர்களின் கோவ ரக்கட் உங்களை நோக்கி வரப்போகுது,, ஏனய்யா இப்படியான செய்திகளை இங்க போட்டு எங்களை அவமானப்படுத்திறீங்க எண்டு,,,, (அட அவங்க நினைப்பதிலும் நியாயம் இருக்குத்தானுங்களே) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்த நிமிடத்திலிருந்து வானம்பாடி தலமறைவு.... எனி ஏவுகிற ராக்கெட்டுகளை ஏவுங்கள்..... உசிர் பொழச்சா மீண்டும் வந்து சந்திக்கிறேன்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 01-06-2006

Quote:இந்த நிமிடத்திலிருந்து வானம்பாடி தலமறைவு.... எனி ஏவுகிற ராக்கெட்டுகளை ஏவுங்கள்..... உசிர் பொழச்சா மீண்டும் வந்து சந்திக்கிறேன்......

வாணம்பாடிக்கு நல்ல புரியுது ஆயிரம் ஆன்களை சமாளிக்கலாம் ஆனால் ஒரு பெண்ணை சாமளிப்பது ம்ம்
சொல்லவே வேண்டாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 01-07-2006

Danklas Wrote:ஓ அதுதான் அஸ்வினி 2005, நர்மிதா இருவிழி மீரா, போன்ற பெண்கள் பெய****** வரும் சில ஆ***** பல செய்திகளை அலசி ஆராய்கிறார்களோ?? Confusedhock: Confusedhock:
தம்பி உம்மடை வருஷ பலனும் அவ்வளவு நல்லதில்லைபோல கிடக்கு எதுக்கும் எங்களுக்கு ஒரு பக்கத்தை திறக்க வைச்சிடாதையப்பு........


- Rasikai - 01-09-2006

தகவலுக்கு நன்றி வானம்பாடி.

அதுசரி ஆண் மூளையும் பெண்மூளையும் நிச்சயமாக வித்தியாசமாதான் இருக்கும் இருக்கணும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->