![]() |
|
"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: "இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை (/showthread.php?tid=1571) |
"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை - Vaanampaadi - 01-07-2006 "இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அறிவுரைப்படி, உள்துறை, பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்சர்கள் நுண்ணறிவு துறையின் தேசிய இயக்குனர் ஆகியோர் சேர்ந்து தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்கர்களுக்கு அயல்நாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். குழந்தை பருவத்திலிருந்தே இந்த மொழிகள் கற்பிக்கப்படும். பள்ளிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் கூட இவை சொல்லித் தரப்படும். வெளிநாட்டு மொழி தெரிந்தவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Dinamalar - ஊமை - 01-08-2006 என்ன கொடுமையையா இது அப்ப தமிழ் மொழி என்ற ஒரு மொழி இருப்பது அவருக்கு தெரியவிலையா? தமிழ் நாட்டில் இருந்து தானே நிறைய தமிழர்கள் மைக்குறோசொப்ட் நிறுவனத்தினால் மிக குறைந்த சம்பளத்தொகையில் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர். அது சரி டமில் நாட்டுல அதிகம் இங்கிலீசு பேசுவதால் தானோ புஸ் தமிழை ஓரங்கட்டிவிட்டார். தமிழ் நாட்டு தமிழரை பார்த்தால் பெரும்பாலானோர் ஸ்ரேற்ஸில தானே படிக்கிறார்கள். அது தானே அவர்களுக்கும் பெருமை அப்ப புஸ் தமிழ் நாட்டு தமிழரை ஒரு பொருட்டாகவே கணிக்கவில்லை போலும். |