![]() |
|
தகப்பனுக்கும் மகளுக்கும் வாள்வெட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தகப்பனுக்கும் மகளுக்கும் வாள்வெட்டு (/showthread.php?tid=1551) |
தகப்பனுக்கும் மகளுக்கும் வாள்வெட்டு - Vaanampaadi - 01-08-2006 <b>தகப்பனுக்கும் மகளுக்கும் சாவகச்சேரியில் வாள்வெட்டு</b> சாவகச்சேரியில் நேற்று சனிக்கிழமை தகப்பனும் மகளும் வாள் வெட்டுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சாவகச்சேரி தபாற் கந்தோர் வீதியில் உள்ள பொலிசன் கப்பலோட்டிய தமிழன் (வயது 47) அவரது மகள் செல்வி க.பிறேமிளா (வயது 18) ஆகிய இருவருமே தலையில் வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்து வரப்பட்டுள்ளார்கள். மனைவி க.சந்திரமதி அடி காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பகல் 2 மணியளவில் முகத்தை இராணுவத்தினர் போன்று துண்டினால் மறைத்துக் கட்டிக் கொண்டு வந்தவர்களே இவ்வாறு தங்களை வாளினால் வெட்டியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Thinakural |