Yarl Forum
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் (/showthread.php?tid=1544)



பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் - Vaanampaadi - 01-08-2006

பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம்

பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன.

நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்.

இந்த கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்பதை நிரூபித்து காட்ட செயற்கையாக நில அதிர்வுகளும் நிருபர்கள் கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.

Maalaimalar