![]() |
|
மகனை கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மகனை கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர் (/showthread.php?tid=1537) |
மகனை கொலை செய்ய அனுமதி கேட்கும் பெற்றோர் - SUNDHAL - 01-08-2006 ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார். சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது. முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான். அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது. அவனது மனநோயை குணமாக்க ரூ.70 ஆயிரம் வரை செலவழித்து விட்டனர். ஆனாலும் நோய் கொஞ்சம் கூட குணமாகவில்லை. சவுடய்யாவின் நடவடிக் கையால் 2 சகோதரிகளும் திருமணமாகியும் வாழா வெட்டியாக வீட்டில் இருக்கிறார்கள். மகனின் தொந்தரவு அதிக மானதால் அவனை கண்ணையா சங்கலியால் கட்டிப்போட்டார். பலசாலியான அவன் அதையும் உடைத்து விட்டு தப்பி விடுகிறான். முடிவில் அவனை கொன்றால் தான் அனைவரும் நிம்மதியாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு கண்ணையா வந்துள்ளார். அவனை கொலை செய்தால் போலீஸ் பிரச்சினை வராமல் இருக்க அனுமதி கேட்கிறார். இதற்காக பலரிடம் கையெ ழுத்து வேட்டையும் நடத்தி உள்ளார். இதற்கிடையே சவுடய்யாவின் அட்டூழியம் கார ணமாக போலீசார் அவனை கைது செய்துள்ளனர். Thanks:malaimalar... |