Yarl Forum
சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோ (/showthread.php?tid=1533)



சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோ - Vaanampaadi - 01-08-2006

ஞாயிறு 08-01-2006 22:06 மணி தமிழீழம் [நிருபர் மாறன்]

சிறீலங்கா கடற்படையினருடன் படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளோம் - கண்காணிப்புக் குழு
கடற்படையினரின் ரோந்து படகுகளில் பயணிப்பதை நிறுத்தியுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.திருகோணமலை துறைமுகப்பகுதியில் நேற்று கடற்படையினரின் படகின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதில் பயணித்த 13 கடற்படையினர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையி;ல் கடற்படையினரின் படகுகளில் பயணம் செய்வது ஆபத்தானது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் தலைவர் ஹப்ருக் ஹோக்லென்ட் தெரிவித்துள்ளார்.

கடற்கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் தமது குழுவினர் தனியான படகில் தமது இலச்சினைகளுடன் பயணம் செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pathivu