![]() |
|
சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் (/showthread.php?tid=152) |
சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் - cannon - 04-18-2006 ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் [புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்] இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளலாம். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் அதன் உறுப்பினர்களின்; பாதுகாப்பையும், உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முயல்வதுடன் அவர்களின் தொழில்சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளிலும் உதவிகளை மேற்கொள்வதற்காள முயற்சிகளையும் மேற்கொள்ளும். அத்துடன் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் இந்த ஒன்றியம் விசேட கவனம் செலுத்தும். இலண்டன்; சிவயோகம் கலையரங்கில் கடந்த 9ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்ட சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் நடப்பு ஆண்டுக்கான தலைவராக பி.பி.சி. தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஒன்றியத்தின் துணைத் தலைவராக இலங்கையில் முன்னாள் தமிழ் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவர் இரா. துரைரத்தினமும் செயலாளராக டென்மார்க்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் குகனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் ஆறு பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. இலண்டனில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் கிளை நிறுவனங்களை குறைந்தது ஒவ்வொரு நாட்டிலும் அமைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பரந்து வாழும் தமிழ் செய்தியாளர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தில் இணைந்து கொள்வதன் மூலம் செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு வழிவகுக்க முடியும் என்றும் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் அமைப்பு வேலைகள்; துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஒன்றியத்துக்குரிய இணையத் தளம் மற்றும் இணைய முகவரி மூலம் சகல பத்திரிகையாளர்களும் ஒன்றியம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதுடன் ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஒன்றியத்தின் செயலாளர் குகன் தெரிவிக்கிறார். http://www.eelampage.com/?cn=25593 - Ilayathambi - 04-18-2006 "பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளலாம்" அப்படி என்றால் ரிபிசி, தேனி எல்லாம் இணைந்து கொள்ளலாமோ? - Netfriend - 04-18-2006 நல்லவிசயம்..... வேலையை தருவோம் இனிஉங்களுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதில் நல்லதாக எழுதியுள்ளார்களா அல்லது என்னப்பா எழுதியுள்ளார்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? அவதானிக்க... இந்த முகவரியில்... பிரஞ்சு மொழியில்உள்ளது...:x http://copex.metro.st/ftp/20060418_Paris.pdf இதில் 8ம் பக்கத்தை பாருங்கள்... - nallavan - 04-18-2006 அவர்கள் மட்டுமில்லை, இந்திய, மலேசிய ஊடகங்கள் என்று யாருமே இணைந்து கொள்ளலாம். இருக்க வேண்டிய தகுதி, தமிழில் ஊடகம் நடத்துவது மட்டுமே. - கந்தப்பு - 04-19-2006 Ilayathambi Wrote:"பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து கொள்ளலாம்" உமக்கின்ன லொல்லா?. அவை ஏற்கனவே எட்டப்பர் ஊடகங்கள் என்ற அமைப்பில் இருக்கின்றனவே |