Yarl Forum
பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல் (/showthread.php?tid=151)



பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல் - pandiyan - 04-18-2006

இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை?
யாராவது விளக்குங்களேன்.

நன்றி

[size=13]தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்


- கந்தப்பு - 04-19-2006

அதை ஏன் துயர் பகிர்வு/ நினைவுகூறல் பகுதியில் இணைத்துள்ளீர்?


- MEERA - 04-22-2006

இங்குள்ள பெரும்பாலான தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் பதிந்து உள்ளபோதிலும் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை. எனவே தமிழர் தரப்பு நியாங்களை அரசியல்வாதிகளுடன் விவாதிப்பதற்கு கடினமாக உள்ளது. எனவே தமிழர்கள் எல்லோரும் நடைபெறவிருக்குக்கும் தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள்.

யாருக்கு வாக்களிப்பது என்பது உங்களின் சுதந்திரமான முடிவு.


- நேசன் - 04-23-2006

ஆக்கபூர்வமான கருத்துக்களை வைத்து எந்தக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்று அறியத்தாருங்கள்


- Thala - 04-23-2006

<img src='http://www.libdems.org.uk/media/images/template/img_libdem_logo.gif' border='0' alt='user posted image'>

லிபரல் கட்ச்சிக்குத்தான் பல சிறுபான்மையினர் வாக்களிப்பதாக சொல்கிறார்கள்... குறிப்பாக முஸ்லீம்கள்...

இந்த தேர்தலில் பல தமிழ் வேட்பாளர்கள் லேபர் கட்ச்சி சார்பாக போட்டியில் இருக்கிறார்கள்... முதலில் அவர்களை எல்லாம் நம்பலாமா தெரியவில்லையே...! :roll: :roll: :roll:


- karu - 04-23-2006




- putthan - 04-23-2006

quote="கந்தப்பு"]அதை ஏன் துயர் பகிர்வு/ நினைவுகூறல் பகுதியில் இணைத்துள்ளீர்?[/quote]

கந்தப்பு இல்லாவிட்டால் நகைச்சுவை பகுதியிலும் இணைக்கலாம்.


- Subiththiran - 04-23-2006

<b>லண்டனில் சட்பரி பகுதியில் தொழில்கட்சியின் தேர்தல் வேட்பாளராக களத்தில் நிற்கின்றார் நண்பன் கண.நாகேரதன்.</b>



லண்டனில் சட்பரி பகுதியில் தொழில்கட்சியின் தேர்தல் வேட்பாளராக களத்தில் நிற்கின்றார் நண்பன் கண.நாகேரதன். தொழில் கட்சியின் நீண்டகால உறுப்பினரான இவர் பிறான் வடக்குத் தொகுதியின் தொழில்கட்சி முக்கியஸ்தராகவம் கணக்காளராகவும் செயற்பட்டு வருகிறார். 2006 ம் ஆண்டு தொழில்கட்சி உறுப்பினர்களின் மஞ்சஸ்ரர் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட இவர் நடேஸ்வரா கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளையின் செயலாளராக செயற்பட்டு வருகிறார். தமிழ் பாடசாலைகளின் விளையாட்டுத்துறைகளின் கூட்டமைப்பின் செயற்குழு அங்கத்தவரான இவர் காங்கேசன்துறையினை தனது புூர்வீகமாக உடையவர். நடேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவனான இவர் கிங்பரி பகுதியில் கணக்காளராக செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களுக்கும், தாயகத்திற்கும் உதவி செய்ய விரும்புவதாகவும், தன்னார்வ தொண்டனாகவும் செயற்பட விரும்பவதாகவும் தெரிவிக்கின்றார்.

நிதர்சனம்.


- pandiyan - 04-23-2006

இவர் இதுவரைக்கும் இன்னா பண்ணினார் என்று யாருக்கும் ஏதாவது தெரியுமா?

எந்த மாதிரி எமக்கு உதவி பண்ண போகிறார்?


- Anandasangaree - 04-23-2006

இவர் இதுவரை தமிழருக்கு ஒண்டும் பன்னவில்லை.

எனக்கு தெரிந்த அளவில் தயா இடைக்காடரை பல விடயங்களில் நாங்கள் ஆதரிக்கலாம்.

அவர் புகளை தேடாமல் இரகசியமாக தொழில்படும் ஒருவர்.

தனிப்பட்ட நல்ல உறுவுகளை பல மட்டங்களில் வைத்திருப்பவர்.

நான் அவருக்கு புகள் தேட வரவில்லை ஆனால் அவரிடம் பல விசேட குணாதிசயங்கள் இருக்கு.


- Anandasangaree - 04-23-2006

<img src='http://img105.imageshack.us/img105/1200/66er1.jpg' border='0' alt='user posted image'>