Yarl Forum
வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் (/showthread.php?tid=1480)



வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - Vaanampaadi - 01-11-2006

<b>வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை</b>
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். நாட்டின் அவசரகாலச் சட்டம் நாடைமுறைப்படுத்தப்பட்டுள்து.

இது அரசாங்க அதிகாரிகளுக்கு பரந்தளவு அதிகாரத்தை வழங்குகிறது. எனவே அரசினதும் பாதுகாப்புப் படையினரினதும் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகிறீர்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கடல் கோள் காரணமாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்ததுடன் ;நாட்டின் நான்கு திசைகளினதும் கரையோரங்கள் பெரும் பாதிப்புள்ளாகின. இதன் போது பாதிக்கப்பட்ட விடுதிகள் மற்றும் வசதிகள் மீள புனரமைக்கப்பட்டுள்ள போதிலும் அப்பகுதிக்கான சுற்றுலாத்துறை வசதிகளை உறுதிப்படுத்திய பின்னNh உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்தோர் எதிர் நோக்கும் பொதுவான பிரச்சினை கடவுச் சீட்டுகளை தொலைப்பதும் உடல் நிலை பாதிக்கப்படுவதுமாகும். இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முன்னர் கட்டாயமாக மருத்துவ காப்புறுதியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைப்பு : : SanJay
Wed, 11 Jan 2006, 12:44:24 GMT

http://www.toplankasri.com/index.php?subac...t_from=&ucat=1&