Yarl Forum
தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை (/showthread.php?tid=1478)



தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை - Vaanampaadi - 01-11-2006

புதன் 11-01-2006 16:11 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]

<b>தென்மராட்சி மட்டுவிலில் இளம் பெண் சுட்டுக்கொலை.</b>
இன்று நன்பகல் 1.15 மணியளவில் இனம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு சமுர்த்திஅபிவிருத்த உத்தியோகத்தர் ஒருவர் பலியானார். சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரியாக கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

மட்டுவில் தெற்கு தோப்பு என்னும் இடத்தைச் சேர்ந்த செல்வி. கணபதிப்பிள்ளை பவளராணி வயது 32 என்பவரே பலியானவராவார். இவரின் வீட்டிற்குச் சென்ற இனம் தெரியாதவர்கள் இவரை அழைத்துக் சென்று கதைத்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இவரைச் சுட்டுவிட்டு ஆயுததாரிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இவருடைய துப்பாக்கிப் பிரயோகத்தியகான காரணம் தெரியவில்லை. இவர் கடந்த காலத்தில் ஈ.பி.டி.பி அமைப்பினருடன் இயங்கியதன் மூலம் குறிப்பிட்ட வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பிட்ட இடத்திற்கு இராணுவத்தினரும் சாவகச்சேரிப் பொலிசாரும் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிக்கும் பொலிசாரினால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வையிட்ட நீதிபதி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வையித்திய சாலையில் ஒப்படைக்கும் படி பணித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&