![]() |
|
சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. உறுப்பினர் தாக்குதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. உறுப்பினர் தாக்குதல் (/showthread.php?tid=1410) |
சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. உறுப்பினர் தாக்குதல் - வினித் - 01-13-2006 <b>சிங்களக் காடையர்களால், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல்! [சனிக்கிழமை, 14 சனவரி 2006, 02:13 ஈழம்] [காவலூர் கவிதன்] திருகோணமலை புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள அபயபுர கிராமத்தில், ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த விஜேசேகர, வழிமறிக்கப்பட்டு, இவரது வாகனம் தாக்கப்பட்டதுடன், இவர்மீதும் தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த சிறீலங்கா பொலிசார், ஆத்திரத்துடன் தாக்குதல் நடாத்திய சிங்கள மக்களைக் கலைத்து, விஜேசேகரவைக் காப்பாற்றியுள்ளனர். சிங்கள விமுக்தி முன்னணி (எஸ்.வி.எஃப்) என்ற அமைப்பினால் நான்கு நாட்களுக்கான கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்றும் ஹர்த்தால் தொடர்கிறது. இந்நிலையில், இந்த அமைப்பின் பின்னணியிலிருந்து ஆதரவு வழங்குவதாக ஜே.வி.பி. மீது சிங்கள மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இந்த ஹர்த்தாலினால் பாதிப்படைந்த அபயபுர கிராம மக்கள், அப்பகுதியின் வீதியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்து, தாக்குதல் நடாத்தியுள்ளனர். வாகனத்தைவிட்டு கீழே இறங்கிய உறுப்பினரை, மிகவும் கேவலமாகப் பேசியதுடன், தாக்கவும் முற்பட்டுள்ளனர். இந்நிலையில் பொலிசார் விரைந்து வந்ததால், மேலதிக குழப்பங்களின்றி, இவர் அங்கிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிகிறது. பொலிசார் வந்தும்கூட அங்கிருந்து விலக மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர், பின்னர் அவரது கந்தளாய் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன </b> நன்றி: புதினம் - ஆறுமுகம் - 01-13-2006 சனம் சண்டை பயத்தில திணறுது போல கிடக்கு, அதுகளுக்கும் என்ன சண்டை தேவையானதா என்ன. அதுக்காக அதுகள் தானே கஸ்ரப்படப்போகுதுகள். - MUGATHTHAR - 01-14-2006 முன்னைய காலங்களில் 90லிருந்து யுத்தநிறுத்த காலம் வரை திருமலையில் சிங்கள மக்கள் இருந்தாலும் இப்பிடியான கடையடைப்பு போராட்டங்கள் தமிழர் மீதான தாக்கதல்கள் பெரிதாக நடைபெறவில்லை காரணம் அங்கு இருக்கும் சிங்கள மக்கள் 75வீதம் வியாபாரம்தான் தொழிலாக கொண்டவர்கள் அதனால் இப்பிடிதான போராட்டங்களில் அவர்களுக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது ஆனால் கடந்த 3வருடங்களில் நிறைய ஜேவிபி ஆதரவாளர்கள் குடியேற்றப்பட்டு சிங்கள இனவாதம் மேலோங்கப்பட்டிருப்பது அண்மைக்கால திருகோணமலை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. . .இங்குள்ள ஜேவிபி காடையர் கூட்டம் இராணுவ ஆதரவு இருப்பதால் துணித்து சில் தாக்குதல்களை நடத்துகிறது ஆன படியால் இந்த கடையடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் கோபம் கொண்டு ஜேவிபி உறுப்பினரை தாக்கியது நல்ல விடயம்தான்............. |