![]() |
|
தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னைபூபதி நினைவுநாள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னைபூபதி நினைவுநாள் (/showthread.php?tid=141) |
தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னைபூபதி நினைவுநாள் - Subiththiran - 04-19-2006 [size=18][b]தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வுகள் இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கையினை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகி அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் தமிழர் தாயகப் பகுதிகளின் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது. தாயகப் பகுதிகளில் இன்று காலை 9.00 மணிக்கு தேசியக் கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. தமிழீழ காவல்துறை நடுவகப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு காவல்துறையின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் க.கண்ணாளன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ காவல்துறையின் கிளிநொச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செ.தனஞ்செயன் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றிவைத்தார். அன்னை பூபதி திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை போராளி தாமரை ஏற்றினார். தியாகி அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை உள்ளகப் பாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் வண்ணக்கிளி அணிவித்தார். கிளிநொச்சிப் பிரதேசத்திற்கான பிரதான நிகழ்வு கிளிநொச்சி அரச செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை வணிக ஒன்றியப் பொறுப்பாளர் வெற்றியரசன் ஏற்றினார். அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கரைச்சி பிரதேச செயலர் ஏற்றி வைத்தார். மலர்மாலையினை கிளிநொச்சி மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளர் அணிவித்தார். நாட்டுப் பற்றாளர்களின் திருவுருவப்படங்களிற்கு உறவினர்கள் ஈகைச் சுடர் ஏற்றி வைத்து மலர் மாலை அணிவித்தனர். தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உள்ளிட்டோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். 18.4.06 இல் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் நிகழ்வுகள்: வவுனியா புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. புளியங்குளம் ஊரக மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் ஜெயரூபன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை புளியங்குளம் தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் கந்தசாமி ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை புளியங்குளம் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்திரன் ஏற்றினார். திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரரின் தந்தை ஏற்றினார். மலர்மாலையினை எல்லைப்படை மாவீரரின் தாயார் திருமதி கருணாகரன் அணிவித்தார். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானம் சிறப்புரையாற்றினார். புளியங்குளம் பாலமோட்டை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கிழவிகுளம் தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் சிவஈசன் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை வவுனியா மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஆவர்த்தனா ஏற்றினார். திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை மாவீரர் கண்ணனின் சகோதரன் ஏற்றினார். மலர்மாலையினை சுகாதாரத் தொண்டர் ஜெயா அணிவித்தார். அப்பிரதேசத்தில் உயிர்நீத்த நாட்டுபற்றாளர்கள் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. அவர்களின் குடும்பத்தினரும் மதிப்பளிக்கப்பட்டனர். ஆவர்த்தனா, பாலமோட்டை அரசியல்துறைப் பொறுப்பாளர் பருவேல் ஆகியோர் நினைவுரையாற்றினர். முல்லைத்தீவு அரசியல்துறைச் செயலகத்தில் வணக்க நிகழ்வு பிற்பகல் நடைபெற்றது. நிகழ்விற்கு சகிலா தலைமைதாங்கினார். பொதுச்சுடரினை நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரட்ணம் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை முல்லை நகர தமிழீழக் கடற்படையின் தளபதி தினேஸ் ஏற்றினார். நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தனர். தமிழீழ கடற்படையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பூரணி, நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரட்ணம், கரைத்துறைப்பற்று விசேட ஆணையாளர் கிருஸ்ணபிள்ளை ஆகியோர் நினைவுரை நிகழ்த்தினர். விசுவமடுப் பிரதேசத்தில் வணக்க நிகழ்வு தர்மபுரம் பாடசாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊரக மேம்பாட்டுப் பேரவைத்தலைவர் புஸ்பராசா தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை மாவீரர் அசோக்குமாரின் தாயார் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் சோழநிலவன் ஏற்றினார். ஈகைச்சுடரினை தர்மபுரம் வர்த்தக சங்கத்தலைவர் சந்திரகுமார் ஏற்றினார். மலர்மாலையினை தர்மபுரம் மாதர் சங்கத்தலைவி கல்யாணி அணிவித்தார். சரணவன், விசுவமடுப் பிரதேச சிறப்பு வேலைத்திட்டப் பொறுப்பாளர் நர்மதன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். திருகோணமலை ஈச்சிலம்பற்று வட்டவன் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு ஆசிரியர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பொதுச்சுடரினை மாவீரர் அருளீசனின் தந்தையார் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் ஏற்றினார். ஈச்சிலம்பற்றுக் கோட்ட மாணவர் ஒன்றியத்தலைவர் பாஸ்கரன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். சி.எழிலன், ஈச்சிலம்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி வெற்றிவேல் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். கிளிநொச்சி அரச செயலக வளாகத்தில் பெண்கள் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரஜனி தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மாவீரர் பணிமனை துணைப்பொறுப்பாளர் அர்ச்சனா ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை கிளிநொச்சி மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் பூவிழி ஏற்றினார். ஈகைச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனை நிர்வாக இணைப்பாளர் இனியவன் ஏற்றினார். மலர் மாலையினை கிளிநொச்சிப் பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் போர்ப்பிரியன் அணிவித்ததார். வட்டக்கச்சிப் பிரதேசத்திற்கான நிகழ்வு கல்மடுநகர் முன்பள்ளியில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசப் பொறுப்பாளர், வலயப் பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழீழ மாணவர் அமைப்பு நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு முருகு பாரிமகன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை முல்லை மாவட்ட கல்விக்கழகப் பொறுப்பாளர் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன் ஏற்றினார். அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சிறுவர் பராமரிப்பு இல்லப்பொறுப்பாளர் திருமாறன் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப்பணியகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு நிர்வாக அலுவலர் ஜெராட் தலைமை தாங்கினார். தமிழீழ மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் செ.முகுந்தன், தமிழர் புனர்வாழ்வுக்கழக்தின் நிக்கொட் திட்டப்பணிப்பாளர் சுடர் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். அம்பாறை மாவட்ட நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு நிகழ்வு மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் நடைபெற்றது. உடும்பன் குளக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வீரமணி தலைமையில் காலை 10 மணிக்கு நடைபொற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 15 நாட்டுப்பற்றாளர் குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டன. நாட்டுப்பற்றாளர் குடும்பங்களுக்கான நினைவுப் பரிசினை அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ஜெனார்த்தனன் வழங்கினார். அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வினோ, மாவீரர் குடும்ப நலன்காப்பக பொறுப்பாளர் பத்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், அம்பாறை பாவட்டா, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, வவுனியா கனகராயன்குளம், மன்னார் அடம்பன், கிளிநொச்சி நகர்ப்பகுதி, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, யாழ்ப்பாணம், பளையிலும் மாவட்டங்களுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 1988 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி மார்ச் 19 இல் தொடங்கினார். இந்திய அரசு நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் ஈகைச் சாவைத் தழுவினார். மக்கள் எழுச்சியின் குறியீடான அன்னை பூபதியின் 18 ஆம் ஆண்டு நினைவுநாளில் நாட்டுப்பற்றாளர்கள் அனைவரும் தமிழீழ மக்களால் நினைவில் கொள்ளப்பட்டு போற்றப்படுகின்றனர். puthinam.com |