Yarl Forum
"ஆறாவது அகவையில் எம் "ttn"..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=18)
+--- Thread: "ஆறாவது அகவையில் எம் "ttn"..... (/showthread.php?tid=1403)



"ஆறாவது அகவையில் எம் "ttn"..... - cannon - 01-14-2006

தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம்.

"நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க!

புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்!

ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!


- SUNDHAL - 01-14-2006

வாழ்த்துக்கள் TTN <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 01-14-2006

நிகழ்ச்சிகளை பார்த்தது இல்லை என்றாலும் வாழ்த்துக்கின்றேன் வாழ்க உங்கள் சேவை


- MUGATHTHAR - 01-14-2006

TTNக்கு வாழ்த்துக்கள்.... அதுதான் 3நாளுக்கு இலவசமாகப்போட்டிருக்கினம் என்ன.............


- ப்ரியசகி - 01-14-2006

ஆமா..இலவசமாக போட்டிருக்காங்க..ரமாக்கா பாருங்கோ...

ttn. (தமிழ் ஒளி) க்கு எனக்கு வாழ்த்துக்களும்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sri - 01-14-2006

தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் தமிழ் தொலைக்காட்சி இணையத்திற்கு(TTN) எனது வாழ்த்துக்கள்.


- தூயவன் - 01-14-2006

எதிரின் பொய் உரைகளைத் தகர்த்து தமிழரின் துன்பங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் TTNக்கு வாழ்த்துக்கள்


- Thala - 01-14-2006

பல சிக்கல் களுக்கு மத்தியிலும் அயராது தடைகளைந்து சேவையாற்றி வரும் "ttn" ( தமிழ் தொலைக்காட்ச்சி இணையம்) பல்லாண்டுகாலம் சேவையைத் தொடர வாழ்த்துக்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 01-14-2006

[size=18]TTNக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அத்துடன் TTN கலைஞர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.


- ஊமை - 01-14-2006

[size=18]T என்பதை நாம் பெருமையோடு நினைவு கூருவதிலே எண்ணற்ற பேருவகையடைகிறோம்.


- சந்தியா - 01-14-2006

TTNக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


இன்று போல் என்றும் தங்கள் கணியைத் தொடர எங்கள் அனைவரது வாழ்த்துக்களும்


அத்துடன் TTN கலைஞர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- DV THAMILAN - 01-14-2006

ttnக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


- shanmuhi - 01-14-2006

TTNக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..


- poonai_kuddy - 01-14-2006

தமிழ்தொலைக்காட்சி இணையத்துக்கு வாழ்த்துக்கள்...................... தமிழரின்ட தேசிய தொலைக்காட்சி தொடந்தும் தன்ர பணிய நல்லா செய்யட்டும்.................எல்லாரும் ரிரிஎன் காட் வாங்கிட்டியளோ?


- Mathuran - 01-14-2006

[size=24]<b>தமிழ் தொலைகாட்சி இணையத்திற்கு எனது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். </b>


- வினித் - 01-14-2006

<span style='font-size:30pt;line-height:100%'>தமிழ்தொலைக்காட்சி இணையத்துக்கு வாழ்த்துக்கள்</span>


- iruvizhi - 01-15-2006

தமிழ்த்தொலைக்காட்சி இணையத்திற்கு எமது வாழ்த்துக்கள்.

<b>தமிழரின் இன்னலை
துடைக்கும் ஒளியே!
தரணியை தமிழால்
பார்க்கும் விழியே!

அவலத்தின் ஓலத்தை
அடக்க முனைந்த
அரசபயங்கரவாதத்தை
அகிலம் அறிந்திட
அயராது பாடு பட்டாய்.

இருட்டினில் இல்லர் நாம்
இலட்சிய ஒளி கொடுத்து
ஈழமதை மீட்டெடுப்போம்
என இயம்பிய
இலட்சிய வான்களின்
கனவுதனை நினைவாக்க,
அறியாமை போக்கி
விழி திறந்து
மானத்தோடு நம்மவர்கள்
நடைபோட வழிசமைத்தாய்

மதிகெட்ட மாந்தரல்லர்
மதிபட்டு போகுதற்கு.
நீரிலே அமிழ்த்தினாலும்
மிதந்தெழுவோம்
என்பது போல்
கலை கலாச்சாரமென
கண்ணியமாய் கலந்து தந்தாய்.

காலம் தந்த தேசியத் தலைவனை
நினைந்து நின்றாய்.
மாவீரரின் தியாகத்தை
பாடிநின்றாய்.

ஆறாவது அகவையில்
இன்று நீ!
ஆரத்த் தழுவி உனை
உன் எண்ணங்கள் ஈடேற
வாழ்த்துகின்றோம்.

ஓங்கி ஒளிர்க!</b>


- kurukaalapoovan - 01-15-2006

தமிழ் ஒளி இணையம் என்ற தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவைகளை தொடரவும் விரிவுபடுத்தவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழிரின் தேசிய உணர்வை மைய்யமாக கொண்ட தொலைக்காட்சியாக விளங்கும் TTN இனை விளம்பரதாரர்களும் மற்றும் சந்தா அட்டை வேண்டியும் புதுப்பித்தும் பாவனையாளர்களும் வலுச்சேர்க்க வேண்டும்.

TTN தனது நிகழ்ச்சிகளில் சேவைகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் முன்னேற்றங்கள் பற்றிய யோசனைகளையும் வைய்யுங்கள்.

-1- எமது தாயகத்தின் பெருளாதாரம் பொருண்மிய மேம்பாடுகள் தக்கவைக்கக் கூடிய அபிவிருத்திகள் (sustainable development) பற்றிய நிகழ்ச்சிகளை கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டும். Television Trust for the Environment (www.tve.org)இன் நிகழ்ச்சிகளான Hands On போன்றவை மொழிபெயர்க்கப்பட்டு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் ஆவணப்படுத்தப்படும் தீர்வுகள் எமது தாயக பொருண்மியம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு நேரடியாக பயன்படுத்தக் கூடியவை. இவர்கள் வழர்ந்துவரும் நாடுகளில் உள்ள பிரச்சனைக்களை தெரிவு செய்து ஆய்வு செய்து தீர்வை அமுல்படுத்தும் வரை ஆவணப்படுத்தி விவரிக்கிறார்கள். இவற்றை தாயகத்தில் பணிபுரியும் புரியவிரும்பும் உணர்வாளர்களையும் உள்ளடங்கிய கருத்துப்பகிர்வுகளாக சிறப்புப்படுத்தலாம்.

-2- TTN இல் வரும் செய்தி நேரம் என்ற நிகழ்ச்சிகளை குறைந்த பட்சம் 2...3 ஜரோப்பிய மொழிகளில் உபதலைப்புகளில் பேட முயற்சிக்கவும்.

-3- முக்கிய Breaking News தரத்திற்குரியவையை அடுத்த செய்தி நேரம் வரை காத்திருக்காது ஓடும் உபதலைப்பாக அறிவிக்க முயற்சிக்கலாம். உடனுக்குடன் நடக்கும் செய்திகளை அறிவிக்கும் TamiNet அய் மூலமாக போட்டு இதை செய்யலாம்.

-4- கோடைகால விடுமுறைகளில் ஊடகத்துறை சம்பந்தமாக படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களிற்கு பயிற்ச்சி சந்தர்ப்பங்களை வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதோடு TTN எதிர்காலத்திற்கு தேவையான தரமானவர்களை இனங்கண்டு கொள்ளவும் உதவும்.

-5- Tele Text சேவையை சேர்த்துக் கொண்டால் ஜரோப்பிய மொழிகளில் நிகழ்ச்சிநிரல்கள் செய்திகளை போன்றவற்றை விரும்பிய நேரம் பார்த்துக் கொள்ளலாம்.

-6- (www.tvttn.com) இணையத்தளத்தில் முக்கியமாக தாயகம் சார்ந்த நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிகவிபரங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

-7- தற்சமயம் செய்மதி தொலைக்காட்சி கருவி பூட்டாதவர்களிற்கு TTN இன் தரத்தை அறிந்து கொள்ள கூடிய வகையில் அறிமுக ஒளி இறுவெட்டை (DVD)விழாக்கள் பொதுநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் வைத்து மக்களுக்கு வினியோகிக்கலாம்.


- கீதா - 01-16-2006

தமிழ்தொலைக்காட்சி இணையத்துக்கு வாழ்த்துக்கள்