![]() |
|
தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங (/showthread.php?tid=1401) |
தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங - MEERA - 01-14-2006 <b>தமிழர் தரப்பை தப்புக்கணக்கு போடுகிறார் சரத் பொன்சேகா: பொங்கியெழும் மக்கள் படை </b> சிங்களத்தின் இன்னுமொரு சப்புமல் குமரவாக தன்னை நிலைநிறுத்த முயலும் சரத் பொன்சேகாஇ தமிழர் தரப்பைப்பற்றி தப்புக்கணக்கு போடுவதுதான் வேடிக்கை என்று யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை நேற்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்கள்இ தமது போராட்ட வரலாற்றில் தமக்கு எதிராக சூழுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீராப்பு பேசி போர் முரசு கொட்டிய இராணுவ தளபதிகளையும் கண்டவர்கள். ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல் பிரேமதாசாஇ டி.பி. விஜயதுங்கஇ சமாதானப் புறா சந்திரிகா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி நின்றவர்களே! இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களின் சூழுரைகளுக்கும் ஏவல்களுக்கும் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் வெளிச்சம். அத்துலக் முதலிஇ ரஞ்சன் விஜயரட்னஇ அனுருத்த ரத்வத்தஇ போன்ற பாதுகாப்பு அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக விட்ட சவால்கள் யாவும் வெற்று வேட்டுக்களாகிப் போனது வரலாநு. பிரிக்கேடியர் வீரதுங்க முதல் ஹமில்டன்; வணசிங்க டென்சில் கொப்பேக்கடுவஇ றொகான் தளுவத்தஇ லயனல் பலகல்லஇஎன வீராப்பு பேசி போர்முரசு கொட்டி தமிழினப் படுகொலை புரிந்து தமிழ்மக்களை அடக்க நினைத்தவர்கள் யாவரும் அடங்கிப் போனதும் வரலாறு. இவ்வாறு தமிழருக்கு எதிராக சூழுரைத்தவர்களும்இ வீராப்பு பேசியவர்களுக்கும்இ போர்முரசு கொட்டியவர்களுக்கும் தமிழ்மக்களின் ஒன்றுதிரண்ட பலத்தின் முன்னால் மண்டிபிட்டு இருந்த இடம்தெரியாமல் மறைந்ததுதான் சிங்களத்தின் வரலாறு. இந்த வரிசையில் இன்று பழைய பல்லவிக்கு புதிய மெட்டமைத்து சிங்கள தேசத்திற்கு மங்களம் பாட புறப்பட்டு இருக்கின்றார் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா. சிங்களத்தின் இன்னும் ஒரு சப்புமல் குமரவாக தன்னை நிலைநிறுத்த முயலும் சரத் பொன்சேகா தமிழர் தரப்பைப்பற்றி தப்புக்கணக்கு போடுவதுதான் வேடிக்கை. தமிழ்மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில்இ களம்பல கண்டதாக தன்னைப்பற்றி பீதற்றிக்கொள்ளும் இந்த மேஜர் ஜெனரல் அக்காலங்களில் தானும்இ தனது படையணிகளும்; வாங்கிக்கட்டிக் கொண்டதை மறந்து பிதற்றுவதுதான் பரிதாபம். எவராலுமே எளிதில் அறியப்படமுடியாத புலிப்படையின் எண்ணிக்கையை வெறும் ஜயாயிரம் மட்டுமே என அரிச்சுவடி படிக்கும் இத்தளபதி யாராலுமே வெற்றிபெற முடியாதென மார்தட்டி நின்ற ஆனையிறவு தளத்தில் நின்றும்இ ஜெயசிக்குறுவில் இருந்தும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தலைதெறிக்க ஓடியதை மறந்தது ஏனோ? சுங்கான் ஒன்று பற்றி முடிப்பதற்குள் சாரம் கட்டிய சில நூறு பொடியங்களை அழிப்பேன் என்றும்இ சிங்களப் படையைக் கண்டதும் பயத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவர் படையென்று ஏளனம் செய்தவர்களும் தமிழீழ மக்களிடம் இருந்து கற்ற பாடத்தை புதிய இராணுவத்தளபதி கேட்டுப் படிப்பது அவருக்கும்இ அவரது நாட்டிற்கும் நல்லது. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் பொதுமக்கள் படையினராகிய எமது தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறும் இராணுவம் பின்னர் அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது. சிறுவர்களையும்இ அப்பாவி இளைஞர்களையும் கைது செய்து பின்னர் சுட்டுக்கொன்று விட்டு அவர்களது உடல்களை வீசி எறிகின்றது.சோதனை என்ற பெயரில் இரவில் வீடுகளில் புகுந்த எமது சகோதரிகளையும்இ தாய்மார்களையும் இம்சை செய்கிறது. மக்கள் படையினராகிய நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்மை வெளிப்படுத்தியுள்ளோம். இருந்தும் அப்பாவி பொதுமக்களை கொன்றொழிப்பதன் மூலம் எமது தாக்குதல்களையும் விடுதலைப் உணர்வையும் ஒடுக்கலாம் என சிங்கள இராணுவம் கனவுகாண்கிறது. அது வெறும் பகற்கனவு என்பதை இராணுவம் விரைவில் உணரும். இனிவரும் காலத்தில் எமது தாக்குதல்களை விரிவுபடுத்தவுள்ளோம். எமது தாக்குதல்களுக்கு பயந்து ஒடிவிட்டு பின்னர் வந்து அப்பாவி மக்களை தாக்குவதையும்இ சுட்டுக் கொலை செய்வதையும் கைது செய்வதையும் சிங்கள இராணுவம் நிறுத்தாவிடில் அடுத்தகட்ட நடவடிக்கையாக நாம் காவலரண்களையும் சிறிய முகாம்களையும் தாக்குவோம் என எச்சரிக்கை விடுக்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |