Yarl Forum
எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... (/showthread.php?tid=140)



எதிர்முகம் - ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி... - அருவி - 04-19-2006

ஜெயா டி.வி.யில் கலைஞர் பேட்டி...


<img src='http://img19.imageshack.us/img19/2086/interview3ol.jpg' border='0' alt='user posted image'>



<b>ரபி பெர்ணாட்</b> : வணக்கம்... முன்னாள் முதல்வர் அவர்களே!

<b>கலைஞர் </b>: வருங்கால முதல்வராக நானும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


<b>ரபி</b> : அண்ணா ஈருவாக்கிய தி.மு.க.வில் நீங்கள் வாரிசு அரசியலை...

<b>கலைஞர்</b> (குறுக்கிட்டு) : அண்ணாவின் கனவு ஆது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட குடும்பங்கள், சமுதாயத்தில் உயர வேண்டும் என்பது அவரது லட்சியம் மிக மிக பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் இன்று தி.மு.க. எனும் சமுதாயத்தில் உயர்ந்திருப்பதைப் பார்க்க அண்ணா இல்லையே என ஏங்குகிறேன்.

<b>ரபி </b>: அம்மாவின் ஒராண்டு கால சாதனைகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே!


<b>கலைஞர் </b>: அதை விட இலவச டி.வி. என்ற ஒரே அறிவிப்பு தாக்கத்தை உண்டாக்கியுள்ளதே!

<b>ரபி</b> : டி.வி. கொடுப்பவர்கள் கேபிள் கனெக்ஷனையும் இலவசமாகக் கொடுப்பார்களா என வைகோ கேட்கிறாரே?

<b>கலைஞர்</b> : கொடுப்போம்... அதோடு வைகோவை அடிக்கடி காட்டுகிற ஜெயா டி.வி. நிறுவனத்தையும் மக்களிடம் இலவசமாகக் கொடுப்போம்.
<b>
ரபி </b>: மஞ்சள் பையுடன் வந்த நீங்கள் இன்று பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்களே?

<b>கலைஞர்</b> : மஞ்சள் பையோடு வந்தவன் என்கிறீர்கள். நான் இன்னும் மஞ்சள் துண்டோடு தான் இருக்கிறேன். நான் அப்படியே தான் இருக்கிறேன் என்பதற்கு அதுவே சாட்சி என சோனியா அம்மையாரே தம்பி தயாநிதி மாறனிடம் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், ஜெயலலிதா அங்கே வரும்போதே "பச்சை'யாகத்தான் வந்தாரா என்பதை வைகோ மூலமாகச் சொல்லச் சொல்லுங்கள்.

<b>ரபி </b>: பகுத்தறிவு பேசும் நீங்கள் மஞ்சள் துண்டு அணியலாமா?

<b>கலைஞர்</b> : அதுவும் பகுத்தறிவின் சின்னம்தான் என்பதில் கிஞ்சிற்றும் மாற்றமில்லை. புத்தர் அணிந்தது மஞ்சள் ஆடைதான் என்பதை ஏற்கனவே சொல்லிருக்கிறேன். அண்ணா பிறந்த காஞ்சி எங்கள் புண்ணிய பூமி. அங்கே உள்ள காமாட்சியம்மன் கோயிலில் மஞ்சள், குங்குமம்தான் பக்தர்களுக்குத் தருகிறார்கள். பெரியார் அவர்கள் ஈரோட்டில் மளிகை மண்டி நடத்தியபோது மஞ்சள்தான் அதிகம் விற்றது என்பதை பழைய வரலாறு அறிந்தவர்கள் உணர்வார்கள். எனவே மஞ்சள் என்பது திராவிட இயக்கத்திலிருந்து பிரிக்க முடியாத அடையாளம்.


நன்றி நக்கீரன்


- Vishnu - 04-19-2006

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 04-19-2006

<b>ஜெயலலிதாவே சிறந்த அழகி! </b>


<i><b>ஐஸ்வர்யாராய் ஆச்சரியம்!</b>

அ.தி.மு.க.வை அகில இந்திய கட்சியாக அடையாளப்படுத்த போயஸ் கார்டன் தீவிரமாகியிருப்பதால், நேற்று ஜெ. முன்னிலையில் முன்னாள் அழகி ஐஸ்வர்யாராய் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கேன் பட விழாவுக்கு அணிந்திருந்த ஆடையை விட அசத்தலான ஆடையில் வந்த அவர், ஜெ.வை சந்தித்து விட்டு வெளியே வந்தபின் நமக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

""எங்கள் கொள்கைகள் வெளிப்படையானவை என்பதை இந்திய மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இப்படி வெளிப்படையான ஆடையை அணிந்து வந்திருக்கிறேன். அம்மா இந்த ஆடையைப் பாராட்டினார். "வைரம்' படத்தில் தானும் இப்படி ஆடை அணிந்திருப்பதைப் பற்றி அவர் சொன்னபோது அவரது ஞாபகசக்தி கண்டு மிரண்டு போனேன்.

எப்போதும் அம்மாதான் சிறந்த அழகியாக இருக்கிறார். நாங்களெல்லாம் அவர் முன் சும்மா. அவருடைய நடிப்புத் திறமைக்கு முன்னால் நாங்கள் காணாமல் போய்விடுவோம் என்பதை கடந்த 5 அண்டுகளில் தமிழகம் கண்டிருக்கிறது. அம்மாவின் அழகு பற்றி இந்தியாவிலும் ஹாலிவுட்டிலும் பிரச்சாரம் செய்வேன்'' என்று இரண்டு விரலை ஐஸ்வர்யா காட்ட, பாத்ரூம் இருக்குமிடத்தை அவருக்கு காட்டினார் போயஸ் தோட்டத்து சிப்பந்தி.

<b>ஐஸ்வர்யாராய் அ.தி.மு.க.வில் சேர்ந்திருப்பதால் சிம்ரன் கோஷ்டி கலக்கமடைந்திருக்கிறது என்பது லேட்டஸ்ட் நிலவரம்</b>.</i>

நன்றி நக்கீரன்