![]() |
|
யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி (/showthread.php?tid=1392) |
யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி - Vaanampaadi - 01-14-2006 யாழ். தீவகத்தில் குண்டுவெடிப்பு: ஒரு படையினன் பலி: மூவர் படுகாயம் Written by Paandiyan Saturday, 14 January 2006 யாழ். தீவகத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒரு கடற் படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அப்பகுதியில் சுற்றுக் காவல் நடவடிக்கையில் கடற்படையினர் கடற்படையினர் ஈடுபட்டபோது வீதியாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துள்ளது. இதனால் ஒரு கடற்படையினன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மூன்று கடற்படையினரும் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு இடம்பெற்றதையடுத்து, அப்பகுதியில் மேலதிக கடற்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. Sankathi |