Yarl Forum
கவலையும் கொழுப்பு தான் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: கவலையும் கொழுப்பு தான் (/showthread.php?tid=1371)



கவலையும் கொழுப்பு தான் - SUNDHAL - 01-15-2006

மாரடைப்புக்கு புது காரணம்
கவலை எப்படி கொழுப்பாக மாறும்? மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.

மாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.

ஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம்? இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது. மூச்சு பாதிக்கப்படுகிறது என்கின்றனர். மனம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் வியாதிகளுக்கு "சைக்கோ சொமாட்டிக்' காரணிகள் தான் காரணம் என்று மருத்துவ ரீதியாக சொல்வதுண்டு.

மனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, யாருக்காவது செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று டென்ஷன் ஆவது... ஆகியவை தான் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணம்.

இப்படி மனம் பாதிக்கப்படுவது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மருத்துவ நிபுணர்கள், இது தொடர்பாக 20 ஆரோக்கியமான ஆண், பெண்களை "எம்.ஆர்.ஐ.,' ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.

அப்படி பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் சில புராஜக்ட்கள் தந்து, அதன் மூலம் அவர்கள் மனதில் அழுத்தம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அப்படி அழுத்தம் அதிகமாகும் போது, அது, ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தனர்.

இந்த பரிசோதனைகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, மருத்துவ நிபுணர்கள், "மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும் போது, ரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் ஸ்ட்ரெஸ் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான தெரபிக்கள் முக்கியம் என்று கூறியுள்ளனர்.

அமெரிக்காவில், "யுரேகா அலர்ட்' என்ற வெப்சைட்டில் இது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக "சைக்கோ பிசியாலஜி' அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ThanksBig Grininamalar...


- RaMa - 01-16-2006

தகவலுக்கு ரொம்ப நன்றி சுண்டல்....
கவலைகள் அற்ற மனிதர்களே இல்லை என்பார்கள் ஆகவே எல்லோருக்கும் நிறைய கொழுப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.


- MUGATHTHAR - 01-16-2006

அதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பைக் கரைக்கச் சொல்லி .... எங்கை கேட்டாத்தானே..............


- தூயவன் - 01-16-2006

MUGATHTHAR Wrote:அதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பைக் கரைக்கச் சொல்லி .... எங்கை கேட்டாத்தானே..............

அப்படித் தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் வாரத்தில் ஒருத்தராவது எம்மைச் சீண்டுவதிலேயே நிற்கின்ற போது நாம் என்ன செய்யமுடியும். :wink:


- Danklas - 01-16-2006

ஓய் முகத்தார்,, எத்தனையோ லொள்ளுகளை களத்தில விடுற நீங்க, சின்னப்பு, சாட்றீ, தூயா, ரசிகை, தூயவன், நான் ஏன் களத்தில இருக்கிற சரி அரைவாசி பேருக்கு என்னம் கொழுப்பு குறைஞ்ச மாதிரி தெரியல்லையே.... :evil: :evil: :evil: சும்மா ஆதரம் இல்லாமல் செய்தியை போட்ட சுண்டலுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? :twisted: :twisted: :twisted:


- வினித் - 01-16-2006

தூயவன் Wrote:[quote=MUGATHTHAR]அதுக்குத்தான் சொல்லுறது சும்மா களத்திலை வந்து சண்டை பிடிச்சுக் கொண்டிருக்காமல் நகைச்சுவையாக கதைச்சு மனதை லேசாக்குங்கோ......சா.......கொழுப்பைக் கரைக்கச் சொல்லி .... எங்கை கேட்டாத்தானே..............

அப்படித் தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் வாரத்தில் ஒருத்தராவது

ஒருத்தர் வேற வேற் பெயர்லப்பா( <b>வடிவா புரியும் படி சொல்லனும் தூயவன</b>)


- vasanthan - 01-16-2006

Danklas Wrote:ஓய் முகத்தார்,, எத்தனையோ லொள்ளுகளை களத்தில விடுற நீங்க, சின்னப்பு, சாட்றீ, தூயா, ரசிகை, தூயவன், நான் ஏன் களத்தில இருக்கிற சரி அரைவாசி பேருக்கு என்னம் கொழுப்பு குறைஞ்ச மாதிரி தெரியல்லையே.... :evil: :evil: :evil: சும்மா ஆதரம் இல்லாமல் செய்தியை போட்ட சுண்டலுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? :twisted: :twisted: :twisted:


உங்களுக்கு பக்கத்தில கூப்பிட்டுவைத்துக்கொள்ளுங்கோ தானாயே தண்டனைகிடைக்கும் :wink:


- தூயவன் - 01-17-2006

vasanthan Wrote:
Danklas Wrote:ஓய் முகத்தார்,, எத்தனையோ லொள்ளுகளை களத்தில விடுற நீங்க, சின்னப்பு, சாட்றீ, தூயா, ரசிகை, தூயவன், நான் ஏன் களத்தில இருக்கிற சரி அரைவாசி பேருக்கு என்னம் கொழுப்பு குறைஞ்ச மாதிரி தெரியல்லையே.... :evil: :evil: :evil: சும்மா ஆதரம் இல்லாமல் செய்தியை போட்ட சுண்டலுக்கு என்ன தண்டனை குடுக்கலாம்? :twisted: :twisted: :twisted:


உங்களுக்கு பக்கத்தில கூப்பிட்டுவைத்துக்கொள்ளுங்கோ தானாயே தண்டனைகிடைக்கும் :wink:

சுண்டல் நம்ம கட்சிக்காரன். அவனை டண்பக்கம் சாய்க்க சதி போடுகின்றீரா? :evil: :evil:


- தூயவன் - 01-17-2006

வினித் Wrote:[quote=தூயவன்]

அப்படித் தான் ஆசைப்படுகின்றோம். ஆனால் வாரத்தில் ஒருத்தராவது

ஒருத்தர் வேற வேற் பெயர்லப்பா( <b>வடிவா புரியும் படி சொல்லனும் தூயவன</b>)

அதுவும் சரி தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 01-22-2006

தகவலுக்கு ரொம்ப நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->