![]() |
|
கொழும்பில் இருந்து வெளி வரும் புதிய மாத சஞ்சிகை... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: கொழும்பில் இருந்து வெளி வரும் புதிய மாத சஞ்சிகை... (/showthread.php?tid=1355) |
கொழும்பில் இருந்து வெளி வரும் புதிய மாத சஞ்சிகை... - SUNDHAL - 01-16-2006 வியூகம் என்ற பெயரில் சர்வதேச தரத்திலான மாதச்சஞ்சிகை ஒன்று கொழும் பிலிருந்து வெளிவர ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியல்கள்;, சர்வதேச விவகாரங்கள்;, ஊடகங்கள் பற்றிய தகவல்கள், சூழலியல், சமுக ஆக்கங்கள், நவீன தொழினுட்பங்கள் என பல்வேறு பட்ட தகவல்களை கொண்டதாக இந்த மாத சஞ்சிகையின் முதலாவது இதழ் வெளிவந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசன் மண்டபத்தில் சர்வதேச தரத்திலான மாத சஞ்சிகை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த மாத சஞ்சிகை நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர்கள், அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த நூல் அறிமுக விழாவில் பேராசிரியர். சிவசேகரம், பேராசிரியர் சந்திரசேகரன். மற்றும் முனைவர் குமரகுரபரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிதோடு, ஊடகவியலாளர் நடராஜசிவமும் அங்கு உரை நிகழ்த்தினார். வாசிப்பு வீதம் குறைவடைந்து செல்லும் இந்த நேரத்திலும், இங்கு முற்றிலும் தமிழ் நாட்டு சஞ்சிகைகளின்; ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையிலும், சர்வதேச தரத்திலான அதே நேரம் அறிவு சார்ந்த தரமானதொரு மாதசஞ்சிகையாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Thanks:Sankathi... www.viyukam.com - மேகநாதன் - 01-16-2006 யார் இதனை வெளியிடுகிறார்கள் என்று ஏதேனும் தகவல்கள் மேலதிகமாகத் தெரிந்தால் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்...... யார்,எப் பின்னணி,எத்தகைய நிலைப்பாடு கொண்டவர்கள் என்பவற்றை அறிந்தால் அவர்களது "கருதுக்களின் "தன்மைகளை"ப் புரிந்து "தெளிவு" கொள்லலாம் தரப்பட்ட இணைய முகவரியும் செயற்படவில்லை... |