Yarl Forum
லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் (/showthread.php?tid=1353)



லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் - மேகநாதன் - 01-16-2006

[size=18][b]லெப் கேணல் குட்டிசிறீயின் நினைவுத்தூபி பரந்தனில் திரைநீக்கம் செய்யப்பட்டது


இன்று காலை 7மணியளவில் பரந்தன் சந்தியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல். குட்டிசிறீ அவர்களின் உருவச்சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதி நகுலன் ஏற்றிவைத்தார்.தமிழீழத் தேசியக் கொடியினை குட்சிறீ படையணியின் சிறப்புத்தளபதி கோபால் அவர்கள் ஏற்றிவைத்தார்.இந்த நினைவுத்தூபியினை வடபோர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.
;.இந்நிகழ்வில் சிறப்புரையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர். க.வே பாலகுமாரன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் அங்கு உரை நிகழ்த்துகையில் தமிழர் சேனையின் பல வெற்றிகளுக்க இவ் மோட்டார் படையணியின் பங்கு மிக முக்கியமானது.இவ் நினைவுத் தூபி நினைவுநாள் மிகமுக்கிமானதென்றும் இதே நாளில் தான் நாங்கள் கேணல் கிட்டுவினை இழந்தோம்.1983 ம் ஆண்ட யாழில் இராணுவத்தின் மோட்டார் தாக்குதலுக்கு உட்பட்ட நாம் அந்த வேளையில் தான் குட்சிறீ மோட்டார் தொடர்பான ஓர் வெற்றிளைக் கண்டு பிடித்தார் குட்சிறீயின் பின்னர் தலைவர் அவர்கள் 1990 மார்கழி மாதம் 01ம் திகதி மோட்டார் படையணியினை உருவாக்கினார்.இந்தப் படையணியின் தீச்சுவாலைக்கு எதிரான சாதனைகள் சிங்கள இராணுவம் மட்டுமன்றி உலகமே அறிந்தவை இனியும் இப்படையணியின் வெற்றியை உலகம் அறியத்தான் போகிறது

தகவல் மூலம்- சங்கதி


- மேகநாதன் - 01-18-2006

<b>புலிகளின் போர்த் திறனுக்கு அஞ்சி நிழற்போரை நடத்துகிறது சிங்கள தேசம்: கா.வே.பாலகுமாரன் சாடல் </b>

விடுதலைப் புலிகளின் போர் திறனுக்கு அஞ்சி நேரடிப் போருக்கு வராமல் நிழற்போரை சிங்கள தேசம் நடத்துகிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் சாடியுள்ளார்.


<i><b>இந்திய வல்லாதிக்கத்திற்கு பலியாகிப் போன லெப்.கேணல் குட்டிசிறியின் உருவச்சிலை பரந்தனில் நேற்று முன்நாள் திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கா.வே.பாலகுமாரன் ஆற்றிய சிறப்புரை:</b></i>

தமிழர் சேனை ஒரு மரபு வழிப்படையணியாக தலை நிமிர்ந்து நிற்பதற்கும் மோட்டார் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்திற்கும் அத்திவாரமாக அமைத்தவர் லெப். கேணல் குட்டிசிறி.

தமிழர் சேனையை நாம் நிலைப்படுத்தி பெருவெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். தலைவர் அவர்கள் 2001 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதியின் பின்னர் இரு பெரும் பீரங்கிப் படைகளை உருவக்கினார். கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி, லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் பீரங்கிப் படையணி என அவை உருப்பெற்றன. இவற்றின் உருவாக்கம் நாம் மரபுவழிப்படையணியாக மாற்றமடைந்தமைக்கு சான்றாக அமைந்தன.

எதிர்காலத்தில் எமது போர்வலு, செல்நெறி என்பவற்றை நாம் இந்த இடத்தில் மீட்டிப்பார்க்கின்றோம். எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய பெரிய தளபதி கேணல் கிட்டு வங்கக் கடலில் எரியுண்டபோது எங்கள் நெஞ்சங்கள் எல்லாம் கருகிப்போனது. கோட்டை முற்றுகைச் சமரின் போது பேரூந்துகளில் அலுமினியங்களை எடுத்து திரட்டப்பட்ட வெடிமருந்துகளை பயன்படுத்தி எறிகணை செலுத்தியதை குட்டிசிறி உருவாக்கியிருந்தார். குட்டிசிறியிடம் இருந்த இந்த ஆற்றல் மதிப்பிடமுடியாது.

1995 ஆம் ஆண்டு யாழ். குடாவை விட்டு வன்னிக்கு வந்த பின்னர் ஓயாத அலை -01 நடவடிக்கையில் மோட்டார் பீரங்கிகளை கைப்பற்றியிருந்தோம். அவற்றை வைத்து எமது போராளிகள் மேற்கொண்ட இலக்குத்தவறாத தாக்குதல்கள், உலகத்தின் கண்களை வியக்கவைத்தன.

எங்கள் போராளிகள் போர்த் திறன், அதனால் ஏற்பட்ட அழிவுகளை எல்லாம் கண்டு அஞ்சிப் போருக்கு நகரமுடியாமல் தந்திரமாக நிழற்போரை நடத்தி எங்கள் தேசத்தின் இலக்குகளை சிதறடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது சிங்கள தேசம்.

மீண்டும் பேச்சுக்கள் என்று ஒரு சுற்று வட்டத்தை உருவாக்கும் சதிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எமது மக்கள் சதிகளை வென்று சாவுக்குள் வாழ்பவர்கள். சாவை வாழ்வுக்குள் நுழைப்பதற்கு போராடி வருகின்றோம். சிங்களத்தின் வஞ்சகப் போக்கால் உருவாகப் போகும் அடுத்த கட்ட பாய்ச்சல் இந்தப் பீரங்கிப் படையணிக்கே உரியது. இதனை உலகம் வியந்து பார்க்கப் போகின்றது. வருங்காலம் எங்கள் காலம். எமது தேசத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காலம். வருங்காலத்தில் தெளிவாகவும் உறுதியாகவும் நகரப்போகிறோம். அந்த நகர்வில் பல்வேறு கட்டங்கள் மாறி மாறி உருவாகலாம். ஆனாலும் இலக்கை நோக்கி நாம் விரைவில் நகர்ந்து விடுவோம். சரியான நேரத்தில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் நல்ல முடிவெடுக்கப்படும்.

அப்போதெல்லாம் கேணல் கிட்டுவும் குட்டிசிறியும் ஏனைய மாவீரர்களும் எமது மனங்களில் நிழலாடுவார்கள்.

இன்று இந்தியாவை நாம் எதிரியாகப் பார்க்கவில்லை. ஆனாலும் இந்தியா எம்மை எதிரியாகப் பார்க்கின்றது.

கேணல் கிட்டுவை இந்தியா சதிசெய்து கொன்றுவிட்டது. நாம் இன்று சதிகளை வெல்கின்ற மன நிலைக்கு வரவேண்டும்.

"எங்களை யாராவது இழிநிலையில் வைத்துப் பார்த்து, விடுதலைப் போராட்டத்தின் மகிமையை உணராது வந்தால் நாம் கீழிறங்கிப் போவதற்கு தயாரில்லை" என்று தலைவர் அடிக்கடி கூறுவார்.

இதனை கேணல் கிட்டுவின் சாவுக்கூடாகவும் நாம் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார் கா.வே.பாலகுமாரன்

<i><b>தகவல்மூலம்;- புதினம்</b></i>